பேரன்புக்காரியும் நீதான்...
எந்த அன்பும்
இல்லாதது போல்
நடிக்கும்
பேரழுத்தக்காரியும்
நீதான்...
நினைத்தவுடன்
கவிதை சொல்லச் சொல்கிறாய்
என்ன செய்ய...
கண்ணாடி முன்
உன்னை நிறுத்தி
வாசித்துக்கொள்
என்றுதான்
சொல்லமுடியும்...
சம்மதமா...?
நீ சொல்லும்
சொற்களனைத்தும்
யதார்த்தமானது
என்பாய்
அத்தனையிலும்
அன்பை மட்டும்
பொறுக்கி எடுத்து
பத்திரப்படுத்தி வைப்பேன்
மீந்த சொற்கள் என்று
எதுவும் இருக்காது...
உன் நிழலில்
நானில்லாது போகலாம்
என் நிழலில்
நீயில்லாது போகலாம்
நம் நிழலில்
காதல் இருக்கும்...
முத்தம் தர
இதழ் குவிப்பாய்
நிலவின் கறைகள் போல
வரிகள் குவியும்...
இப்போது
கிரகணத்திற்குத்
தயாராகும் பூமி போல
எதிர் நிற்பேன்
நான்...
காதலின் நிலம் நீ...
உன்னில் தான்
நான் விதையாகியிருக்கிறேன்...
எப்போது
நீரூற்றுவாய்...?
பேசப் பேசப் பேச
இதழ் பார்க்கிறேன்
இசை கேட்கிறேன்
வேறென்ன வேண்டும்...
இசையால் வசமாகா
இதயமெது...?
உன் சிரிப்பு
அவ்வளவு அழகாக இருக்கும்...
ஒரே சந்தேகம்
32முத்துக்கள்
எக்கடலில் சேகரிக்கப்பட்டு
எப்படி
கோர்க்கப்பட்டது...
வந்துவிழும்
அலைச் சொற்களில்
என்னை நீ இழுக்கும்
லாவகம்
கடலால் அன்றி
எதனால் இயலும்...
என்னில்
மின்னிக் கொண்டிருக்கும்
பகலும் இரவும்
நீ...
உன் கைகள் கோர்த்து
நடந்தபடி
கதைகள் பேசி
நிலா ரசித்தபடி
காற்று வாங்கியபடி
நெடுந்தூரம் நடக்கவேண்டும்...
சொற்கள் தடுமாறும் சமயம்
உன் மடி கொடு
உறங்கவைத்துவிட்டு
உன்னைப் பார்த்தபடியிருக்கச் சோல்வேன்
என் கண்களை...
பெரு வெய்யில் காலம்...
குடை பிடித்தபடி
நடக்கிறாய்
உள் நுழைந்து நழுவும்
வியர்வை மழை
நானாக இருப்பேன்...
குடை மடிக்கும் வரை
பேசிக்கொண்டு வா
அதனுடன்...
முத்தம் செய்ய
இதழ் போதும்
பற்றிக்கொள்ள
காதல் வேண்டும்...
நீ
காதல் தீ...
பேச ஒன்றுமில்லை
என எழுந்து செல்வாய்
உன் உடல்
பேசிக்கொண்டே செல்லும்...
உனக்காக நான்
கடைசியாக ஒரு கவிதை
எழுதவே முடியாது...
நான் போனாலும்
நீ வாழ்வாய்
என்னில் வாழ்ந்த கவிதையாக...
எனக்காக வாழும்
கவிதையாக...
காற்றில் ஆடும் கொடி நான்...
அருகில் வா...
இடை சுற்றிக் கொள்கிறேன்...
சிறகடிக்காது விழிக்கும் இமை
தடங்கலின்றி உள்செல்வேன் நான்...
அப்படியே பார்!
வாகனத்தின் கண்ணாடி சரி செய்யும்
Wiper போல
உன் நெற்றியில்
வந்து விழும் கூந்தல் முடிகள்
உன்னழகை
இன்னும் பேரழகாக்கும்...
பிடித்தவளுக்காக
கவிதை எழுதும் போது
பிரியங்களாய் வார்த்தைகளும்
வரங்களாய் வரிகளும் வந்தமைகின்றது...
இதயத்தை தொலைத்துவிட்டு
தேடினேன்
கிடைக்கவில்லை...
இதயமே என்னை
தேட தொடங்கியது...
என் மேல் காதல் வந்து
நீ கடிதம் கொடுத்த பிறகு!
💙💜💙
@KavithaigalOLBN