கதை மாற்றத்தை தரும் (Tamil Story) Telegram channel photo

கதை மாற்றத்தை தரும் (Tamil Story)

@storywillchangePublic Channel

ஆகாரத்திற்காக அழுக்கைச் சாப்பிட்டுத் தடாகத்தையும் சுத்தம் செய்கிற மீன் போல பொதுநலத்திலும் சுயநலம் வேண்டும்...💖🔗🧠 https://t.me/storywillchange Suggestion: 7868072071

2.1k

Last views

2k (1,971 subscribers)
உறுப்பினர்
—
Rating
10
Total Posts
Oct 15, 2026, 3:55 PM
புதுப்பிக்கப்பட்டது
Apr 10, 2026
Created
Stats

நீங்கள் தமிழில் உள்ளடக்கத்தைப் பார்க்கிறீர்கள். வேறு மொழிகளில் உள்ள உள்ளடக்கத்தைப் பார்க்க தளத்தின் மொழியை மாற்றவும்.

Channel Information

Channel Information
Channel Nameகதை மாற்றத்தை தரும் (Tamil Story)
Username@storywillchange
Categoryவாழ்க்கைப் பாடங்கள்
Languageதமிழ்
Countryஇந்தியா
உறுப்பினர்1,971
Channel TypePublic Channel
Created10 ஏப்., 2026
Last Updated15 அக்., 2026 • 7 நாட்களுக்கு முன்
StatusActive

தரவரிசை

உலகளாவிய தரவரிசை
#167624+107
மொழி தரவரிசை
#415+2
வகை தரவரிசை
#1092-2

சந்தாதாரர் வளர்ச்சி

மொத்தம்: 2.0K30 Days growth: +40.2%
09/1609/2109/2610/0110/0610/1110/15
சந்தாதாரர் வளர்ச்சி - 30 Days
DateSubscribers
16:09:20261,967
17:09:20261,967
18:09:20261,964
19:09:20261,964
20:09:20261,964
21:09:20261,964
22:09:20261,964
23:09:20261,964
24:09:20261,964
25:09:20261,964
26:09:20261,964
27:09:20261,964
28:09:20261,964
29:09:20261,964
30:09:20261,964
01:10:20261,964
02:10:20261,964
03:10:20261,964
04:10:20261,964
05:10:20261,964
06:10:20261,964
07:10:20261,964
08:10:20261,964
09:10:20261,964
10:10:20261,964
11:10:20261,964
12:10:20261,964
13:10:20261,964
14:10:20261,964
15:10:20261,971
சந்தாதாரர் வளர்ச்சி - Weekly
DateSubscribers
Week of 06:04:20261,998
Week of 13:04:20261,999
Week of 20:04:20261,999
Week of 27:04:20261,979
Week of 04:05:20261,979
Week of 11:05:20261,979
Week of 18:05:20261,972
Week of 25:05:20261,972
Week of 01:06:20261,972
Week of 08:06:20261,972
Week of 15:06:20261,972
Week of 22:06:20261,972
Week of 29:06:20261,979
Week of 06:07:20261,979
Week of 13:07:20261,979
Week of 20:07:20261,979
Week of 27:07:20261,979
Week of 03:08:20261,969
Week of 10:08:20261,969
Week of 17:08:20261,983
Week of 24:08:20261,970
Week of 31:08:20261,970
Week of 07:09:20261,967
Week of 14:09:20261,964
Week of 21:09:20261,964
Week of 28:09:20261,964
Week of 05:10:20261,964
Week of 12:10:20261,971
சந்தாதாரர் வளர்ச்சி - Monthly
DateSubscribers
April 20261,999
May 20261,972
June 20261,972
July 20261,979
August 20261,970
September 20261,964
October 20261,971
சந்தாதாரர் வளர்ச்சி - Yearly
DateSubscribers
20261,971

Top 10 posts

Most viewed posts from this channel

By views
  1. #1ஒரு நாள் நான் முடிவு செய்தேன் இந்த வாழ்க்கையை துறந்துவிடுவது என்று…4.8K
  2. #2*‘ஆசைகளை விட்டவனே ஆண்டவனைத் தொட்டவன்!’*2.1K
  3. #3_*உங்களுக்கு தெரியுமா...?*_2.1K
  4. #4நீதிமான் பத்து அவித்த முட்டைகளை அவனிடம் கொடுத்து, "இதோ இந்த பத்து அவித1.9K
  5. #5ஒரு 'ரிடையர்' ஆன ஊழியருக்கு பெரியவாளின் மகத்தான மனிதநேய உபதேசம்"1.9K
  6. #6_*நம்பிக்கை வெற்றி தரும்..!!!*_1.8K
  7. #7ஒரு மன்னனுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்தது. இருவருக்கும் சமமான அளவு கல்1.4K
  8. #8எவ்வளவு மகத்தான மனிதர்1.4K
  9. #9ஒரு யானையும், ஒரு நாயும் ஒரே நேரத்தில் கர்பமானது.1.3K
  10. #10*யார் கடவுள்..*1.3K

சமீபத்திய இடுகைகள்

‘ஆசைகளை விட்டவனே ஆண்டவனைத் தொட்டவன்!’


அவர்கள் இரண்டு பேரும் தினமும் அந்த ஆலயத்துக்கு வருவார்கள்.
அங்கே உள்ள மண்டபத்தில் உட்காருவார்கள். பல தகவல்களை
பகிர்ந்து கொள்வார்கள்.

‘‘பட்டணத்துலே படிச்சிட்டிருக்கிற என் பையனுக்கு இதுவரை பத்துக்கடிதம் போட்டுட்டேன். பதிலே வரலை... எப்படி இருக்கானோ தெரியலே!’’
‘‘இந்தக் காலத்துப் பசங்க அப்படித்தான். தேவை இருந்தா போடுவாங்க.இல்லேன்னா போட மாட்டாங்க!’’
‘‘அப்படியா சொல்றீங்க?’’
‘‘இப்ப வேணும்னா ஒரு பந்தயம் வெச்சுக்குவோமா? உங்க பையனுக்குநான் ஒரு கடிதம் போடுறேன். அதுக்கு உடனே பதில் வரவழைக்கிறேன். என்ன சொல்றீங்க?’’

‘‘அது எப்படி வரும்? முடியாதுங்க. அவன் எழுத மாட்டான்; சோம்பேறி!’’
‘‘எழுத வெக்கிறேன்... என்ன சொல்றீங்க?’’
‘‘அப்படி செஞ்சுட்டீங்கன்னா உங்களுக்கு நூறு ரூபா கொடுத்துடறேன்!’’.இப்படி ஒரு பந்தயத்தோடு அவர்கள் பிரிந்தார்கள். அன்றைக்கே இவர் அந்தப் பையனுக்கு ஒரு கடிதம் எழுதினார். அடுத்த மூன்றாவது நாள் அவனிடமிருந்து ஒரு பதில் கடிதம் பறந்து வந்தது! அதை எடுத்துக்கொண்டு வந்தார்.

‘‘இதோ பாருங்கள்... உங்கள் மகன் எழுதிய கடிதம்!’’
அந்த அப்பாவுக்கு ஆச்சரியம். தன் கண்களையே நம்ப முடியவில்லை.‘‘எப்படி இது...?’’
‘‘எழுத வேண்டிய முறையில் எழுதினேன். பதில் வந்தது!’’
‘‘என்ன எழுதினீர்கள்?’’
‘‘அதுவா... ‘தம்பி! நீ நல்லா படிக்கிறதா உங்கப்பா சொல்றார். பதில் எழுதக்கூட உனக்கு நேரம் இல்லையாம். பரவாயில்லை... இந்தக்கடிதத்துக்குக் கூட நீ பதில் எழுத வேண்டாம். உன் அப்பா சொல்படி நான் இந்தக் கடிதத்துடன் உன் செலவுக்காக ஆயிரம் ரூபாய்க்கான மகரயாழ் காசோலை அனுப்பியிருக்கிறேன். பெற்றுக் கொள்ளவும்!’ அப்படினு கடிதம் போட்டேன்.

உடனே பதில் கடிதம் பறந்து வந்தது. ‘மாமா! உங்க கடிதம் வந்தது. ஆனால் அதில் ‘செக்’ இணைத்து அனுப்ப மறந்து விட்டீர்கள்!’ என்று எழுதி இருக்கிறான். இதோ அந்தக் கடிதம்!’’ _ மகனின் கடிதத்தை அப்பாவிடம் நீட்டினார் இவர். அப்பா யோசிக்க ஆரம்பித்தார். பந்தயப் பணம் நூறு ரூபாயை எடுத்து நீட்டினார். அவர் வாங்க மறுத்தார்.

‘‘இதெல்லாம் ஒண்ணும் வேணாம். ஓர் உண்மையை உங்களுக்குப்புரிய வைக்கிறதுக்காகத்தான் சும்மா அப்படி பந்தயம் கட்டினேன்!’’
‘‘என்ன உண்மை அது?’’
‘‘மனித மனம் எதையும் இழக்க விரும்புவதில்லை. ஆனால், நாம் இழப்பதற்குக் கற்றுக் கொள்ள வேண்டும். அதற்காகத்தான் கோயிலுக்குவருகிறோம்!’’

‘‘என்ன சொல்கிறீர்கள்?’’

‘‘அதோ பாருங்கள்... கோயில் சுவரில் என்ன எழுதி இருக்கிறது?’’
அவர் பார்த்தார். அங்கே எழுதப்பட்டிருந்த வாசகம்: ‘ஆசைகளை விட்டவனே ஆண்டவனைத் தொட்டவன்!’.

இன்றைய பக்தர்களுக்கு ஆலயங்களை நெருங்கத் தெரிகிறது; ஆண்டவனை நெருங்கத் தெரிவதில்லை!

தென்கச்சி கோ.சுவாமிநாதன்
2,1300011
*நம்பிக்கை வெற்றி தரும்..!!!*


நொபுங்கா படை தளபதி தன் படை வீரர்களுடன் எதிரிகளை கண்டிப்பாக வீழ்த்த வேண்டும் என்று ஆர்வத்துடன் இருந்தார்.

எதிரிகளிடம் அதிக அளவில் படைபலம் இருந்தது. ஆனால் நொபுங்காவிடம் இல்லை. இதை அறிந்திருந்த நொபுங்காவின் படைவீரர்கள் மிகவும் அஞ்சினர்.

ஆனால் நொபுங்காவிற்கு தன் படைவீரர்களின் வீரம் தெரிந்திருந்ததால், அவர் நம்பிக்கையுடன் இருந்தார்.

ஆகவே அவர் ஒரு ஜென் துறவியை பார்த்து, தன் படை வீரர்களுக்கு எவ்வாறு நம்பிக்கையை ஏற்படுத்துவது என்று கேட்கச் சென்றார்.

அதைக் கேட்ட ஜென் துறவி அந்த தளபதியிடம் "நீ படையை நடத்தி செல்லும் வழியில், ஒரு கோயிலுக்குள் சென்று வெளியே வந்து, உன் வீரர்களின் முன் இந்த நாணயத்தை கொண்டு போய் தலை விழுந்தால் நமக்கு வெற்றி நிச்சயம் என்று சொல்" என்று கூறினார்.

அதேப்போல் தளபதியும் செய்தார். அப்போது தலையும் விழுந்தது. இதனால் தம் மீது நம்பிக்கை இழந்திருந்த வீரர்கள், தலை விழுந்ததும், நம்பிக்கையுடன் போரில் போரிட்டனர். அவ்வாறு போரிட்டு, அவர்களும் வெற்றிப் பெற்றனர்.

சிறிது நாட்கள் கழித்து, தளபதியுடன் இருக்கும் வீரன் ஒருவன், "நம்பிக்கை இருந்தால் வெற்றி நிச்சயம்" என்றான். ஆமாம் என்று கூறிய தளபதி, அவனிடம் அந்த நாணயத்தை காண்பித்தார்.

இக்கதையிலிருந்து, நம்பிக்கை இருந்தால், எத்தகைய போட்டி என்றாலும் வெற்றிப் பெறலாம் என்பது நன்கு வெளிப்படுகிறது...
1,790003
*உங்களுக்கு தெரியுமா...?*  


அந்த ராஜாவுக்கு ஒரு மனக்கவலை. அதை யாரிடமும் சொல்லமுடியாமல் குழப்பத்தோடு உட்கார்ந்திருந்தான்.

அரசனின் முகத்தைக் கவனித்த மந்திரிக்கு ஏதோ பிரச்னை என்று புரிந்துவிட்டது. ஆனால் வற்புறுத்திக் கேட்டால் அவர் தவறாக நினைத்துக்கொள்வாரோ என்று அச்சம்.
ஆகவே, மந்திரி ஒரு தந்திரம் செய்தார்.

‘அரசே, நீங்கள் வேட்டைக்குப் போய் ரொம்ப நாளாகிவிட்டதல்லவா?’

‘ஆமாம்’ என்றான் அரசன்.

‘ஆனால் இப்போது நான் வேட்டையாடும் மனநிலையில் இல்லை!’

‘மனம் சரியில்லாதபோதுதான் இதுமாதிரி உற்சாக விளையாட்டுகளில் ஈடுபடவேண்டும் அரசே’ என்றார் மந்திரி.

‘புறப்படுங்கள். போகிற வழியில்தானே உங்களுடைய குருநாதரின் ஆசிரமம்? அவரையும் தரிசித்துவிட்டுச் செல்லலாம்!’

‘குரு’ என்றவுடன் அரசன் முகத்தில் புதிய நம்பிக்கை. மகிழ்ச்சி.

வேட்டைக்காக இல்லாவிட்டாலும் அவரைச் சந்தித்தால் தன்னுடைய குழப்பத்துக்கு ஒரு தெளிவு பிறக்கும் என்று நினைத்தான் அவன்.

அரசனின் குருநாதர் ஒரு ஜென் துறவி. ஊருக்கு வெளியே ஆசிரமம் அமைத்துத் தங்கியிருந்தார்.

அவரும் அவருடைய சீடர்களும் அரசனை அன்போடு வரவேற்று உபசரித்தார்கள்.

இந்தக் களேபரமெல்லாம் முடிந்தபிறகு அரசன் தன் குருநாதரைத் தனியே சந்தித்தான். தனது குழப்பங்களை விவரித்தான். அவற்றைச் சரி செய்வது எப்படி என்று தான் யோசித்துவைத்திருந்த தீர்வுகளையும் சொன்னான்.

குருநாதர் எல்லாவற்றையும் மௌனமாகக் கேட்டுக்கொண்டிருந்தார்.

கடைசியாக அரசன் கேட்டான். ‘நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் குருவே?’
அவர் எதுவும் பதில் பேசவில்லை.

சில நிமிடங்களுக்குப்பிறகு ‘நீ புறப்படலாம்’ என்றார். அரசன் முகத்தில் கோபமோ, ஏமாற்றமோ இல்லை. உற்சாகமாகக் கிளம்பிச் சென்று தன் குதிரையில் ஏறிக்கொண்டான். நாலு கால் பாய்ச்சலில் காட்டை நோக்கிப் பயணமானான்.

இதைப் பார்த்த மந்திரி குருநாதரிடம் ஓடினார். ‘அரசருடைய பிரச்னையை எப்படித் தீர்த்துவைத்தீர்கள் குருவே?’ என்று ஆர்வத்தோடு கேட்டார்.

‘உன் அரசன் ரொம்பப் புத்திசாலி. அவனே தன் பிரச்னையைத் தீர்த்துக்கொண்டான்’ என்றார் ஜென் குரு. ‘நான் செய்ததெல்லாம், அவன் தன்னுடைய குழப்பங்களைச் சொல்லச் சொல்லப் பொறுமையாகக் காது கொடுத்துக் கேட்டேன். சாய்ந்து அழத் தோள் கொடுத்தேன். அவ்வளவுதான்!’

“அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு கூர தேவையில்லை, பொறுமையாகக் காது கொடுத்துக் கேட்டாலே போதும்”
2,0700014
நீதிமான் பத்து அவித்த முட்டைகளை அவனிடம் கொடுத்து, "இதோ இந்த பத்து அவித்த முட்டைகளையும் உன் மகளிடம் கொடுத்து, ஒரு கோழியினால் அடைகாக்க வைத்து, பத்துக் குஞ்சுகளை ஓர் இரவிற்குள் பொரிக்க வைத்து அதே குஞ்சுகளை அதே இரவில் கோழியாக்கி, முட்டை போடவைத்து, பத்து முட்டைகளில் மூன்றை எடுத்து அடையாக்கி நாளைக் காலை உணவிற்கு எனக்குக் கொண்டுவா!'' என்றார். 

      தன் மகளிடம் சென்று அதை அப்படியே ஒப்புவித்தார் அவளது தந்தை. தன் மகள் இந்தப் புதிருக்கு விடை எப்படிச் சொல்லப்போகிறாள் என்று கவலைப்பட்டார். ஆனால், அவளோ எதிர் புதிர் போட்டாள். தன் தந்தையிடம் வேக வைத்த துவரைகள் அடங்கிய ஒரு பானையைக் கொடுத்து, "இதில் உள்ள துவரையை நிலத்தில் விதைத்து, முற்றியவுடன் அறுத்து எனது கோழிக் குஞ்சுகளுக்கு உணவாக தயாராக வைக்கும்படி கூறுங்கள்!'' என்றாள். 

      அவளுடைய தந்தையும் அவ்வாறே நீதிமானிடம் சென்று சொன்னார். துவரையைப் பார்த்த நீதிமான் அவற்றை நாய்க்குப் போட்டுவிட்டு, சணல் தண்டு ஒன்றைக் கொடுத்து, "இதை ஊறவைத்து காயவைத்து நூறு ஜெகமுள்ள துணி தயாரிக்கச் சொல்!'' என்றார். ஆனால், அவளோ அதற்குப் பதிலாக மிக மெல்லிய குச்சி ஒன்றைக் கொடுத்து, "இதிலிருந்து நூலை நூற்பதற்கு ஒரு ராட்டினமும், கதிரும் செய்து தரும்படிக் கூறுங்கள்!'' என்றாள். 

     அவளது அறிவின் ஆழத்தைக் கண்ட நீதிமான், "உன் மகளை நாளை என்னை வந்து பார்க்கச் சொல். ஆனால், அவள் நடக்கவோ, சவாரி செய்யவோ கூடாது. வெறுங்காலுடனோ, செருப்புடனோ வரக்கூடாது. பரிசுடனோ, பரிசின்றியோ வரக்கூடாது. இது கடுமையான உத்தரவு!'' என்றார். 

       மறுநாள் பனிச்சறுக்கு வண்டியில் வெள்ளாட்டைப் பூட்டி, ஒரு காலில் மட்டும் செருப்பு அணிந்து, முயல் ஒன்றையும், சிட்டுக்குருவி ஒன்றையும் தெரியாமல் எடுத்துச் சென்றாள், அவள் மிகுந்த புத்திசாலித்தனத்துடன் வருவதைக் கண்ட  நீதிமான், அவள் மீது நாய்களை ஏவினார். பதிலுக்கு இவள் முயலை வெளியே விட, நாய்கள் முயலைத் துரத்தின. 

      "இதோ உங்களுக்கு ஒரு சிறிய பரிசு!'' என்று சிட்டுக்குருவியைக் கொடுத்தாள். அது அவரது கையில் சிக்காமல் பறந்துவிட்டது. தான் சொல்லியபடியே வந்துவிட்ட அவளை நினைத்துப் பெருமைப் பட்டார் நீதிமான். அப்போது இருவர் வழக்கு ஒன்றைக் கொண்டு வந்தனர். 

    "நாங்கள் இருவரும் அடுத்தடுத்து இரு குதிரைகளை ஓர் இரவில் கட்டி இருந்தோம். இரண்டு குதிரைகளும் அன்றிரவே குட்டிகளை ஈன்றன. அவனுடைய குதிரையின் குட்டி இறந்துவிட்டது. என்னுடைய குட்டியைப் பார்த்து அவனுடைய குதிரைக் குட்டி என்கிறான்!'' என்றான் ஒருவன். அடுத்தவனைக் கேட்டதற்கு அவனும் அவ்வாறே பதில் சொன்னான். 

      நீதிமான் இரு குதிரைகளையும் தனித்தனியே கட்டச் சொல்லி, குட்டியை விடச்சொன்னார். குட்டி இரு குதிரைகளிடமும் செல்லாமல் தனியே ஓடிவிட்டது. 

      அந்தத் தீர்ப்பை அவர் புத்திசாலி சிறுமியிடம் கேட்டார். அந்தச் சிறுமி குட்டியைக் கட்டச் சொல்லி குதிரைகளை அவிழ்த்துவிடும்படி கூறினாள். அவ்வாறே செய்தனர். தாய்க்குதிரை தன் குட்டியைத் தேடிக்கொண்டு ஓடிவந்தது. 

      நீதிமானின் தலைக்கனம் குறைந்தது. தன்னைவிட அந்தச் சிறுமி புத்திசாலி என்று ஒப்புக்கொண்டார். அவளுக்கு வெகுமதியளித்துப் பாராட்டினார். 

    நீதி: வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு.
1,9300013
ஒரு நாள் நான் முடிவு செய்தேன் இந்த வாழ்க்கையை துறந்துவிடுவது என்று…
ஆம், எனது வேலை, எனது உறவுகள், என் இறையாண்மை அனைத்தையும் விட்டுவிடுவது என்று.

துறவிகள் போல வாழ்ந்துவிட வேண்டும் என்று முடிவெடுத்து காட்டிற்குச் சென்றேன். அப்போது…

கடைசியாக இறைவனிடம் ஒரு சில வார்த்தைகள் பேச விரும்பினேன்.

“கடவுளே, நான் என் வாழ்க்கையை வாழ்வதற்கு ஏதாவது ஒரு காரணம் கூறுங்கள்?”

கடவுளின் பதில் என்னை வியப்பில் ஆழ்த்தியது…

“ஒரு முறை காட்டைச் சுற்றிப் பார். காடு முழுவதும் புதர் செடிகளும் நீண்டு ஓங்கி வளர்ந்துள்ள மூங்கில்களும் காணப்படுகின்றன அல்லவா?”

“ஆமாம்” என்று நான் பதிலளித்தேன்.

நான் புதர் செடி மற்றும் மூங்கிலு‌க்கான விதைகளை எப்போது விதைத்தேனோ அப்போ‌தி‌ல் இரு‌ந்து அவைகளை மிகவும் பொறுப்புடன் நான் கவனித்து வந்தேன்.

அவைகளுக்குத் தேவையான வெளிச்சம், தண்ணீர், காற்று என அனைத்தையும் வழங்கினேன்.புதர் செடியின் விதை பூமியில் இருந்து சீக்கிரம் இலைகளை விட்டு வளர்ந்தது. அதன் பச்சை நிறம் பூமியை அலங்கரிக்கும் விதமாக அமைந்தது. ஆனால் அப்போது மூங்கில் விதையில் இருந்து எந்த முன்னேற்றமும் இல்லை. ஆனாலும் அதனை நான் கைவிடவில்லை.

இரண்டாவது ஆண்டும் வந்தது. புதர் செடி வேர் விட்டு பரவலாக வளர்ந்து இருந்தது. ஆனாலும் மூங்கில் விதையில் இருந்து ஒரு இலை கூட வந்திருக்கவில்லை. ஆனாலும் நான் அதனை கைவிட்டு விடவில்லை” என்றார் கடவுள்.

“மூன்றாவது ஆண்டும், நான்காவது ஆண்டும் கழிந்தன. எந்த முன்னேற்றமும் இல்லை. ஆனாலும் நான் அதனை மறந்துவிடவில்லை.

ஐந்தாம் ஆண்டு வந்தது. மூங்கில் விதை முளைத்து இரண்டு இலைகள் பூமியை பிளந்து கொண்டு வெளியில் வந்திருந்தது. அது புதர் செடியை விட மிகச் சிறியதாகவும், சாதாரணமாகவும் இருந்தது.ஆனால் 6 மாதம் கழித்து மூங்கில்கள் ஓங்கி உயர்ந்து வளர்ந்தன. பார்க்கவே கம்பீரமாக இருந்தன” என்றார்.

“இத்தனை ஆண்டு கால‌த்‌தி‌ல் மூ‌ங்‌கி‌ல் விதை செத்துவிடவில்லை.தான் வாழ்வதற்குத் தேவையான அளவிற்கு வேர்களை பரப்பியிருந்தது. அந்த வேர்களும் நன்கு உறுதியாக மாறியது. பின்னர்தான் தனது வளர்ச்சியை மூங்கில் விதை துவக்கியது.

எனது படைப்புகளுக்கு பல்வேறு சவால்களை சந்திக்கும் சக்தியை நான் கொடுத்திருக்கிறேன். அவற்றால் கையாள முடியாத பிரச்சினைகளை அவற்றுக்கு நான் எப்போதும் கொடுப்பதில்லை” எ‌ன்று சா‌ந்தமாக ப‌தில‌ளி‌த்தா‌ர்.

மேலும் கடவுள் என்னிடம், “உனக்கு ஒன்று தெரியுமா குழந்தாய், நீ எப்போதெல்லாம் பிரச்சினைகளை சந்தித்தாயோ, துன்பப்பட்டாயோ அப்போதெல்லாம் நீ வேர் விட்டு வளர்ந்து கொண்டிருந்தாய். மூங்கில் விதையையும் நான் விட்டுவிடவில்லை. உன்னையும் நான் விட்டுவிட மாட்டேன். மற்றவர்களுடன் உன்னை ஒருபோதும் ஒப்பிட்டுப் பார்க்காதே. ஒருவேளை அவர்கள் வெறும் முட்புதர்களாகக் கூட இருப்பார்கள்” என்றார்.

“மூங்கிலும், புதர் செடிகளும் காட்டினை அலங்கரிப்பவைதான். ஆனா‌ல் இரண்டும் வெவ்வேறானவை என்பதை புரிந்து கொள்ள வேண்டும்” என்றார்.

இறுதியாக, “உன்னுடைய நேரம் வந்துவிட்டது. நீ வளர்வதற்கான நேரம் இதுதான்”

நான் கேட்டேன், “என்னால் எவ்வளவு தூரம் வளர முடியும்?”

“மூங்கில் வளரும் அளவிற்கு உன்னாலும் வளர முடியும்” என்று நம்பிக்கை அளித்தார் கடவுள்.

“எவ்வளவு தூரம் மூங்கில் வளரும்” என்று கேள்வி எழுப்பினேன் நான்.

“அதனால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு வளரும்” என்றார் அவர்.

“அதனால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு உயரமா?” என்று வியந்தேன் நான்.

“ஆம். அதுபோல நீயும் உன்னால் எவ்வளவு முடியுமோ அந்த அளவிற்கு முன்னேற முடியும்” என்று கூறி மறைந்தார்.

நான் காட்டில் இருந்து நம்பிக்கையுடன் புறப்பட்டேன். மீண்டும் இந்த கதைக்கே திரும்பினேன்.

ஆம், இது உங்களையும் முன்னேற்ற உதவும் என்று நம்புகிறேன்.
4,750008
ஒரு 'ரிடையர்' ஆன ஊழியருக்கு பெரியவாளின் மகத்தான மனிதநேய உபதேசம்"

பெரியவா உபதேசம் செய்து முடித்தவுடன் அப்பெரியவரின் மகன், அவரை தேடிக் கொண்டு அங்கே வந்து விட்டான், வீட்டிற்கு அழைத்துப் போக. பொருள் பொதிந்த புன்னகையோடு மகான், அவரை மகனுடன் அனுப்பி வைத்தார்.

(படித்தால் புல்லரிக்கும்)

தொகுத்தவர்-ரா.வேங்கடசாமி
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.

ஒரு பக்தர்....தினசரி மடத்திற்கு வரக்கூடியவர். அன்று மகானின் முன் நின்றபோது, அவரது முகத்தில் கவலை ரேகைகள். இதைக் கவனித்த பெரியவா....

"ஏன் என்ன விஷயம்?" என்று அன்பொழுகக் கேட்கிறார்.

"ரிடையர் ஆன பிறகு நான் மிகவும் .கஷ்டப்படுகிறேன்.." என்கிறார் அவர்.

"ஏண்டா?" பெரியவா கேட்கிறார்.

"யாரும் வீட்டில் என்னை மதிப்பதே இல்லை... கவனிப்பும் சரி இல்லை. காப்பி கூட சமயத்தில் கிடைப்பதில்லை" என்று சொல்லிக் கொண்டே போனார்.

அவரது மனக்குமுறல்களை புன்சிரிப்போடு கேட்டுக் கொண்டு இருந்தார் அந்த மகான்.

"உத்தியோகத்தில் இருக்கும்போதே இறந்திருக்கலாம் போல் எண்ணத் தோன்றுகிறது. பையன்கள் கூட என்னை மதிக்கமாட்டேன் என்கிறார்கள்" என்று முடித்தார் அம்முதியவர்.

பெரியவா அமைதியாகச் சொன்னார்....

"இது எனக்குப் பெரிய விஷயமாகவே தெரியவில்லை. நீ இப்போது ஆபீசுக்குப் போவதில்லை இல்லையா? காலையில் எல்லாருக்கும் முன் எழுந்து,குளித்துவிட்டு ஜெபம் செய்.. அதைப் பார்க்கும் குடும்பத்தினர் உனக்கு பயபக்தியோடு காப்பி கொண்டு வந்து கொடுப்பார்கள். வீட்டு வேலைகளை இழுத்துப் போட்டுச் செய்.... பேரன்களுக்கு படிப்பு சொல்லிக் கொடு...அவர்களை பள்ளிக்கூடத்திற்கு அழைத்துக் கொண்டு போ.... அதோடு அவர்கள் இதைச் செய்ய வேண்டும்...... அதைச் செய்ய வேண்டும் என்று நீ எதிர்பார்க்காதே....
எதிர்பார்ப்புதான் ஏமாற்றத்தைக் கொடுக்கும்.... இல்லையென்றால் எல்லாமே தானாகவே நடக்கும்"

வேதனையோடு வந்தவர்க்கு தன்னிடம் உள்ள குறையும் தெரிந்தது..  அடுத்தபடியாக தான் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதையும் அவர் புரிந்து கொண்டார்.

" நீ மனதைத் தெளிவாக வைத்துக் கொள்... பகவானை நினைத்துக் கொண்டே இரு... இது வேண்டும்.. அது வேண்டும் என்று ஆசைப்படாதே.. நீ வளர்த்த குழந்தைகள் உன்னை நிச்சயமாகக் கவனிப்பார்கள்" என்றார்.

வயோதிகத்தில் எல்லாருக்கும் வரும் மனவியாதி இது.. ஒருவன் எல்லாவற்றையும், எப்போதும் அனுபவிக்கவும் முடியாது..... அதிகாரம் செய்து கொண்டும் இருக்கவும் முடியாது...
காலப்போக்கில் நம்மை நாமே சரி செய்து கொள்ள வேண்டும் என்பது தான் வாழ்க்கை முறை."

பெரியவா உபதேசம் செய்து முடித்தவுடன் அப்பெரியவரின் மகன், அவரை தேடிக் கொண்டு அங்கே வந்து விட்டான், வீட்டிற்கு அழைத்துப் போக. பொருள் பொதிந்த புன்னகையோடு மகான், அவரை மகனுடன் அனுப்பி வைத்தார்.

மனிதநேயத்தோடு எல்லாவற்றையும் பார்க்கிறார் என்பதற்கு இது ஒரு மகத்தான உதாரணமல்லவா
1,910005
எவ்வளவு மகத்தான மனிதர்

வாடகை செலுத்தாத 94 வயது முதியவர் ஒருவரை, தனது வீட்டிலிருந்து வெளியேற்ற முடிவு செய்த அந்த வீட்டின் உரிமையாளர், அந்த முதியவர் பயன்படுத்திய பழைய கட்டில், சில அலுமினிய பாத்திரங்கள், தட்டு குவளைகளை வீட்டிற்கு வெளியே போட்டு விட்டார்.

சிறிது கால அவகாசம் தருமாறு எவ்வளவோ கெஞ்சிப் பார்க்கிறார் முதியவர்.

வேடிக்கை பார்த்த சிலர் பரிதாபப் பட்டு சிறிது கால அவகாசம் தரச் சொல்ல - வேண்டா வெருப்பாக அந்த முதியவரின் சாமான்களை மீண்டும் அனுமதித்தார் உரிமையாளர்.

  இதை பார்த்துக் கொண்டிருந்த, அவ்வழியே சைக்கிளில் சென்ற பத்திரிக்கையாளர் ஒருவர், அந்த காட்சிகளை படுமெடுத்து , தனது பத்திரிக்கையில் வெளியிட நினைத்து -
"கொடூர நிலக்கிழார், பரிதாப நிலையில் முதியவர் " என்றெல்லாம் தலைப்பு ரெடி செய்து, பத்திரிக்கை ஆசிரியரிடம் சென்று, நடந்தது குறித்து விளக்கமளித்து, படங்களை காட்டினார்.

  படங்களை பார்த்த ஆசிரியர், அதிர்ந்து போனார். "இவர் யாரென்று தெரியுமா ..?" என செய்தியாளரை கேட்க - "எனக்கு எதுவும் தெரியாது" என்றார் செய்தியாளர்.

  இந்தியாவில் இரண்டு முறை இடைக்கால பிரதமராக இருந்த குல்சாரிலால் நந்தா தான் அவர். நேரு இறந்த போதும், சாஸ்திரி இறந்த போதும், இவரைத்தான் பிரதமராக தேர்ந்தெடுத்தார்கள். பொருளாதாரம் படித்த சிறந்த தொழிற்சங்கவாதி.

HMSS தொழிற்சங்கத்தில் அகில இந்திய தலைவராக இருந்தவர். 1948 ல் இவரது தலைமையில்தான் கொல்கத்தாவில் INTUC திறப்பு விழா கண்டது. பல காலம் மத்திய அமைச்சராக இருந்தவர்.

   ஆக, பத்திரிக்கையில் செய்தி வந்தது - அவரது வீட்டின் முன்பு அரசு அதிகாரிகளும், VIP வாகனங்களும் வந்து குவிவதை கண்ட வீட்டு உரிமையாளர் மிரண்டு போனார்.

பிறகுதான் அவருக்கே தெரிந்தது - இருமுறை பிரதமராக இந்த நந்தா தான் இவர் என்று.

  நீண்ட காலம் மத்திய அமைச்சராக இருந்த இவரது நிலையையும் - இன்றிருப்போரின் நிலையையும் நினைத்துப் பார்க்கிறேன் ...

  சுதந்திர போராட்ட தியாகியான இவருக்கு ஓய்வூதியமாக முன்பு தந்த 500 ரூபாயையும் வாங்க மறுத்து விட்டார். "சுதந்திரத்துக்காக போராடினேனே தவிர இந்த  500/- ரூபாய்க்காக அல்ல" என்று கூறிவிட்டார்.

  ஆக, "அரசு இல்லத்துக்கு வாருங்கள்" என வந்த அதிகாரிகளும், அரசியல் வாதிகளும் எவ்வளவோ கெஞ்ச,  "இந்த வயதில் அந்த வசதியெல்லாம் எதற்கு ..?" என மறுத்து விட்டார்.

  இதையெல்லாம் கண்ட, அந்த வீட்டின் உரிமையாளர் நந்தாவின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டார்.

இறுதிவரை உண்மையான காந்தியவாதியாக, சாதாரண குடிமகனைப் போல் வாழ்ந்த இவருக்கு 1997 ல் பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.
1,3600011
ஒரு யானையும், ஒரு நாயும் ஒரே நேரத்தில் கர்பமானது.
மூன்று மாதத்தில் நாய் தன் குட்டிகளை ஈன்றது. ஆறு மாதங்கள் கழித்து மறுபடியும் நாய் கர்பமானது.
அடுத்த மூன்று மாதத்தில் மறுபடியும் நாய் தன் குட்டிகளை ஈன்றது. இது வழக்கமாக தொடர்ந்தது.
தன் பதினெட்டாவது மாதத்தில், நாய் யானையிடம் சென்று கேட்டது.


"யானையே, நீ உண்மையிலே கர்ப்பம் தரிதாயா? நீயும் நானும் ஒரே சமயத்தில் தான் கர்பமாநோம், நான் இதோடு மூன்று முறை கருத்தரித்து குட்டிகளை ஈன்றுவிட்டேன். இப்பொழுது அவைகள் வளர்ந்து விட்டன,
ஆனால் நீ இன்றுவரையில் கார்பமாகவே இருக்கிறாயே, என்னதான் நடக்கிறது சொல்! என்றது.
அதற்கு சற்றும் பதட்டப்படாமல் யானை பதிலளித்தது "தோழியே நீ ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும்,
நான் சுமந்துகொண்டிருப்பது நாய்க்குட்டி அல்ல, யானை குட்டியை.
நான் இரண்டு வருடங்களுக்கு ஒருமுறைதான் ஈன்றெடுக்க முடியும்.
என் குழந்தை விழுவதை உணரும் இந்த பூமி. என் குழந்தை நடந்தால், அதை மனிதர்கள் நின்று பிரமித்து பார்ப்பார்கள்.
நான் பிரம்மாண்டத்தை சுமக்கிறேன், அதுவே பெருமை எனக்கு " என்றது.
நீதி:-
உங்களது உழைப்புக்கும், தேடலுக்கும் அங்கீகாரமும், புகழும் கிடைக்கவில்லை என்று காணாமல் போய்விடாதீர்கள்.
வாழ்க்கையை வாழ்வதை விட, சாதிப்பதுதான் பெருமை.
அதனால்....... நீங்களே உங்களுக்குள் சொல்லிக்கொள்ளுங்கள், " எனக்கென்று ஒரு நேரம் வரும், வானம் வசப்படும். என் சாதனைகள் மக்கள் பிரமிப்பாக பார்ப்பார்கள்.
நான் சாதிக்கும் நேரம் வெகுதூரம் இல்லை. " என்று ..
1,320007
யார் கடவுள்..

மணி இரவு 8...

பசி வயிற்றைக் கிள்ளியது...

இன்றைக்கு வேலைக்காரி வரவில்லை... சமையல்காரியும் வரவில்லை...

எனக்கு சமைக்க மூடும் இல்லை..

இது மாதிரி நேரங்களில்...
ஸ்விக்கி அல்லது ஜூமாட்டோவை துணைக்கு அழைப்பதுண்டு..

இன்று அதற்கும் மூடு இல்லை...

வெளியே வீசிய குளிர் காற்று, என்னோடு சற்று உறவாடு, என்று என்னை அழைக்க....

டூ வீலர் ஸ்டார்ட் செய்து பார்த்தேன்...

மூன்று நாட்கள் டூவீலரை எடுக்கவில்லை...

என் மேல் அதற்கு கோபம் போல...
எனது உதை...
பயனற்று போனது...

ஒரு நல்ல டிபன் சாப்பிட
வேண்டும் என்றால் சிறிது தூரம் நடக்க வேண்டும்...

சின்னதாக ஒரு உரத்த சிந்தனை....
பிறகு...
ஹோட்டலை நோக்கி நடக்க ஆரம்பித்தேன்...👨🏼‍🦯

இன்று ஏன் எனக்கு  இப்படியெல்லாம்  நடக்க வேண்டும்?

வீட்டில குடை இருந்தும், இப்போது மழை வராது என்று நானே முடிவு செய்து ஹோட்டலுக்குப் போகலாம் என்று ஏன் தோன்றியது?

இரவு 8  மணிக்கு ...
ஓட்டலுக்கு போனவன், அங்கேயே சாப்பிட்டுவிட்டு வந்திருக்கலாம்.
சாப்பிடும் நேரத்தில் மழை வந்திருந்தால், கொஞ்ச நேரம் அங்கேயே நின்று விட்டு வந்திருக்கலாம்.

அதையும் செய்யாமல் ஏன் பார்சல் கட்டிக்கொண்டு, தண்ணீர் பாட்டிலும் வாங்கிக்கொண்டு உடனே கிளம்ப வேண்டும் .

எல்லாம் ஏன் இன்று இப்படி ஏடா கூடாமாக நடக்கிறது .

இப்படி வரும் வழியில், கொட்டும் அடை மழையில், ஒதுங்க இடம் கிடைக்காமல் அலைவதற்கா?

கொஞ்ச நேரம் நடந்து, ஓடி தேடியதில் கடைசியாக சின்னதாக பிவிசி சீட் போட்ட பஸ் ஸ்டாப் போல் ஒரு இடம் தென்பட்டது. 

அருகில் சென்றதும் தான் தெரிந்தது....

அது அந்த வீட்டின் மதில் சுவர் அருகில் பதிக்கப் பட்ட கிருஷ்ணர் சிலைக்கு மேல் வைக்கப்பட்ட ஒரு சிறிய தடுப்பு என்று..

4x4 சதுர அடியில் ஒரு சிறு கிருஷ்ணர் சிலை.... அதற்கு ஒரு கம்பிக் கதவு போட்டு பூட்டப்பட்டிருந்தது.

கிருஷ்ணருக்கு துணையாக அந்த சிறிய தடுப்பில் இப்போது நானும்....

இங்கே மழைக்கு ஒதுங்கி நின்ற போது....

என் மனதில் தோன்றியவைகளைத் தான்,
நான் இப்போது உங்களிடம் பகிர்ந்து கொண்டிருக்கிறேன்.

உலகையெல்லாம் காக்கும் ரட்சகன் நீ...
உன் சிலையை காப்பாற்றிக் கொள்ள உன்னால் முடியாது என்று நினைத்து மனிதன் போட்டிருக்கும் இந்தக் கம்பிக் கதவை பார்க்கும்போது உனக்கு சிரிப்பு வரவில்லையா? என்று நினைத்துக் கொண்டு அங்கிருக்கும் கிருஷ்ணருடன் மனதில் பேச ஆரம்பித்தேன்.

உனக்குள்ளே இவ்வுலகம்...
ஆனால்...
நீயோ இந்த கம்பி கதவுக்கு உள்ளே...

எல்லாவற்றுக்கும் ஒரு காரணம் இருக்கப்பா...

என்று என் குருஜி சொன்னது என் நினைவுக்கு வந்தாலும் , என் கேள்விகள் மட்டும் நிற்கவில்லை.

கம்பிக்குள் சிறை  வைக்கப்பட்ட  நீ,யாருக்கு உதவப் போகிறாய்?

நீயே சரணமென்று வேண்டுபவர்களுக்கு இந்த சிறையைத் தாண்டி எந்த ரூபத்தில் உதவ போகிறாய்?

சரி...யாரைப் பற்றியோ நான் ஏன் பேச வேண்டும்.

என்னைப் பற்றி பேசுகிறேன்.
இப்படி வந்து சிக்கிக் கொண்டேனே எனக்கு எந்த ரூபத்தில் வந்து உதவப் போகிறாய்?

இந்தக்  கேள்விகள் எல்லாம் என்னுள் எழச் செய்து என்னை விரக்தி அடையச் செய்யும் உன் உள்நோக்கம் தான் என்ன?

என்றெல்லாம் பேசிக் கொண்டிருந்த நான் ஒரு கணம் ஏதோ ஒரு குரல் கேட்டு திரும்பிப் பார்த்தேன்.

அந்த மதில் சுவரின் மூலையில்....
பழைய துணி மூட்டை போல் ஏதோ கிடக்க அதைச் சற்று உற்றுப் பார்த்தேன்.

அது  துணி மூட்டை அல்ல ஒரு மூதாட்டி.

பூச்சி... புழு... (சில நேரங்களில் பாம்புகள் கூட) என்று வரையறையே இல்லாமல் எல்லா ஊர்வனமும்... சரமாரியாக  வந்து போகும் இடத்தில் ஒரு கிழிந்த அழுக்குத்துணியை மட்டும் சுற்றிக்கொண்டு இங்கு வந்து அடைக்கலம் புகுந்து இருக்கிறாள்.

யாரைப் பெற்ற தாயோ...

ஆதரிக்க ஆளில்லாமல் இங்கே  அடைக்கலம் வந்து இருக்கிறார் .

அவர் ஏதோ  முனகுவது  போல் இருந்தது.

உற்றுக் கேட்டதில் என்னிடம் தான் பேசிக்கொண்டு இருக்கிறார் என்று தெரிந்தது.

என்னமா வேணும்?
பணிவுடன் நான்.

ஐயா.. சாப்பிட ஏதாவது இருந்தால் கொடுங்கய்யா

அந்த மூதாட்டியின் முனகலின் அர்த்தம் எனக்கு புரிந்தது.

அத்தனை கேள்விகள் பொங்கி எழுந்த என் மனதில் இப்பொழுது ஒரே ஒரு கேள்வி மட்டும் தான் மிஞ்சி நின்றது.

இந்த  மழையில்...
இந்த இரவில் ...
ஒரு இளைஞன் (நான் என்னையே சொல்லிக்கிட்டேன் ) நானே இவ்வளவு  தூரம் நடந்து வந்து சாப்பிட சலித்துக் கொள்ளும்போது...

இந்த மூதாட்டி என்ன செய்வார்? என்ற ஒரே ஒரு கேள்வி.

இந்தாங்கம்மா.. தோசை இருக்கு சாப்பிடுங்க.... தண்ணி பாட்டில் கூட இருக்கு...

நடுங்கி ஒடுங்கின அந்த மூதாட்டியின் கையில் ஓட்டலில் வாங்கிய பார்சலை குனிந்து கொடுத்தேன்.

கிருஷ்ணா  நல்லாருப்பா

என்னை ஆசிர்வதிப்பது போல் கையை உயர்த்தி தலையில் கைவைத்து கூறினாள்.

என்னை ஏன் பாட்டி கிருஷ்ணா என்று அழைத்தாள் ...
1,2600014
ஒரு மன்னனுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்தது. இருவருக்கும் சமமான அளவு கல்வி, கலைகள், ஆட்சி செய்யும் முறை என அனைத்தும் கற்று தரப்பட்டது. இருவரும் நன்கு பயிற்சி பெற்றனர். 
      மன்னனுக்கு வயதாகி போனது, அடுத்த அரசனை அறிவிக்க வேண்டிய நிலை வந்தது. அதனால் அமைச்சரவையை கூட்டி  சில திட்டங்கள் போடப்பட்டன. அதன்படி இருவருக்கும் பல கட்டங்களாக போட்டிகள் வைக்கப்பட்டது. இருவரும் சமமான மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றனர். இதனால் இரண்டு மகன்களில்  யாரை அடுத்த அரசனாக அறிவிப்பது என மன்னனுக்கு குழப்பமாக இருந்தது.
      இந்த குழப்பத்தை தீர்ப்பதற்காக அரசன் ஒரு ஞானியை பார்க்க போனார்.
  அந்த ஞானி அரசனிடம், " நாளை உங்கள் மகன்களை அழைத்து வாருங்கள் " என்று சொன்னார். மறுநாள் இரண்டு பேரும் ஞானியின் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.  இருவரையும் வீட்டு திண்ணையில் உட்கார சொல்லிவிட்டு, ஒவ்வொரு ஆளாக போய், பக்கத்தில்
இருக்கிற கிணற்றில் குளித்து விட்டு வாருங்கள் என அனுப்பினார்.
     முதலில் ஒருவன் குளித்து விட்டு வந்ததும் அந்த  இடத்தை போய் பார்த்து விட்டு வந்தார். பிறகு அடுத்தவனை குளிக்க சொல்லிவிட்டு, அவன் குளித்து முடித்ததும் அவன் குளித்த இடத்தை போய் பார்த்து விட்டு வந்தார்.
     பிறகு இருவரையும் மன்னனிடம் கூட்டிட்டு போய், முதலில் குளித்தவனை அழைத்து, "இவனை அடுத்த அரசன் ஆக்குஙகள். இவன் நல்ல முறையில் ஆட்சி செய்வான்" என்றார்.
    இவன் தான் அரியணை ஏற தகுதியானவன் என எப்படி கண்டுபிடித்தீர்கள் என அரசன் ஞானியிடம் கேட்க,
     "நான் இருவரையும் குளிக்க கிணறுக்கு அனுப்பினேன். முதலில் போனவன் கிணற்றில் நீர் இரைத்து குளித்து விட்டு , அடுத்து வருபவருக்கு பயன்படும் என்று மீண்டும் நீர் இரைத்து வாலியில் வைத்து விட்டு வந்தான்.
    ஆனால் இரண்டாவதாக சென்றவன் அவன் மட்டும் குளித்து விட்டு , மீண்டும் தண்ணீர் பிடித்து விட்டு வைக்கவில்லை.  இது அவன் பொது நலன் இல்லாதவன் என்பதை காட்டுகிறது. எனவே முதலாமவன் தான் அரியணை ஏற தகுதியானவன்.
     " கிணற்றில் குளித்துவிட்டு தண்ணீர் பிடித்து வைத்தால் அரியணையா..! இது என்ன சிறுபிள்ளைதனமாக இல்லையா..? என்று அரசன்" கேட்க,
      " சின்ன சின்ன விஷயங்களில் கூட  எவன் அடுத்தவர் நலனில் அக்கறை உள்ளவனாக இருக்கிறானோ, அவனை அரசனாக்கினால் தான்  நாடும் நாட்டு மக்களும்  நலமாக இருப்பார்கள்" என்றார் ஞானி.
   ஞானியை வணங்கி அவர் சொன்னபடியே செய்தான் அரசன்
1,4400010

Showing 10 of 10 posts

மதிப்பீடு

உள்நுழைவு தேவை

Frequently Asked Questions

கதை மாற்றத்தை தரும் (Tamil Story) டெலிகிராம் சேனல் எதைப் பற்றியது?+

கதை மாற்றத்தை தரும் (Tamil Story) (@storywillchange) என்பது tgdio இல் வாழ்க்கைப் பாடங்கள் வகையில் பட்டியலிடப்பட்ட டெலிகிராம் சேனல். தரவரிசை, மதிப்பீடு, விமர்சனங்கள் மற்றும் சமீபத்திய இடுகைகளைப் பார்த்து சந்தா செய்வதற்கு முன் முடிவு செய்யுங்கள். தற்போது tgdio இல் சுமார் 1,971 சந்தாதாரர்கள் உள்ளனர்.

நான் கதை மாற்றத்தை தரும் (Tamil Story) (@storywillchange) ஐ டெலிகிராமில் எப்படி சேர்வது?+

tgdio இல் சேனல் சுயவிவரத்தைத் திறந்து, Join / Open in Telegram மூலம் @storywillchange இல் இலவசமாக சந்தா செய்யுங்கள்.

கதை மாற்றத்தை தரும் (Tamil Story) நல்ல வாழ்க்கைப் பாடங்கள் சேனலா?+

tgdio இல் சேருவதற்கு முன் கதை மாற்றத்தை தரும் (Tamil Story) இன் மதிப்பீடு, விமர்சனங்கள், தரவரிசை மற்றும் இடுகைகளைப் பாருங்கள். தற்போது tgdio இல் சுமார் 1,971 சந்தாதாரர்கள் உள்ளனர். ஒத்த வாழ்க்கைப் பாடங்கள் சேனல்களுடன் ஒப்பிடுங்கள்.

கதை மாற்றத்தை தரும் (Tamil Story) புள்ளிவிவரங்களையும் இடுகைகளையும் எங்கே பார்ப்பது?+

tgdio இல் @storywillchange பக்கத்தைத் திறங்கள் — சந்தாதாரர் புள்ளிவிவரங்கள், தரவரிசை, மதிப்பீடு மற்றும் இடுகைகள். Stats இணைப்பில் வளர்ச்சி விளக்கப்படம் பாருங்கள்.