OLBN News ™ (Tamil News In 360°) தமிழ் செய்திகள் 📰 Telegram channel photo

OLBN News ™ (Tamil News In 360°) தமிழ் செய்திகள் 📰

@olbnnewsPublic Channel

OLBN News ™ (Tamil News In 360°) தமிழ் செய்திகள் OLBN News - Every Day INTERESTING News, Expose, Facts, Fun, Politics, Developments, Inspiring Stories, Travel, Science & History updates of National & International. More Links: @TGLinksOLBN

அரசியல்தமிழ்இந்தியா

208

Last views

1.9k (1,872 subscribers)
உறுப்பினர்
—
Rating
51
Total Posts
Oct 19, 2026, 2:40 PM
புதுப்பிக்கப்பட்டது
Oct 10, 2025
Created
Stats

நீங்கள் தமிழில் உள்ளடக்கத்தைப் பார்க்கிறீர்கள். வேறு மொழிகளில் உள்ள உள்ளடக்கத்தைப் பார்க்க தளத்தின் மொழியை மாற்றவும்.

Channel Information

Channel Information
Channel NameOLBN News ™ (Tamil News In 360°) தமிழ் செய்திகள் 📰
Username@olbnnews
Categoryஅரசியல்
Languageதமிழ்
Countryஇந்தியா
உறுப்பினர்1,872
Channel TypePublic Channel
Created10 அக்., 2025
Last Updated19 அக்., 2026 • 4 நாட்களுக்கு முன்
StatusActive

தரவரிசை

உலகளாவிய தரவரிசை
#393600-784
மொழி தரவரிசை
#1164-3
வகை தரவரிசை
#8948-17

சந்தாதாரர் வளர்ச்சி

மொத்தம்: 1.9K30 Days growth: -522.7%
09/2009/2509/3010/0510/1010/1510/19
சந்தாதாரர் வளர்ச்சி - 30 Days
DateSubscribers
20:09:20261,924
21:09:20261,924
22:09:20261,924
23:09:20261,924
24:09:20261,917
25:09:20261,917
26:09:20261,917
27:09:20261,917
28:09:20261,917
29:09:20261,917
30:09:20261,917
01:10:20261,917
02:10:20261,917
03:10:20261,917
04:10:20261,917
05:10:20261,917
06:10:20261,917
07:10:20261,917
08:10:20261,917
09:10:20261,917
10:10:20261,917
11:10:20261,917
12:10:20261,882
13:10:20261,882
14:10:20261,882
15:10:20261,882
16:10:20261,882
17:10:20261,882
18:10:20261,882
19:10:20261,872
சந்தாதாரர் வளர்ச்சி - Weekly
DateSubscribers
Week of 06:04:20262,069
Week of 13:04:20262,068
Week of 20:04:20262,060
Week of 27:04:20262,060
Week of 04:05:20262,040
Week of 11:05:20262,040
Week of 18:05:20262,040
Week of 25:05:20262,010
Week of 01:06:20262,010
Week of 08:06:20261,993
Week of 15:06:20261,993
Week of 22:06:20261,997
Week of 29:06:20261,997
Week of 06:07:20261,997
Week of 13:07:20261,975
Week of 20:07:20261,968
Week of 27:07:20261,956
Week of 03:08:20261,956
Week of 10:08:20261,940
Week of 17:08:20261,940
Week of 24:08:20261,945
Week of 31:08:20261,941
Week of 07:09:20261,941
Week of 14:09:20261,924
Week of 21:09:20261,917
Week of 28:09:20261,917
Week of 05:10:20261,917
Week of 12:10:20261,882
Week of 19:10:20261,872
சந்தாதாரர் வளர்ச்சி - Monthly
DateSubscribers
April 20262,060
May 20262,010
June 20261,997
July 20261,956
August 20261,945
September 20261,917
October 20261,872
சந்தாதாரர் வளர்ச்சி - Yearly
DateSubscribers
20261,872

Top 10 posts

Most viewed posts from this channel

By views
  1. #1தீவிரமடையும் SIR பணிகள்! வீடு பூட்டியிருந்தால் என்னவாகும்? - முழு விவர2.7K
  2. #2வாக்காளர் வழிகாட்டி (Voter Vazhikatti) அறிமுகம்!1.8K
  3. #3⚠️ இது ஒரு முன்னெச்சரிக்கை பதிவு!1.7K
  4. #4தமிழ்நாடு சட்டசபை தேர்தல்!1.7K
  5. #5?q=%23BREAKINGNEWS1.7K
  6. #6இனி பயம் வேண்டாம்1.6K
  7. #7Post #324811.5K
  8. #8ஓட்டு போடுவது எப்படி?1.5K
  9. #911 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம்!@OLBNNews11 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் 1.4K
  10. #10Tom & Jerry - Mr. Bean - Shin Chan Videos 😍1.4K

சமீபத்திய இடுகைகள்

"தன்னைத் தானே புறக்கணிப்பதன்" ஆபத்தான அறிகுறிகள்

5-வது இடம்: கழிவறைக்குச் செல்வதைத் தள்ளிப்போடுதல்
・செல்ல வேண்டும் என்று தோன்றினாலும் "பிறகு பார்த்துக்கொள்ளலாம்" என்று நினைப்பது
・செய்து கொண்டிருக்கும் வேலையை நிறுத்த விருப்பமின்மை
・தெரியாமலேயே, அடக்க முடியாத எல்லை வரை அதைத் தள்ளிப்போடுவது

4-வது இடம்: குளிப்பதைத் தவிர்த்தல்
・எப்படிப் பார்த்தாலும் குளிப்பது ஒரு பெரிய வேலையாகத் தெரிவது
・பல் துலக்குவதைக் கூடத் தள்ளிப்போடுவது
・உடை மாற்றுவதற்குக்கூடச் சக்தியில்லாமல், ஆர்வமில்லாமல் உடுத்திய உடைகளையே மீண்டும் உடுத்துவது.

3-வது இடம்: அரைகுறையான அல்லது கவனக்குறைவான உணவுமுறை

・வயிறு பசியால் உறுமினாலும், சாப்பிடுவது ஒரு பெரிய சிரமமாகத் தெரிவது
・சரியான காலை உணவை எடுத்துக்கொள்ளாமல், காபி, டீயை மட்டுமே நம்பியிருப்பதால் சத்துணவு குறைபாடு ஏற்படுவது.
・குடும்பத்தினருக்குச் சிறப்பாகச் சமைத்தாலும், தனக்கு என்று வரும்போது சுருக்கிக்கொள்வது

2-வது இடம்: உடல் அல்லது மனதின் சோர்வு சமிக்ஞைகளைப் புறக்கணித்தல்

・மிகவும் சோர்ந்து போயிருந்தாலும், "இன்னும் கொஞ்சம் சமாளித்துவிடலாம்" என்று நினைப்பது
・வலி இருக்கிறதா? அதைக் கவனிப்பது எரிச்சலூட்டும் விஷயமாக இருப்பதால் அதைப் புறக்கணிப்பது
・மருத்துவமனைக்குச் செல்வதையோ அல்லது பரிசோதனைகளையோ காலவரையின்றித் தள்ளிப்போடுவது

1-வது இடம்: உங்கள் சொந்த உணர்வுகளை முற்றிலுமாகப் புறக்கணித்தல்

・ஒரு 'மொஜிடோ' காபி குடிக்க ஆசைப்பட்டாலும், "இது ஆடம்பரமான செலவோ?" என்று நினைத்துத் தவிர்ப்பது
・தனக்காகச் செலவிடும் சில செலவை கூட "வீண் செலவு" என்று நினைப்பது.
・"இது எனக்கு மிகவும் பிடித்தது" என்ற எண்ணம் மாறி, "இது தேவையில்லை," என்ற மனநிலைக்கு மாறுவது

உங்களுக்கும் இது போன்ற அனுபவங்கள் இருக்கிறதா?

https://t.me/OLBNNews
208006
இந்திய மொழிகள் அனைத்தையும் ஒரு சவாலுக்கு அழைக்கிறேன்!

கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்தப் பட்டியலை, இதே போன்று உங்கள் மொழியில் உருவாக்கி வெளியிட முடியுமா?

துணிந்து முயற்சிக்கும் மொழிகளுக்கு — வெற்றி பெறாவிட்டாலும் — ஆறுதல் பரிசு வழங்க நாங்கள் தயாராக இருக்கிறோம்! 😄

சமஸ்கிருதத்திற்கும் தைரியம் இருந்தால் இந்த CHALLENGE-ல் கலந்துகொள்ளலாம்! 😉

JUST READ THE WORDS BELOW AND KNOW WHY TAMIL IS A CLASSICAL LANGUAGE.

ஏன் தமிழ் ஒரு செம்மொழி?

கீழே உள்ள தமிழ்ச் சொற்களை வாசித்து, அவற்றின் சொல்வளத்தையும் நுண்மையையும் ரசித்துப் பாருங்கள்.

தமிழ்ப் புவியியல் | Tamil Geography 🌍

River — ஆறு
Delta — கழிமுகம் / வடிநிலம்
Strait — நீரிணை
Isthmus — நிலவிணை
Archipelago — தொகுதீவு
Island — தீவு
Sea — கடல்
Ocean — மாக்கடல் / பெருங்கடல்
Beach — கடற்கரை
Lagoon — காயல்
Cove — சிறுகுடா
Gulf — வளைகுடா
Bay — விரிகுடா
Peninsula — குடாநாடு / குடாநிலம்
Cliff — ஓங்கல்
Hill — குன்று
Mountain — மலை
Forest — காடு
Jungle — அடவி
Plateau — மேட்டுநிலம்
Canyon — ஆற்றுக்குடைவு
Valley — பள்ளத்தாக்கு
Cave — குகை
Desert — பாலை
Oasis — பாலைச்சோலை
Dune — மணற்குன்று
Mesa — மேடு
Prairie — பெருவெளி
Plain — சமவெளி
Lake — ஏரி
Pond — பொய்கை
Waterfall — அருவி
Stream — ஓடை
Geyser — ஊற்று
Canal — கால்வாய்
Swamp — சதுவல்
Marsh — சதக்கல்
Volcano — எரிமலை
Glacier — சறுக்கு பனிக்கட்டி ஆறு
Tundra — பனிவெளி
Iceberg — பனிப்பாறை
Cape — முனை
Fjord — இடுக்கேரி
Spring — ஊற்று
Hot Spring — சுடுநீர் ஊற்று

ஒரு மொழியின் தொன்மையும் செழுமையும் அதன் இலக்கியத்தில் மட்டுமல்ல; இயற்கையையும் உலகையும் நுணுக்கமாகப் பெயரிட்டு விளக்கும் அதன் சொல்வளத்திலும் வெளிப்படுகிறது.

— தோழர் முத்துகிருஷ்ணன்

https://t.me/OLBNNews
332001
Photo
வங்கிகள் பெயர் மாற்றம்!

இந்தியாவின் 9 தேசிய வங்கிகள் இனி பெயர் மாற்றம் செய்யப்பட்டு 3 வங்கிகளாக இணைக்கப்பட்டு செயல்படும் என மத்திய அரசு அறிவிப்பு.

https://t.me/OLBNNews
679003
🚨 UPI-ல ₹2,000க்கு மேல Payment பண்ணினா இனிமே Charge வருமா?

October 15 முதல் UPI transactions-க்கு புதிய charges வரப்போகிறது என்ற செய்தியைப் பார்த்ததும்… “அடப்பாவிகளா… UPI-க்கும் Charge கொண்டு வந்துட்டாங்களா?” 😄 ன்னு நினைக்காதீங்க.

மேட்டர் அது இல்லை.

முதல்ல ஒரு முக்கியமான விஷயத்தை புரிஞ்சுக்கோங்க.

👉 நீங்க ஒரு Customer ஆ UPI மூலம் Payment பண்ணுவதற்கு எந்த Charge ம் கிடையாது. புதுசா வந்துருக்குறது MDR – Merchant Discount Rate.

அதாவது சில UPI payments க்கு Merchant / Business தான் இந்த charge அ கட்ட வேண்டும். Customer அல்ல.

சரி… என்ன மாறப்போகுது?

👨‍👩‍👧 ஒருத்தருக்கு ஒருத்தர் பணம் அனுப்புறீங்களா?

நண்பருக்கு ₹5,000 அனுப்புறீங்க. மனைவிக்கு ₹20,000 அனுப்புறீங்க. உங்களுடைய இன்னொரு Bank Account க்கு ₹50,000 transfer பண்ணுறீங்க. அதுக்கெல்லாம் Charge ₹0.

இதுக்கு பேரு Person-to-Person (P2P) transaction. Amount எவ்வளவாக இருந்தாலும் permitted limits (ஒரு நாளைக்கு ₹1,00,000) க்குள் P2P UPI transfer தொடர்ந்து Free.

🛒 Shop / Business-க்கு Payment?

இங்கதான் மாற்றம் வருகிறது. Normal Merchant UPI transaction ₹2,000க்கு மேல் இருந்தால்: MDR = 0.4% வரும்.

உதாரணமா:

₹3,000 Payment → MDR ₹12
₹50,000 Payment → MDR ₹200

₹75,000 மற்றும் அதற்கு மேல ன்னா - Maximum MDR = ₹300.

₹1 லட்சம் payment பண்ணினாலும் 0.4% கணக்கில் ₹400 வராது. Maximum ₹300 மட்டுமே.

ஆனா மறுபடியும் சொல்றேன்… இந்த பணத்தை Customer கொடுக்க வேண்டியதில்லை. Merchant தான் செலுத்த வேண்டும். Merchant இதை Customer மேல தனியாக UPI charge என்று போடவும் முடியாது.

🥬 சின்ன கடைக்காரர்களுக்கு என்ன ஆகும்?

இதுவும் முக்கியம். P2PM category ல் இருக்கும் small merchants, பொதுவாக மாதத்திற்கு ₹1 லட்சம் வரை UPI QR மூலம் பெறுபவர்கள், Zero MDR protection ல் தொடர்கிறார்கள்.

அதனால், ₹2,001 Payment வந்தாலே எல்லா கடைக்காரர்களுக்கும் Charge ன்னு புரிஞ்சிக்காதீங்க.

அப்படி கிடையாது.

📈 Mutual Fund / Shares வாங்க UPI பயன்படுத்தினால்?

இதுக்கு தனி rate. Mutual Funds, Securities, Stockbrokers போன்ற Capital Market transactions க்கு:

MDR = 0.02%
Maximum: ₹300 per transaction.

இதுவும் investor க்கு போடப்படும் charge அல்ல; applicable merchant/entity க்கான MDR - இந்த சார்ஜ் எல்லாம் Mutual fund ஓட expense ratio ல include ஆயிடும். Shares வாங்க நீங்க UPI பயன்படுத்தினா, இத கண்டிப்பா நீங்க தான் குடுத்தாவனும்.

💰 அப்போ SIP AutoPay க்கெல்லாம்?

இங்க ஒரு நல்ல செய்தி. UPI AutoPay / Mandate மூலம் செய்யப்படும் recurring payments - SIP எல்லாம் prescribed MDR charge க்கு கீழ வராது.

அதாவது உங்கள் monthly SIP AutoPay ல இந்த சார்ஜ் வரவே வராது.

🚆 Insurance, Fuel போன்ற Payments?

Railways, Telecom, Insurance, Fuel உள்ளிட்ட குறிப்பிட்ட categories க்கு ₹2,000க்கு மேல் payment பண்ணினா percentage கணக்குல MDR வராது. இதுக்கு Flat ஆ ₹5 MDR க்கு சார்ஜ் பண்ணுவாங்க.

Public utilities போன்ற designated categories க்கும் இந்த concessional ₹5 structure பொருந்தும். இதையும் Merchant தான் bear பண்ண வேண்டும். Customer அல்ல.

📱 Google Pay / PhonePe மாதிரி UPI Apps தனியா Platform Fee போடலாமா?

இந்த framework-ன் கீழ் UPI App providers, UPI payment-க்கு Platform Fee அல்லது வேறு payment charge போடக்கூடாது.

📅 இது எப்போலேர்ந்து பழக்கத்துக்கு வரும்?

இந்த புதிய MDR framework: 15 October 2026 முதல் அமலுக்கு வருகிறது.

🤔 அப்ப நமக்கு என்ன மாற்றம்?

நீங்க ஒரு சாதாரண UPI User என்றால்… பெரிய மாற்றம் எதுவும் இல்லை.

Friend-க்கு Money Transfer → FREE ✅
Family-க்கு Money Transfer → FREE ✅
Shop-ல் QR Scan செய்து Payment → Customer-க்கு FREE ✅
SIP via UPI AutoPay → prescribed MDR இல்லை ✅
₹2,000க்கு மேல் Merchant Payment → Customer-க்கு Charge இல்லை ✅

முக்கியமான விஷயம்…

News headline: “UPI payments above ₹2,000 will be charged.”

இதை மட்டும் படிச்சா, ₹5,000 UPI பண்ணினா என்னோட Account-லிருந்து extra charge போயிடுமா? ன்னு நினைக்கலாம்.

அதுதான் இல்லை.

சரியான புரிதல்: Selected Merchant UPI transactions above ₹2,000க்கு MDR வருகிறது. அதையும் Customer அல்ல, Merchant தான் செலுத்துகிறார்.

அதனால் October 15க்கு பிறகு ₹2,001 UPI Payment பண்ணும்போது… “ஐயையோ… Charge போயிடுமோ!”

என்று பயப்பட வேண்டாம் மக்களே!!! 😄🙏🙏🙏

ஒகேவா 👍👍👍
847004
டீமானிடைசேஷன் பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் பொழுது மக்களை அலைக்கழித்த ஆரிய அடாவடி ஒன்றியம் அடுத்ததாக SIR பெயரில் நம்மை அலைக்கழிக்கிறது!

கவனமாக கீழ்க்கண்ட பதிவை படித்து கவனத்தில் கொள்ளுங்கள்!

“தேர்தல் ஆணையம் அங்கீகரித்த BLA 2 என்ற முறையில் இதை பதிவிடுகிறேன்.

SIR என்னும் சிறப்பு தீவிர வாக்காளர் சரிபார்ப்பு பணி பற்றிய விளக்கம்.

சென்ற வருடம் (2024) நாடாளுமன்ற தேர்தலுக்காக தயாரிக்கப்பட்ட வாக்காளர் பட்டியலின்படியே படிவங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

எனவே, வாக்காளர் பட்டியலில் உள்ள அனைவருக்கும் படிவங்கள் வீடு தேடி வரும். அதை யாரும் வாங்கத் தவறி விடாதீர்கள்.

ஒரு வேளை, நீங்கள் அந்த முகவரியில் இப்போது இல்லையென்றால்,

அந்த முகவரியில் தற்போது குடியிருப்போருக்கு உங்கள் குடும்பத்தினரின் பெயர்களை தெரிவித்து, படிவங்களை அவர்கள் வாங்கி வைக்கும்படி கோரலாம்.

அல்லது அந்த முகவரிக்கான வாக்குச்சாவடி BLO வை தொடர்பு கொண்டு, முகவரி மாற்றத்தை தெரிவித்து படிவங்களை நேரில் சென்று பெற்றுக் கொள்ளலாம்.

படிவத்தின் முன்பக்கம் மேலே BLO பெயரும், அவரது மொபைல் நம்பரும் அச்சடித்து இருக்கும்.

அந்த நம்பரில் உங்கள் BLO வை தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான விபரங்களை அவர்களிடம் பெற்றுக் கொள்ளலாம்.

படிவம் பூர்த்தி செய்வதில் ஏற்படும் சந்தேகங்களையும் அவர்களிடமோ அல்லது BLA 2 விடமோ கேட்கலாம்.

2004 க்கு பிறகு வாக்களித்தவர்கள் அவர்களது தாய் தந்தை குறித்த 2004 வாக்காளர் பட்டியலில் உள்ள விவரங்கள் கண்டிப்பாக அளிக்க வேண்டும்.

//விண்ணப்ப படிவம் ஒவ்வொருவருக்கும் இரண்டு பிரதிகள் தருவார்கள்//

//அதை Xerox எடுத்து சமர்ப்பிக்க முடியாது//

எனவே
//இரண்டு பிரதிகளையும் அடித்தல், திருத்தல் Over Writing இல்லாமல் நேர்த்தியாக பூர்த்தி செய்ய வேண்டும்//

//வெள்ளை நிற பின்னணி (White Background) கொண்ட தற்போதைய வண்ண புகைப்படம் ஒட்ட வேண்டும்//

பூர்த்தி செய்த இரண்டு பிரதிகளையும் ஜெராக்ஸ் அல்லது தெளிவாக போட்டோ எடுத்துக் கொள்ளுங்கள்.

இது எதற்காக என்றால், உங்கள் படிவத்தில் விபரங்கள் தெளிவாக குறிப்பிடப்படவில்லை என்ற காரணத்தை கூறி, விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டு, வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெறாமல் போனால், முறையீட்டின் போது தேவைப்படும்.

//இரண்டு பிரதிகளையும் BLO விடம் திரும்ப ஒப்படைக்கும்போது, அதில் ஒன்றில் BLO சீல் மற்றும் Sign போட்டு, ஒரிஜினல் படிவத்தை பெற்றுக் கொண்டதற்கான ஒப்புகையாக அதை நமக்கு தருவார். அதையும் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும். (இது ரொம்ப முக்கியம்)//

உங்கள் முகவரி மாறி இருந்தால், Form 8 என்னும் படிவம் 8 ஐ BLO விடம் கேட்டுப் பெற்று, அதையும் பூர்த்தி செய்து, நகல் எடுத்து வைத்துக் கொண்டு, இரண்டு படிவங்களையும் தற்போதைய முகவரிக்கான BLO விடம் வழங்கி, ஒப்புதல் பெற்று வைத்துக் கொள்ளவும்.

படிவம் வழங்கிய பழைய முகவரிக்கான BLO விடம் கொடுக்கத் தேவையில்லை.

அதுபோலவே, புதிய வாக்காளர் சேர்க்க வேண்டியிருந்தால், Form 6 ஐ BLO விடம் கேட்டுப் பெற்று, அதையும் பூர்த்தி செய்து கொடுக்கவும்.

படிவம் பூர்த்தி செய்வதில் குழப்பமோ சந்தேகமோ ஏற்பட்டால அங்கீகரிக்கப்பட்ட கட்சி BLA 2 வை தொடர்பு கொள்ளவும்.

அவர்களுக்கு உங்களைப்பற்றிய அனைத்து விவரங்களும் தெரியும்.

அவர்கள் ஒரு நாளைக்கு ஐம்பது படிவங்கள் வரை நிரப்பி உரிய அதிகாரிகளிடம் சமர்ப்பிக்க அதிகாரம் பெற்றவர்கள்”
818000
மக்களே உங்கள் பெற்றோரின், பெரியவர்களின் 2002 வாக்காளர் பட்டியலைப் பார்க்க

http://erolls.tn.gov.in/electoralsearc… இதில் EPIC அல்லது பெயரை கொடுத்து தேடலாம்.

அதில் AC Name, Part No, Serial No என அனைத்து தரவுகளும் வரும்.

http://erolls.tn.gov.in/Rollpdf/SIR_20… இதில் வாக்காளர் பட்டியலை பார்க்கலாம்!
861000
தமிழ்நாட்டுக்கு அறிவிக்கப்பட்டிருக்கும் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த (SIR) விதியின்படி, 2002ம் ஆண்டில் நடத்தப்பட்ட SIR-ல் உங்களின் பெயரோ உங்களின் பெற்றோரின் பெயரோ இருந்தால் ஆவணங்கள் ஏதும் தேவையில்லை.

இதை எங்கிருந்து தெரிந்து கொள்வது?
2002ம் ஆண்டில் நீங்கள் வாக்களித்த சட்டமன்ற தொகுதி மற்றும் வாக்குச்சாவடி நினைவில் இருந்தால் http://erolls.tn.gov.in/Rollpdf/SIR_20… என்கிற தளத்தில் பதிவிடவும். அதற்கென தோன்றும் வாக்காளர் பட்டியலில் உங்களின் பெயர் இருக்கிறதா என பாருங்கள். இருந்தால் அப்போதைய வாக்காளர் எண், வாக்குச்சாவடி முதலிய விவரங்களை குறித்து வைத்துக் கொள்ளுங்கள்.

கண்டெடுத்த வாக்காளர் எண்ணை http://erolls.tn.gov.in/electoralsearc… தளத்தில் பதிவிட்டு பாருங்கள். உங்களின் தரவு இத்தளத்தில் வருவதை உறுதி செய்து கொள்ளுங்கள்.

ஒருவேளை SIR-2002-ல் பெயர் இல்லையெனில் தேர்தல் ஆணையம் பட்டியலிட்டிருக்கும் 11 சான்றாவணங்களில் ஏதேனும் இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.
மேலும் தரவுகளுக்கு http://voters.eci.gov.in/, http://elections.tn.gov.in/ElectoralRolls… போன்ற தளங்களை நாடுங்கள்!
659000
Video
SIR சிறப்பு வாக்காளர் சீர்திருத்த பாரம் எப்படி எழுதுவது என்பதை பற்றி தெளிவான வீடியோ!

அனைவர்களும் கண்டிப்பாக பார்த்து பயன் பெற்று தங்கள் வாககளிக்கும் உரிமையை உறுதிப்படுத்திகொள்ள வேண்டுகிறோம் ...
பொது நலன் கருதி!
488000
Photo1/2
வாக்காளர் வழிகாட்டி (Voter Vazhikatti) அறிமுகம்!

தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அலுவலகத்தின் புதிய டிஜிட்டல் முயற்சி — தேர்தல் நாளில் ஒவ்வொரு வாக்காளருக்கும் வழிகாட்ட.

👉 இங்கே பயன்படுத்திப் பாருங்கள்: votervazhikatti.tn.gov.in
👉 உங்கள் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் பகிருங்கள் 👨‍👩‍👧‍👦
👉 ஏப்ரல் 23 அன்று வாக்களிக்க வாருங்கள் 🗓️

இந்த தளத்தை தொடர்ந்து மேம்படுத்தி வருகிறோம் — உங்கள் கருத்துகள் அதை இன்னும் சிறப்பாக்கும். ✨

📲 பரிந்துரைகள் அல்லது உதவி வேண்டுமா?
WhatsApp-ல் எங்களை தொடர்பு கொள்ளுங்கள்: +91 73583 81950 💬

தேர்தல் திருவிழா! தமிழகத்தின் பெருவிழா!

#MyVoteMyRight #VoteForDemocracy #ivote4tn #100PercentVoting #GoVote #EveryVoteCounts #ECI #TNElections2026
1,810005
குடும்ப உறவை சிதைக்கும் வாழ்க்கை துணையின் 10 ஆபத்தான வார்த்தைகள்! - OLBN News

1. நீ ரொம்பத்தான் ஓவரா ரியாக்ட் பண்ற: இந்த வார்த்தைகளைக் கேட்பதற்கு சாதாரணமாகத் தோன்றலாம். ஆனால், இது அவர்களின் உணர்வுகளை காயப்படுத்துவதாக அமையும். சரியாக அவர்களுக்கு பிறர் உணர்வுகளை மதிக்க தெரிவதில்லை; சாதாரண விஷயத்தைக் கூட பூதாகரமாக்கிப் பார்ப்பது போன்ற பிம்பத்தைத் தருகிறது இந்த வாக்கியம். எனவே, இதை அவர்களிடம் சொல்லக் கூடாது.

2. ஏன் எப்பவுமே என்ன புரிஞ்சிக்க மாட்டேங்குற: ஏதாவது ஓரிரண்டு சந்தர்ப்பத்தில் வாழ்க்கைத் துணை உங்களைப் புரிந்து கொள்ளாமல் நடந்திருக்கலாம். ஆனால், இந்த வாக்கியம் எப்போதுமே உங்களைப் புரிந்து கொள்ளாமல் நடப்பது போல அமைந்திருப்பதால் அது அவர்கள் மனதை காயப்படுத்தும். அவர்களை குற்ற உணர்விலும் ஆழ்த்தும். எனவே, 'இந்த சந்தர்ப்பத்தில் நீ பேசுறது சரியில்ல' என்று சொல்லலாம்.

3. நீ எப்பவுமே இப்படித்தான்: இதுவும் அவர்களின் மொத்த இமேஜையே காலி செய்யக்கூடியதாக, அவர்களின் ஒட்டுமொத்த குணாதிசயத்தையே கேலி செய்வது போல இருக்கிறது. எனவே, பொத்தாம் பொதுவாக சொல்லாமல் அவர்கள் எந்த விஷயத்தில் சரியில்லை என்பதை நாசூக்காக எடுத்துச் சொல்லலாம்.

4. குழந்தைகளுக்காகத்தான் உன்னோடு இருக்கிறேன்: ஒருபோதும் இந்த வார்த்தையைச் சொல்லாதீர்கள். இந்த வார்த்தை, அவர் மேல் உங்களுக்கு முழு அன்பில்லை. குழந்தைகள் பொருட்டுதான் நீங்கள் அவர்களுடன் சேர்ந்து இருக்கிறீர்கள் என்பது போலவும், அவரை நீங்கள் எப்போது வேண்டுமானாலும் விட்டு விட்டுப் போய் விடுவீர்கள் என்பது போலவும் இருப்பதால் இதை சொல்லவே சொல்லாதீர்கள்.

5. நான் உன்னை நம்பவே மாட்டேன்: உன்னை எல்லாம் நம்பவே கூடாது என்பது மாதிரி விளையாட்டுக்குக் கூட சொல்லாதீர்கள். கணவன், மனைவி தாம்பத்தியத்திற்கு முக்கியமான அடிப்படை விஷயமே நம்பிக்கைதான். அதுவே ஒரு வெற்றிகரமான தாம்பத்தியத்திற்கு அடையாளம். இந்த அடிப்படையையே காலி செய்வது போல நம்ப மாட்டேன் என்று சொல்வது தகாது.

6. நான் உன்னை திருமணம் செய்துக்காமலே இருந்திருக்கலாம்: எவ்வளவு கோபத்திலும் இந்த வார்த்தைகளை சொல்லவே கூடாது. அது தாம்பத்தியத்தை வெகுவாக பாதிக்கும். அத்தனை சீக்கிரத்தில் இது ஏற்படுத்திய காயத்தின் வடு மறையாது.

7. நீ செஞ்சதை மன்னிக்கவே முடியாது: இந்த உலகத்தில் யாருமே 100 சதவிகிதம் சரியானவர்கள் அல்ல. உங்களை கோபப்படுத்துமாறு ஏதாவது செய்திருந்தாலும் அப்போதைக்கு அது உங்கள் மனதை வருத்தப்படுத்தலாம். ஆனால், நிதானமாக யோசித்துப் பார்த்தால் அது அவ்வளவு பெரிய தவறு இல்லை என்று புரியும். எனவே, 'நீ செஞ்சது எனக்கு வருத்தமா இருக்கு' என்று வேண்டுமானால் சொல்லலாம்.

8. என்னை விட பெட்டரா உனக்கு யாரு கிடைச்சிருப்பா?: இப்படிச் சொல்ல வேண்டாம். ஏனென்றால், விரும்பித்தான் திருமணம் செய்து கொண்டீர்கள் என்பதை மறக்கவே கூடாது. அவர் உங்களுடைய வாழ்க்கைக்கு பொருத்தம் இல்லாதது போல பேசினால் அவர் மனது நிச்சயம் புண்படும்.

9. நீ அப்படியே உங்க அம்மா, அப்பா மாதிரி நடந்துக்கற: வாக்குவாதத்தின்போது இந்த வார்த்தைகள் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். வாழ்க்கை துணையை யாருடனும் ஒப்பிட்டு பேசக்கூடாது. எதிலும், குறிப்பாக அவர்கள் தாய் தந்தையுடன் ஒப்பிட்டு பேசினால் அது எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும். மேலும், மாமனார், மாமியாரை தாக்கிப்பேசுவது போல இருப்பதால் அவ்வளவு சீக்கிரத்தில் துணைவர் உங்களை மன்னிக்க மாட்டார்.

10. உனக்கு நிஜமாவே என் மேல அன்பு இருந்தா: இந்த வார்த்தையும் அவர்களுடைய அன்பை நீங்கள் சந்தேகப்படுவதாக அமையும். இந்த மாதிரி வார்த்தைகளை உபயோகிக்கக் கூடாது.
593004
Photo1/2
𝗕𝗥𝗘𝗔𝗞𝗜𝗡𝗚 NEWS

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் அட்டவணை வெளியீடு! 🗳️

✦ மொத்த தொகுதிகள் – 234
✦ கட்டங்கள் – 1
✦ வாக்குப்பதிவு – 23.04.2026
✦ வாக்கு எண்ணிக்கை – 04.05.2026
✦ வேட்புமனு தொடக்கம் – 30.03.2026
✦ வேட்புமனு முடிவு – 06.04.2026

@OLBNNews
1,360004
மின் இணைப்பில் பெயர் மாற்றம் செய்ய வேண்டுமா? இனி எங்கும் அலைய வேண்டாம்! - OLBN News

தமிழகத்தில் வீடு, நிலம் அல்லது கடை போன்ற சொத்துகளை வாங்கும் போது, அந்த சொத்துடன் இணைந்த மின்சார இணைப்பின் பெயரையும் புதிய உரிமையாளரின் பெயரில் மாற்றுவது வழக்கம். இதற்காக இதுவரை மின்வாரிய அலுவலகத்திற்குச் சென்று பல்வேறு ஆவணங்களுடன் நேரில் விண்ணப்பிக்க வேண்டியிருந்தது.

இந்த நடைமுறை சிரமமானதுடன், பொதுமக்களுக்கு நேரமும் வீணாகி வந்தது. இதனைத் தவிர்க்கும் வகையில், தமிழ்நாடு மின்சார வாரியம் (TANGEDCO) தற்போது மின்சார இணைப்பு பெயர் மாற்றத்தை முழுமையாக ஆன்லைனில் செய்வதற்கான வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. பொதுமக்கள் இப்போது வீட்டிலிருந்தபடியே சில எளிய படிகளைப் பின்பற்றுவதன் மூலம், மின் இணைப்பின் பெயரை மாற்றிக் கொள்ளலாம்.

ஆன்லைனில் பெயர் மாற்றம் செய்வது எப்படி?

* முதலில் TANGEDCO வின் அதிகாரப்பூர்வ தளமான http://tangedco.gov.in/ அல்லது http://tnebltd.gov.in/ சென்று, Consumer Services → Apply Online → Name Transfer (Ownership Change) என்பதைக் கிளிக் செய்யவும்.

* புதிய பக்கம் திறந்தவுடன், Service Connection Number (SC No.), மொபைல் எண், ஆதார் எண் அல்லது மின்னஞ்சல் ஆகியவற்றை உள்ளிட்டு, OTP மூலம் சரிபார்க்கவும்.

* அதன் பிறகு பின்வரும் ஆவணங்களை PDF வடிவில் இணைக்க வேண்டும்:

சொத்து உரிமை ஆவணம் (Sale Deed / Gift Deed / Lease Agreement)
விண்ணப்பதாரரின் ஆதார் அட்டை
முந்தைய உரிமையாளர் கடைசி மின் கட்டண ரசீது
மரணச் சான்றிதழ் (முந்தைய உரிமையாளர் உயிரில் இல்லையெனில்)
முன்பு தேவைப்பட்ட No Objection Certificate (NOC) தற்போது கட்டாயமில்லை என மின்வாரியம் அறிவித்துள்ளது.
* விண்ணப்பத்தை சமர்ப்பித்த பிறகு 700+ ஜிஎஸ்டி வரை கட்டணம் ஆன்லைனில் செலுத்த வேண்டும்.

* பின்னர் Track Application Status பகுதியில் விண்ணப்ப எண் மூலம் முன்னேற்றத்தைப் பார்க்கலாம். சரிபார்ப்பு முடிந்தவுடன் புதிய பெயர் அடுத்த மின் கட்டண ரசீதில் தானாகவே சேர்க்கப்படும்.

* உதவி தேவைப்பட்டால் TANGEDCO அழைப்பு மைய எண் 1912 அல்லது மின்னஞ்சல் முகவரி [email protected] மூலம் தொடர்பு கொள்ளலாம்.
566002
தீவிரமடையும் SIR பணிகள்! வீடு பூட்டியிருந்தால் என்னவாகும்? - முழு விவரம்!

தமிழ்நாடு முழுவதும் 20 ஆண்டுகளுக்கு பிறகு, வாக்காளர் பட்டியலை வீடு வீடாக சென்று சரிபார்க்கும் சிறப்பு தீவிர திருத்த பணி (Special Intensive Revision - SIR) கடந்த நவம்பர் 4-ம் தேதி முதல் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்த பணியின்போது, வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் உங்கள் வீட்டிற்கு வரும் போது, வீடு பூட்டியிருந்தால் என்ன செய்வது என்ற கேள்வி பலரிடமும் எழுந்துள்ளது. இது குறித்த சந்தேகங்களுக்கு, இந்திய தேர்தல் ஆணையம் தெளிவான வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது.

மூன்று முறை தேடி வரும் அலுவலர்கள்

வாக்குச்சாவடி நிலை அலுவலர் உங்கள் வீட்டிற்கு வரும்போது, வீடு பூட்டியிருந்தால், அவர் உடனடியாக உங்கள் பெயரை பட்டியலில் இருந்து நீக்கிவிட மாட்டார். மாறாக, ஒவ்வொரு வீட்டிற்கும் குறைந்தபட்சம் மூன்று முறை வருவார்கள் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அலுவலர்கள் வரும் தேதிகள், முன்கூட்டியே அந்தந்த பகுதிகளில் உள்ள வாக்காளர்களுக்கு அறிவிக்கப்படும்.

என்னென்ன சவால்கள் உள்ளன?

சென்னை, கோவை, திருப்பூர் போன்ற தொழில் நகரங்களில் கணவன், மனைவி இருவரும் வேலைக்கு செல்வதால், பகல் நேரங்களில் பெரும்பாலான வீடுகள் பூட்டியே கிடக்கின்றன. இதனால், அலுவலர்களால் உரியவர்களிடம் படிவங்களை கொடுப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும், வாடகை வீடுகளில் குடியிருப்போர் அடிக்கடி வீடு மாறுவதால், அவர்களின் தற்போதைய முகவரியை கண்டறிவதும் சவாலாக உள்ளது.

நீங்கள் என்ன செய்ய வேண்டும்?

வாக்குச்சாவடி நிலை அலுவலர் வரும்போது, அவரிடம் இருந்து முன்பே ஓரளவு பூர்த்தி செய்யப்பட்ட கணக்கெடுப்பு படிவத்தை பெற்றுக்கொள்ள வேண்டும்.
அந்த படிவத்தில் உங்கள் பெயர், வயது, முகவரி, புகைப்படம் போன்ற விவரங்கள் சரியாக உள்ளதா என சரிபார்த்து, உங்கள் சமீபத்திய புகைப்படத்தை ஒட்டி, கையொப்பமிட்டு அலுவலரிடம் திரும்ப ஒப்படைக்க வேண்டும்.
ஒருவேளை, அலுவலர் வரும்போது நீங்கள் வீட்டில் இல்லை என்றாலோ அல்லது அவரை சந்திக்க முடியவில்லை என்றாலோ, voters.eci.gov.in என்ற தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம், நீங்களே உங்கள் படிவத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து ஆன்லைனில் சமர்ப்பிக்கலாம்.
நீங்கள் அதே தொகுதிக்குள் வேறு வீட்டிற்கு குடிபெயர்ந்திருந்தால், அந்த தகவலை அலுவலரிடம் தெரிவிக்கலாம். வேறு தொகுதிக்கு மாறியிருந்தால், பழைய தொகுதியில் உங்கள் பெயரை நீக்கிவிட்டு, புதிய தொகுதியில் மீண்டும் விண்ணப்பிக்க வேண்டும்.
காலக்கெடுவை தவறவிடாதீர்கள்

டிசம்பர் 4ம் தேதி வரை நடைபெறும் இந்த வீடு வீடாக சரிபார்க்கும் பணியின் போது, உங்கள் பெயர் பட்டியலில் உள்ளதா என்பதை உறுதி செய்து கொள்வது மிகவும் அவசியம். ஒருவேளை, இந்த படிவத்தை நீங்கள் பூர்த்தி செய்து கொடுக்கத் தவறினால், டிசம்பர் 9ம் தேதி வெளியிடப்படும் வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இடம் பெறாமல் போக வாய்ப்புள்ளது. அதன் பிறகு, நீங்கள் மீண்டும் உரிய ஆவணங்களை சமர்ப்பித்து, உங்கள் பெயரை பட்டியலில் சேர்க்க விண்ணப்பிக்க வேண்டியிருக்கும். எனவே, இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி, அனைத்து வாக்காளர்களும் தங்கள் ஜனநாயக கடமையை சரியாக நிறைவேற்ற, வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர் மற்றும் விவரங்கள் சரியாக உள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ளுமாறு தேர்தல் ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது.

@OLBNNews
2,660006
Photo1/2
இனி பயம் வேண்டாம்

வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்தின்போது நீங்கள் வீட்டில் இல்லாவிட்டால், ஓட்டுரிமை விட்டு போய்விடுமோ? என்ற பயம் வேண்டாம்.

erolls.tn.gov.in/blo என்ற இணையதளத்தில் இருந்து உங்கள் ஏரியாவில், வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் மேற்கொள்ளும் அலுவலரின் செல்போன் எண்ணை எடுத்துக்கொள்ளலாம். இதன் மூலம் உங்கள் வீட்டுக்கு அலுவலர் எப்போது வருவார் என முன்கூட்டியே தெரிந்துகொள்ளலாம்.

@OLBNNews
1,570000
வீடு மாறியவர்கள் வாக்காளர் பட்டியலில் இணைய என்ன செய்ய வேண்டும்: தேர்தல் ஆணையம்.

இந்தியத் தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வரும் 'வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணி' தொடர்பாக பொதுமக்களுக்கும், அரசியல் கட்சிகளுக்கும் எழுந்துள்ள கேள்விகளுக்குத் தேர்தல் ஆணைய அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர்.

பழைய முகவரியிலிருந்து மாறி இருப்பவர்களின் வாக்குரிமை, அவர்கள் தற்போது வசிக்கும் முகவரிக்குத்தான் அமையும் என்றும், அவர்களின் 2002-ஆம் ஆண்டு பட்டியலில் பெயர் இருந்ததா என்பது மட்டுமே சரிபார்க்கப்படும் என்றும் அதிகாரிகள் தெளிவுபடுத்தினர்.

பெயர் சேர்க்க விண்ணப்பிக்கும் போது, ஆதாரங்களை கணக்கெடுப்பின்போது சமர்ப்பிக்க தேவையில்லை என்றும், வரைவு பட்டியல் வெளியான பின் 13 ஆவணங்களில் ஒன்றை கொடுத்து பட்டியலில் பெயரை சேர்த்துக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது. மேலும், விண்ணப்பப் படிவத்தில் தந்தை அல்லது பாதுகாவலரின் பெயரைப்பதிவு செய்தால் மட்டுமே போதுமானது.

2024 வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டவர்கள், வாக்குச்சாவடி அலுவலரிடம் படிவம்-6 மற்றும் உறுதிமொழிப் படிவத்தை பெற்று விண்ணப்பிக்கலாம். வெளிநாட்டில் இருப்பவர்களின் படிவங்களை அவர்களின் குடும்பத்தார் பூர்த்தி செய்து தரலாம் என்றும், விரைவில் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்கும் வசதி வழங்கப்படும் என்றும் தேர்தல் ஆணையம் உறுதி செய்துள்ளது.
1,020000
தமிழக வாக்காளர் பட்டியல் 2025: சிறப்பு திருத்தப் பட்டியலில் உங்க பெயர் உள்ளதா? சரிபார்ப்பது எப்படி?

ஸ்டெப் 1: அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்குச் செல்லவும்

தமிழக தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான elections.tn.gov.in/Electoral_Serv… க்குச் செல்லவும்.

"Special Intensive Revision - 2002/2005" என்பதை கிளிக் செய்யவும்.

இப்போது, "Search your name in electoral roll" (வாக்காளர் பட்டியலில் உங்க பெயரைத் தேடுங்கள்) என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும்.

ஸ்டெப் 2: தேடல் விருப்பங்கள்

உங்களுக்கு 3 தேடல் விருப்பங்கள் காட்டப்படும்:

EPIC எண் மூலம் தேடுதல் (வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை)

விவரங்கள் மூலம் தேடுதல்

மொபைல் எண் மூலம் தேடுதல்

விருப்பம் 1: EPIC எண் மூலம் தேடுதல்

உங்களிடம் ஏற்கனவே வாக்காளர் அட்டை இருந்தால், இதுவே வேகமான மற்றும் மிகவும் துல்லியமான முறையாகும்.

உங்க EPIC எண்ணை (வாக்காளர் அட்டையில் அச்சிடப்பட்டுள்ளபடி) உள்ளிடவும்.

மாநில கீழ்தோன்றும் பட்டியலில் (dropdown list) இருந்து 'தமிழ்நாடு' என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

ஸ்கிரீனில் தோன்றும் Captcha குறியீட்டை டைப் செய்யவும்.

"Search" என்பதைக் கிளிக் செய்யவும்.

உங்க வாக்காளர் விவரங்கள் உடனடியாக திரையில் தோன்றும்.

விருப்பம் 2: தனிப்பட்ட விவரங்கள் மூலம் தேடுதல்

உங்களிடம் EPIC எண் இல்லையென்றாலும், உங்க தனிப்பட்ட விவரங்களைப் பயன்படுத்தி உங்கள் பெயரைக் கண்டறியலாம்.

"Search by details" என்பதைக் கிளிக் செய்யவும்.

மாநிலம் மற்றும் மொழியை (தமிழ், ஆங்கிலம்) தேர்ந்தெடுக்கவும்.

பின்வரும் விவரங்களை கவனமாக உள்ளிடவும்:

உங்க முழுப் பெயர் (அல்லது நீங்க மற்றவருக்காகச் சரிபார்த்தால் அவர்களின் பெயர்)

பிறந்த தேதி (உங்க அதிகாரப்பூர்வ பதிவுகளின்படி)

பாலினம்

மாவட்டம் மற்றும் தொகுதி

Captcha குறியீட்டை நிரப்பி, "Search" என்பதைக் கிளிக் செய்யவும்.

உங்க வாக்காளர் விவரங்கள் உடனடியாக திரையில் தோன்றும்.

விருப்பம் 3: மொபைல் எண் மூலம் தேடுதல்

உங்க வாக்காளர் பதிவு ஆவணத்துடன் உங்கள் மொபைல் எண் இணைக்கப்பட்டிருந்தால், இது மற்றொரு வசதியான வழியாகும்.

"Search by Mobile" என்பதைக் கிளிக் செய்யவும்.

உங்க மாநிலம் மற்றும் மொழியைத் தேர்ந்தெடுக்கவும்.

உங்க மொபைல் எண்ணை உள்ளிடவும்.

Captcha குறியீட்டை நிரப்பி, "Send OTP" என்பதைக் கிளிக் செய்யவும்.

உங்க போனுக்கு ஒரு முறை கடவுச்சொல் (OTP) வரும்.

அந்த OTP எண்ணை உள்ளிட்டு, "Search" என்பதைக் கிளிக் செய்யவும்.

உங்க வாக்காளர் தகவல் ஸ்கிரீனில் காட்டப்படும்.

2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் வரவிருக்கும் நிலையில், உங்க வாக்காளர் விவரங்கள் துல்லியமாகவும், புதுப்பித்த நிலையில் இருப்பதையும் உறுதி செய்வது மிகவும் அவசியம். விடுபட்ட பெயர்கள், தவறான விவரங்கள், அல்லது காலாவதியான முகவரிகள் உங்களை வாக்களிப்பதில் இருந்து தடுக்கக்கூடும். இந்த 'சிறப்பு தீவிர திருத்தப் பணி' (SIR), தகுதியான ஒவ்வொரு வாக்காளரும் பட்டியலில் தங்கள் சரியான இடத்தைப் பெறுவதை உறுதிசெய்து, இதுபோன்ற பிரச்னைகளைச் சரிசெய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

@OLBNNews
963000

Showing 30 of 51 posts

மதிப்பீடு

உள்நுழைவு தேவை

Frequently Asked Questions

OLBN News ™ (Tamil News In 360°) தமிழ் செய்திகள் 📰 டெலிகிராம் சேனல் எதைப் பற்றியது?+

OLBN News ™ (Tamil News In 360°) தமிழ் செய்திகள் 📰 (@olbnnews) என்பது tgdio இல் அரசியல் வகையில் பட்டியலிடப்பட்ட டெலிகிராம் சேனல். தரவரிசை, மதிப்பீடு, விமர்சனங்கள் மற்றும் சமீபத்திய இடுகைகளைப் பார்த்து சந்தா செய்வதற்கு முன் முடிவு செய்யுங்கள். தற்போது tgdio இல் சுமார் 1,872 சந்தாதாரர்கள் உள்ளனர்.

நான் OLBN News ™ (Tamil News In 360°) தமிழ் செய்திகள் 📰 (@olbnnews) ஐ டெலிகிராமில் எப்படி சேர்வது?+

tgdio இல் சேனல் சுயவிவரத்தைத் திறந்து, Join / Open in Telegram மூலம் @olbnnews இல் இலவசமாக சந்தா செய்யுங்கள்.

OLBN News ™ (Tamil News In 360°) தமிழ் செய்திகள் 📰 நல்ல அரசியல் சேனலா?+

tgdio இல் சேருவதற்கு முன் OLBN News ™ (Tamil News In 360°) தமிழ் செய்திகள் 📰 இன் மதிப்பீடு, விமர்சனங்கள், தரவரிசை மற்றும் இடுகைகளைப் பாருங்கள். தற்போது tgdio இல் சுமார் 1,872 சந்தாதாரர்கள் உள்ளனர். ஒத்த அரசியல் சேனல்களுடன் ஒப்பிடுங்கள்.

OLBN News ™ (Tamil News In 360°) தமிழ் செய்திகள் 📰 புள்ளிவிவரங்களையும் இடுகைகளையும் எங்கே பார்ப்பது?+

tgdio இல் @olbnnews பக்கத்தைத் திறங்கள் — சந்தாதாரர் புள்ளிவிவரங்கள், தரவரிசை, மதிப்பீடு மற்றும் இடுகைகள். Stats இணைப்பில் வளர்ச்சி விளக்கப்படம் பாருங்கள்.