•┈┈•◈◉❒﷽❒◉◈•┈┈•
அஷ்-ஷெய்க் அபூ ஹம்ஸா ஹஸன் பின் முஹம்மத் பா ஷுஐப் (حفظه الله) அவர்களிடம் கேட்கப்பட்டது:
📝 கேள்வி: 1️⃣
எனது வங்கிக் கணக்கில் சில வட்டிப் பணம் சேர்ந்து உள்ளது. அதை தர்மமாக வழங்க வேண்டும் என்ற நோக்கில் அல்லாமல், அதிலிருந்து விடுபட வேண்டும் என்ற நோக்கத்தில் வெளியே எடுத்து, இந்தப் பணத்தைத் தேவையுள்ள ஒரு ஏழை நபருக்கு வழங்குவது அனுமதிக்கப்பட்டதா?
அல்லாஹ் உங்களுக்கு பரக்கத் செய்வானாக.
📖 பதில்:
ஆம், (அவ்வாறு செய்வது) அனுமதிக்கப்படுகிறது.
https://t.me/Bashuaibtamilhttps://t.me/Bashuaib/8798•┈┈•◈◉◉◈•┈┈• •┈┈•◈◉◉◈•┈┈•
📝 கேள்வி: 2️⃣
கண்ணியத்திற்குரிய ஷெய்க் அவர்களே! நான் மார்க்கத்திற்கு முரணான (ஹராமான) முறையில் பணத்தைப் பெற்றுள்ளேன். அந்தப் பணத்திலிருந்து விடுபடும் நோக்கத்துடன், அதைத் தேவையுள்ள ஒருவருக்கு வழங்கலாமா?
📖 பதில்:
ஆம். அந்த (பணத்திலிருந்து விடுபடும்) நோக்கத்துடன் வழங்கலாம்.
அல்லாஹ்வே நன்கறிந்தவன்.
https://t.me/Bashuaib/8006•┈┈•◈◉◉◈•┈┈• •┈┈•◈◉◉◈•┈┈•
📝 கேள்வி: 3️⃣
வட்டியின் மூலம் கிடைத்த பணத்தைப் பயன்படுத்தி பள்ளிவாசல் கட்டுவது அனுமதிக்கப்படாததின் காரணம் என்ன?
📖 பதில்:
அந்தக் கட்டுமானம் தர்மம் (ஸதகா) செய்யும் நோக்கத்தில் இருந்தால், அது அனுமதிக்கப்படாது. ஏனெனில் (நபி ﷺ அவர்கள் கூறியதாக வரும் ஹதீஸில்):
إِنَّ اللهَ طَيِّبٌ لَا يَقْبَلُ إِلَّا طَيِّبًا
“நிச்சயமாக அல்லாஹ் தூய்மையானவன்; அவன் தூய்மையானதைத் தவிர வேறு எதையும் ஏற்றுக்கொள்ள மாட்டான்.”
ஆனால், ஒருவர் தவ்பா செய்த பிறகு, வட்டிப் பணத்திலிருந்து விடுபடும் நோக்கத்தில் அதைப் பயன்படுத்தி பள்ளிவாசல் கட்டினால், சில அறிஞர்கள் அதை அனுமதித்துள்ளனர்.
அல்லாஹ்வே மிக நன்கறிந்தவன்.
https://t.me/Bashuaib/7759•┈┈•◈◉◉◈•┈┈• •┈┈•◈◉◉◈•┈┈•
📝 கேள்வி: 4️⃣
ஒருவர் கேட்கிறார்:
மறந்துவிட்ட வங்கிப் பலன்கள் (வட்டிப் பணம்) மூலம் கிடைத்த ரிபா பணத்திலிருந்து விடுபடும் நோக்கத்தில், தேவையுள்ள எனது தாய்க்கு அந்தப் பணத்தைக் கொடுக்கலாமா? மேலும், நான் அவருடன் ஒரே வீட்டில் வசித்து வருகிறேன்.
📖 பதில்:
அனுமதிக்கப்படாது. அல்லாஹ்வே நன்கறிந்தவன்.
ஏனெனில், அவருடைய செலவுகளைப் பொறுப்பேற்க வேண்டியவர் நீங்களே.
இந்த வட்டிப் பணத்திலிருந்து விடுபடும்போது, தனது பராமரிப்புப் பொறுப்பில் (நஃபகா) உள்ளவர்களுக்கு வழங்காமல், வேறு தேவையுள்ளவர்களுக்கு வழங்க வேண்டும்.
https://t.me/Bashuaib/7286•┈┈•◈◉◉◈•┈┈• •┈┈•◈◉◉◈•┈┈•
📝 கேள்வி: 5️⃣
கடன் சுமையில் உள்ள ஒருவருக்கு, அவருடைய கடனை அடைப்பதற்காக வட்டிப் பணத்தை வழங்குவது அனுமதிக்கப்படுமா?
அல்லாஹ் உங்களுக்கு பரக்கத் செய்வானாக.
📖 பதில்:
ஆம், அனுமதிக்கப்படுகிறது.
அந்தப் பணத்தை தன்னிடமிருந்து அகற்றிவிடும் நோக்கத்தில் அவருக்கு வழங்கலாம்.
https://t.me/Bashuaib/7284•┈┈•◈◉◉◈•┈┈• •┈┈•◈◉◉◈•┈┈•
📝 கேள்வி: 6️⃣
ஒரு பெண் வட்டிப் பணத்தைப் பெற்றுள்ளார். அதிலிருந்து விடுபட விரும்புகிறார். அவருடைய சகோதரர் தேவையுள்ளவராக இருக்கிறார். அவர் அந்தப் பணத்தைத் தனது சகோதரருக்கு வழங்கலாமா?
📖 பதில்:
ஆம், அனுமதிக்கப்படுகிறது.
ஆனால் அது தர்மம் (ஸதகா) செய்யும் நோக்கத்தில் அல்ல; அந்த வட்டிப் பணத்திலிருந்து தன்னை விடுவித்துக்கொள்ளும் நோக்கத்துடன்.
https://t.me/Bashuaib/5942•┈┈•◈◉◉◈•┈┈• •┈┈•◈◉◉◈•┈┈•
📝 கேள்வி: 7️⃣
ஒருவரிடம் ஹராமான முறையில் கிடைத்த பணத்திலிருந்து விடுபட அவர் விரும்புகிறார். அந்தப் பணத்தைப் பயன்படுத்தி, மருந்துகள் தேவைப்படும் ஒரு மார்க்கக் கல்வியைத் தேடும் மாணவருக்கோ அல்லது அவரது குடும்பத்தினரில் ஒருவருக்கோ மருந்துகளை வாங்கிக் கொடுக்கலாமா?
📖 பதில்:
ஆம். பிற மக்களின் நலனுக்காகப் பயன்படுத்தி, அந்தப் பணத்திலிருந்து அவர் விடுபடலாம்.
https://t.me/Bashuaib/5708•┈┈•◈◉◉◈•┈┈• •┈┈•◈◉◉◈•┈┈•
📝 கேள்வி: 8️⃣
வட்டி மூலம் கிடைத்த ஹராமான பணத்திலிருந்து விடுபடும் நோக்கத்தில், அரசுப் பள்ளிக்காக நூலகத்தில் புத்தக அலமாரிகளை அமைத்துக் கொடுப்பது அனுமதிக்கப்படுமா?
அல்லாஹ் உங்களுக்கு நற்கூலி வழங்குவானாக.
📖 பதில்:
ஆம், அனுமதிக்கப்படுகிறது.
அல்லாஹ்வே நன்கறிந்தவன்.
https://t.me/Bashuaibtamilhttps://t.me/Bashuaib/5597https://whatsapp.com/channel/0029VbBVYA8Jpe8bqc69OH3x#Riba_interest
#getting_rid_of_riba
➖➖➖➖➖➖➖➖➖➖➖
✍️ தமிழாக்கம்:
அபூ மர்யம்
முஹம்மது கஃபீல் அல்-ஹிந்தி (غفر الله له وهدى والديه)