Tamil Stories தமிழ் கதைகள் Telegram channel photo

Tamil Stories தமிழ் கதைகள்

@tamilstoryPublic Channel

தன்னம்பிக்கை நம்பிக்கை சிறுகதை குட்டிக்கதை நகைச்சுவை ஞானம் மகிழ்ச்சி மனஅமைதி நீதி கருத்து எண்ணம் வாழ்க்கை புன்னகை அன்பு மனஉறுதி விடாமுயற்சி மாற்றம் உற்சாகம் Tamil spiritual Humor positive Change Bliss Fun Peace Thoughts Feelgood Smile short story

2.4k

Last views

5.5k (5,532 subscribers)
உறுப்பினர்
—
Rating
32
Total Posts
Oct 15, 2026, 4:21 AM
புதுப்பிக்கப்பட்டது
Apr 8, 2026
Created
Stats

நீங்கள் தமிழில் உள்ளடக்கத்தைப் பார்க்கிறீர்கள். வேறு மொழிகளில் உள்ள உள்ளடக்கத்தைப் பார்க்க தளத்தின் மொழியை மாற்றவும்.

Channel Information

Channel Information
Channel NameTamil Stories தமிழ் கதைகள்
Username@tamilstory
Categoryஉத்வேகம் தரும் மேற்கோள்கள்
Languageதமிழ்
Countryஇந்தியா
உறுப்பினர்5,532
Channel TypePublic Channel
Created8 ஏப்., 2026
Last Updated15 அக்., 2026 • 7 நாட்களுக்கு முன்
StatusActive

தரவரிசை

உலகளாவிய தரவரிசை
#241957-293
மொழி தரவரிசை
#551+2
வகை தரவரிசை
#1031+1

சந்தாதாரர் வளர்ச்சி

மொத்தம்: 5.5K30 Days growth: -290.5%
09/1509/2009/2509/3010/0510/1010/14
சந்தாதாரர் வளர்ச்சி - 30 Days
DateSubscribers
15:09:20265,561
16:09:20265,561
17:09:20265,554
18:09:20265,554
19:09:20265,554
20:09:20265,554
21:09:20265,554
22:09:20265,554
23:09:20265,554
24:09:20265,554
25:09:20265,554
26:09:20265,554
27:09:20265,554
28:09:20265,554
29:09:20265,554
30:09:20265,554
01:10:20265,554
02:10:20265,554
03:10:20265,554
04:10:20265,554
05:10:20265,554
06:10:20265,554
07:10:20265,554
08:10:20265,554
09:10:20265,554
10:10:20265,554
11:10:20265,554
12:10:20265,554
13:10:20265,554
14:10:20265,532
சந்தாதாரர் வளர்ச்சி - Weekly
DateSubscribers
Week of 06:04:20265,645
Week of 13:04:20265,645
Week of 20:04:20265,645
Week of 27:04:20265,610
Week of 04:05:20265,610
Week of 11:05:20265,587
Week of 18:05:20265,587
Week of 25:05:20265,587
Week of 01:06:20265,569
Week of 08:06:20265,569
Week of 15:06:20265,569
Week of 22:06:20265,569
Week of 29:06:20265,544
Week of 06:07:20265,544
Week of 13:07:20265,544
Week of 20:07:20265,544
Week of 27:07:20265,544
Week of 03:08:20265,548
Week of 10:08:20265,548
Week of 17:08:20265,553
Week of 24:08:20265,560
Week of 31:08:20265,560
Week of 07:09:20265,561
Week of 14:09:20265,554
Week of 21:09:20265,554
Week of 28:09:20265,554
Week of 05:10:20265,554
Week of 12:10:20265,532
சந்தாதாரர் வளர்ச்சி - Monthly
DateSubscribers
April 20265,610
May 20265,587
June 20265,569
July 20265,544
August 20265,560
September 20265,554
October 20265,532
சந்தாதாரர் வளர்ச்சி - Yearly
DateSubscribers
20265,532

சமீபத்திய இடுகைகள்

கதை #S1013
ஆடு மேய்க்கிறவன்.

ஒருத்தன் ஆடு மேய்க்கிறவன். இன்னொருத்தன்விறகு வெட்டுறவன்ரெண்டு பேரும் தினமும் ஒண்ணா உக்காந்து, காலையில இருந்து ஜாலியா பேசிக்கிட்டே இருப்பாங்க. ஆடு மேய்க்கிறவன் அவனோடஆட்டை மேய விட்டுட்டு, அவனும்அந்த விறகு வெட்டுறவன்கூட உக்காந்து பேசிக்கிட்டே இருப்பான்.இப்படியே பேசிப் பேசிக் காலமும் போயிடும்.

ஆனா, சாயங்காலம் ஆனதும் ஆடு மேய்க்கிறவன் என்னபண்ணுவான்?அவனோட ஆடு நல்லா மேய்ஞ்சிருக்கும்.உடனே ஆட்டை கூட்டிக்கிட்டுவீட்டுக்குக் கிளம்பிடுவான்.

அப்போ அந்த விறகு வெட்டுறவனைப்பார்த்தா. கையில விறகும் இருக்காது.அவன் நாள் முழுக்க என்ன பண்ணான்?உக்காந்துபேசுனான். அவ்வளவுதான்.

இதுதான் நம்ம வாழ்க்கையிலயும் நிறையநேரம் நடக்குது.நம்ம கூட உக்காந்துஜாலியா பேசுவாங்க. நம்ம கூட வெளிய வருவாங்க.நம்மகூட நேரம் செலவுபண்ணுவாங்க.அதனால அவங்க நம்ம மாதிரியே இருக்காங்கன்னு நினைச்சுடாதீங்க.

ஆடு மேய்க்கிறவனுக்கு அவனோட வேலை பின்னாடி நடந்துட்டே இருந்துச்சு.அவன் நம்ம கூடஉக்காந்து பேசிக்கிட்டு இருந்தாலும், அவனோட ஆடு மேய்ஞ்சுக்கிட்டே இருந்துச்சு.
அதே மாதிரி, சில பேரு நம்மகூட உக்காந்து ஜாலியா பேசிக்கிட்டே இருப்பாங்க.ஆனா, அவங்களோட வேலைபின்னாடி நடந்துட்டே இருக்கும்.அவங்க பெருசா கஷ்டப்படுற மாதிரியும் தெரியாது. அவுங்க வேலையோ தொழிலோ செய்யிர மாதிரியும் தெரியாது.ஏன்னா, அவங்களுக்குத் தேவையான அடிப்படை விஷயங்கள் ஏற்கனவே அதிகமாகவே இருக்கும்.

அதனாலஅவங்க நம்ம கூட உக்காந்துபேசுறாங்கன்னு மட்டும் பார்த்து, அவங்களும் நம்ம மாதிரிதான் இருக்காங்கஅப்படின்னு நினைச்சுடாதீங்க. முக்கியமா…அவங்க உங்க கூட உக்காந்து ஜாலியா பேசுறாங்கன்னு சொல்லி, நீங்க உங்க வேலையை மறந்துடாதீங்க. இன்ஸ்டாகிராம் ரிலீஸ் இல்ல வேற வீடியோ பார்த்து நேரம் போனாலும் இப்படித்தான்

அந்த விறகு வெட்டுறவன் மாதிரி, நாள் முடிஞ்சதும் உங்க கையில விறகு இல்லாம நிக்காதீங்க. அடுத்தவன் ஆடு மேய்ஞ்சுக்கிட்டிருக்கும்போது, நீங்க விறகு வெட்டிக்கிட்டு இருக்கணும்.அதுதான் வாழ்க்கையில முக்கியம்.
2,4400020
கதை #S1012
உண்மையான அக்கறை

ஒரு சின்னப் பையன் ஒரு ஆட்டை வளர்த்துக்கிட்டு இருந்தான்.அந்த ஆடு அடிக்கடி காட்டுக்குள்ள ஓடிப் போயிடும். எப்பல்லாம் அது காட்டுக்குள்ள ஓடிப் போகுதோ, அப்பல்லாம் அந்தப் பையன் அதைத் தேடிப் பிடிச்சு, மறுபடியும் வீட்டுக்குக் கூட்டிட்டு வந்துருவான்.

ஆனா, அந்த ஆட்டுக்கு இது கொஞ்சம்கூட பிடிக்கல. “இவன் என்ன, நம்மள எப்ப பாத்தாலும் திட்டிக்கிட்டே இருக்கான்? காட்டுக்குள்ள போகக்கூடாதுன்னு சொல்றான். எப்ப பாத்தாலும் நம்மள கூட்டிட்டு வந்து அடைச்சு வைக்கிறான். இவன் ரொம்ப கெட்டவன்!” அப்படின்னு அந்த ஆடு நினைச்சுக்கிட்டு இருந்துச்சு

. ஒருநாள் அந்த ஆடு தனியா இருந்தப்போ, அங்கே ஒரு ஓநாய் வந்துச்சு.அந்த ஓநாய் ஆட்டுக்கிட்ட,“நீ ஏன் இப்படி இங்க அடைஞ்சு கிடக்குற? வெளிய வா. என்னோட வா. அங்கே நீ ஜாலியா இருக்கலாம். உன்னை யாரும் திட்ட மாட்டாங்க. யாரும் எதுவும் சொல்ல மாட்டாங்க.”அப்படின்னு ஆசை வார்த்தை சொல்லுச்சு.

அதைக் கேட்டதும் அந்த ஆட்டுக்கு ஒரே சந்தோஷம்.“அடடா! நம்மள இவ்வளவு நல்லா புரிஞ்சுக்கிற ஒருத்தர் இருக்காரே! அந்தச் சின்னப் பையனைவிட இந்த ஓநாய்தான் ரொம்ப நல்லவன்.”அப்படின்னு நினைச்சு, அந்த ஓநாய்கூட கிளம்பிப் போயிடுச்சு.

கொஞ்ச தூரம் போனதுக்கப்புறம்தான் அந்த ஆட்டுக்கு உண்மை புரியுது. அந்த ஓநாய் நம்ம மேல இருந்த பாசத்துல நம்மள கூட்டிட்டு வரல… அதோட தேவைக்காகத்தான் கூட்டிட்டு வந்திருக்கு!அப்போதான் அந்த ஆட்டுக்கு தான் பண்ணின தப்பு புரியுது. நம்ம வாழ்க்கையிலயும் இதே மாதிரி சில பேர் இருப்பாங்க.நம்ம நல்லதுக்காக சில பேர் நம்மள திட்டுவாங்க.நம்ம தப்பு பண்ணும்போது தடுத்து நிறுத்துவாங்க.அந்த நேரத்துல அவங்க நமக்கு எதிரி மாதிரி தெரிஞ்சிருப்பாங்க.ஆனா, இன்னொரு பக்கம் சில பேர் நம்ம வெற்றிக்கு கைதட்டிக்கிட்டே இருப்பாங்க.“சூப்பரா பண்ற! நீ பெரிய ஆளா வரணும்!” அப்படின்னு சொல்லிக்கிட்டே இருப்பாங்க.

ஆனா, அவங்களோட மனசுக்குள்ள,“இவன் எப்படி இவ்வளவு பெரிய ஆளா ஆகுறான்? இவனை எப்படி கீழே கொண்டு வரலாம்?” அப்படின்னு யோசிச்சுக்கிட்டு இருப்பாங்க.

அதனால, நம்மள திட்டுறவங்க எல்லாருமே நம்ம எதிரிகள் கிடையாது. அதே மாதிரி, நம்மள பாராட்டுறவங்க எல்லாருமே நம்ம நண்பர்களும் கிடையாது.

யார் நம்ம மேல உண்மையான அக்கறை வச்சிருக்காங்கன்னு, அவங்க பேசுற வார்த்தையை வச்சு முடிவு பண்ணாதீங்க… அவங்க செயலைப் பார்த்துதான் முடிவு பண்ணணும்.
2,2300011
கதை #993
தவறு யாருடையது?

அரசாங்கத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற அதிகாரி ஒருவர் தன்னுடைய அறையில் இருந்து எதையோ எழுதிக் கொண்டிருந்தார். அப்போது, பாலைக் கொண்டு வந்து அவர் மேஜை மீது வைத்து விட்டுச் சென்றார் அவருடைய மனைவி.

அதிகாரி அதைக் கவனிக்காமல் எழுதிக் கொண்டிருந்தார். அப்பொழுது, கல்லூரியில் படிக்கும் அவர்களுடைய மகள் ஏதோ ஒரு புத்தகத்தை எடுப்பதற்குச் சென்றாள். மேஜை மீது இருந்த பால் குவளையில் அவள் கைபட்டு, பால் கொட்டிப் போயிற்று.

உடனே அந்தப் பெண், “அப்பா என்னை மன்னித்து விடுங்கள், தவறுதலாக என் கைபட்டு, பால் கொட்டிவிட்டது” என்றாள்.

"அம்மா! உன் தவறு அல்ல, உன் தாய் பாலைக் கொண்டு வந்து வைத்ததுமே, அதை எடுத்து நான் குடித்திருக்க வேண்டும். அப்போதே குடிக்காதது என் தவறு” என்றார் அதிகாரி.

அதைக் கேட்டுக் கொண்டிருந்த அதிகாரியின் மனைவி வந்து, “உங்கள் இருவர்மீதும் தவறு இல்லை, நீங்கள் எழுதிக் காண்டிருக்கும் போது நான் கொண்டு வந்து பாலை வைத்தது ன் தவறு” என்றாள்.
2,250000
கதை #991
நாவடக்கமின்மை

ஒரு முறை அந்த நாட்டு அரசரிடம் செல்வாக்கு பெற்ற இளைஞர் ஒரு காட்டின் வழியே போய்க் கொண்டிருந்தார் அவர் ஒரு மண்டை ஓட்டைப் பார்த்தார் சும்மா தெரிந்து கொள்வதற்க்காக அதனிடம் ஒரு கேள்வி கேட்டார் எப்போதுமே எதையும் அறிந்து கொள்வதில் அவர் ஆர்வமுடையவர் “ஐயா! எது உங்களை இங்கே கொண்டு வந்தது?" என்றார் உடனே அந்த மண்டை ஓடு “நாவடக்கமின்மையே என்னை இங்கே கொண்டு வந்தது ஐயா!” என்றதும் இளைஞர் பிரமித்துவிட்டார் மண்டை ஓடு பேசியதை அவரால் நம்பவே முடியவில்லை

ஆனால் அவர் அதை காதால் கேட்டாரே எனவே அரசவைக்கு ஓடினார்.” நான் ஒரு அதிசயத்தைப் பார்த்தேன் ஒரு மண்டை ஓடு பேசுகிறது நம்ம ஊருக்கு பக்கத்தில் இருக்கும் காட்டில்தான் அது கிடக்கிறது" என்றார் அரசனாலும் அதை நம்ப முடியவில்லை ஆனாலும் அவனுக்கும் ஆர்வம் ஏற்பட்டது சபையே மொத்தமாகக் கிளம்பியது. அவர்கள் காட்டுக்குள் போனார்கள் இளைஞர் அந்த மண்டை ஓட்டின் அருகில் போய் மறுபடியும் அதே கேள்வியைக் கேட்டார் “ஐயா! எது உங்களை இங்கே கொண்டு வந்தது ஐயா?"

ஆனால் மண்டை ஓடு மவுனமாக இருந்தது அவர் திரும்ப திரும்ப கேட்டார் ஆனால் மண்டை ஓடோ வாயே திறக்கவில்லை அரசன் சொன்னான் “எனக்கு முதலிலேயே தெரியும் நீ ஒரு பொய்யன் ஆனாலும் இது ரொம்ப அதிகம் நீ செய்த குறும்புக்கு தக்க தண்டனையை நீ அனுபவித்தாக வேண்டும் இளைஞரின் தலையை வெட்டி அதை அந்த மண்டை ஓட்டின் பக்கம் எறும்புகள் தின்னும்படி வீசிவிடுங்கள்! என்று தன் காவலாளிக்கு கட்டளையிட்டான்.

மன்னன்அரசன் அவனது பரிவாரங்கள்
எல்லோரும் போனபின் மண்டை ஓடு மறுபடியும் பேசத்தொடங்கியது “எது உங்களை இங்கே கொண்டு வந்தது ஐயா?” என்று கேட்டது அதற்கு இளைஞரின் வெட்டப்பட்ட தலை “நாவடக்கமின்மையே என்னை இங்கே கொண்டு வந்தது ஐயா!? என்று பதில் சொன்னார்.
2,240000
கதை #S1011
சின்னசின்ன சவால்கள்

ஒரு சயின்டிஸ்ட் பசியோட இருந்த ஒரு கழுகு கூட்டத்தை ஆபத்தே இல்லாத ஒரு தனி தீவுலவிடுறார். அங்க சாப்பாட்டுக்கு எந்த குறையுமே இல்ல. இதுதான் சொர்க்கம்னு நினைச்ச அந்த கழுகுகள் பறக்குறதே விட்டுருச்சு. ஏன்னா உட்கார்ந்த இடத்திலயே சாப்பாடு. ஈட், ஸ்லீப் ரிபீட்அவ்வளவுதான்.

அந்தசயின்டிஸ்ட் எல்லாத்தையும் அமைதியா கவனிச்சிட்டு இருந்தார். நாட்கள் கடக்க கடக்க கழுகுகளோட இறக்கைகள் பலவீனமாகுது. தசைகள் சக்தி இழக்குது. அதுங்களால இப்ப ஒரு கிளையைபிடிச்சு நிக்க கூட முடியல. இன்னும் சொல்லப்போனா உடம்புல கொழுப்பு ஏறி போனதுனால வானத்தோடராஜாவுக்கு இப்ப பறக்குறதே ஒருசுமையா மாறிடுச்சு.

அந்த கூட்டத்தில இருந்த ஒரு வயதான கழுகாலமட்டும் இதை ஏத்துக்கவே முடியல.இதை எப்படியோ மாத்தணும்னு சொல்லி அங்க இருந்த சாப்பாட்டைஎல்லாம் கவிழ்க்குது. கூடைகளை உடைக்குது.

ஆனா மத்த கழுகளோ டேய் கிழவா நாங்க ஜாலியா இருக்கறது உனக்கு பிடிக்கலன்னு சொல்லி அதை பயங்கரமா தாக்குறாங்க. கடைசியில அதை தீவை விட்டு விரட்டுறாங்க.

நாட்கள் கடக்குது. இப்ப அந்த சயின்டிஸ்ட் அந்த தீவுக்குள்ள ஒரு சிறுத்தை கூட்டத்தை கொண்டு வராரு. இதை பார்த்த கழுகுகள் தப்பிச்சு பறக்க முயற்சி பண்ணுது. ஆனா பலம் இழந்தஅந்த இறக்கைகள் ஒத்துழைக்கல. சிறுத்தைகள் பெருசா எஃபர்ட்டே போடாம அங்க இருந்த கழுகளை ஒவ்வொன்னா வேட்டையாட ஆரம்பிக்கிறாங்க.

ஈஸியான வாழ்க்கை உங்களை பலசாலியா அல்ல. பலவீனமாதான் மாத்தும். அது ஒரு வலைதான். போராடாம வெற்றியோ வளர்ச்சியோ கிடைக்காது
அதனால வாழ்க்கையில எந்த கட்டத்திலும் முயற்சியை மட்டும் விட்றாதீங்க. சின்ன சின்ன சவால்களை சந்திக்க பழகுங்க. அதுதான் வாழ்க்கையில எதிர்பாராத நேரங்களில் உங்களை போராட தயாரா வைக்கும்.
4,3500016
கதை #S1010
களைப்பு

ஒரு ஞானி அவர் தன்னுடைய சீடர்களுக்கு திரும்பத்திரும்ப ஒன்றைச் சொல்லிக் கொண்டே இருப்பாராம். "உங்களுக்கு களைப்பு ஏற்படுகிறது என்றால் சோர்ந்து உட்கார்ந்து விடாதீர்கள். தொடர்ந்து வேலை செய்து கொண்டே இருங்கள்" என்பாராம்.

சீடர்களுக்கு இது வேடிக்கையாகப்பட்டது.

சீடர்களில் ஒருவர் ஒருநாள் உடல் முடியாமல் களைத்துப் போய் படுத்துவிட்டார். படுத்தவுடன் குருசொன்ன வாக்கியம் நினைவுக்கு வந்தது. உடனே களைப்பைப் பொருட்படுத்தாமல் எழுந்து உட்கார்ந்தார். பின்னர் தோட்டத்தை நோக்கி நடக்கலானார். உற்சாகமாக அவர் நடக்க ஆரம்பிக்கவே இயற்கையிலிருந்து சக்தி தன்னுள் நுழைவதை உணர்ந்தார். சற்றநேரத்தில களைப்பு இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிட்டதாம்.

அந்த சீடர் சொல்கிறார் களைப்பு உடலில் இல்லை. மனதில்தான் இருக்கிறது. மனதை உற்சாகப் படுத்திக் கொண்டால்
7,4200018
கதை #S1009
கைதட்டல்

50 மாணவர்கள் கொண்ட ஒரு வகுப்பில் திருத்தப்பட்ட வினாத்தாள்களை ஆசிரியர் வரிசையாக கொடுக்கிறார். முதல் மூன்று மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு வகுப்பில் உள்ள அனைவரும் கைதட்டுகின்றனர். நான்காம் மதிப்பெண் எடுத்தவனுக்கு பாதிபேர் மட்டுமே கைதட்டுகின்றனர். ஐந்தாம் மதிப்பெண் எடுத்தவனுக்கு இன்னும் குறைவான கைதட்டல்கள். தொடர்ந்து ஆறாவது, ஏழாவது மதிப்பெண்கள் என கைதட்டல்களின் சத்தம்
குறைந்துகொண்டே போனது.

ஆனால், ஒரே ஒரு மாணவன் மட்டும் தொடர்ந்து எல்லோருக்கும் கைதட்டிக் கொண்டே இருக்கிறான். வகுப்பில் இறுதி மதிப்பெண் எடுத்த மாணவன் என்று அம்மாணவனை ஆசிரியர் அழைக்கிறார். வகுப்பில் இப்பொழுது கைதட்டல் சத்தமே இல்லை. வகுப்பே பேரமைதியாக இருக்கிறது.

சில நொடிகளில் கைதட்டல் சத்தம் ஒவ்வொன்றாக ஆரம்பிக்கிறது.

நமக்காக இவன் கைதட்டி ஊக்குவித்தானே. இவனுக்கு நாமும் கைதட்டனும் என ஒரு மாணவன் கைதட்ட ஆரம்பிக்கிறான். நாம இவ்வளவு குறைவான மதிப்பெண் எடுத்தும் நமக்காக இவன் மட்டும் கை தட்டுனானே நாமளும் இவன ஊக்குவிக்கனுமே என்று ஒவ்வொரு மாணவனாக கைதட்ட ஆரம்பிக்கின்றனர். இப்பொழுது அந்த வகுப்பறையே ஆரவாரமாக மாறுகிறது.

முதல் மதிப்பெண் எடுத்த மாணவனுக்கு கூட இந்த கைதட்டல்கள் இல்லை. ஆசிரியருக்கு பெரும் அதிர்ச்சி. இப்பொழுது அந்த மாணவர்கள் குறைவான மதிப்பெண் எடுத்த அவனுக்கு நாம கைதட்டனுமா என்று யாரும் நினைக்கவில்லை. இறுதியில் அந்த ஆசிரியரே கைதட்டி அவனது விடைத்தாளை அம்மாணவனிடம் கொடுக்கிறார்.

அவனுக்கு அது மிக ஆச்சரியமாக இருக்கிறது. அந்த கைதட்டல் அவனுக்காக ஒலிப்பது புதுமையாக உணர்கிறான். அது அவனுக்கு பெரும் ஊக்கமாக அமைகிறது. அந்த கைதட்டல்களின் ஒலிக்காக தொடர்ந்து படிக்கிறான். அடுத்த முறை தேர்வில் முதல் பத்து மதிப்பெண்ணிற்குள் வருகிறான்.

எல்லோரும் ஏதோ ஒரு வகையில் அங்கீகாரத்தையும் பாராட்டுக்களையும் எதிர்பார்க்கிறோம். தன்னால் முடிகிறதோ இல்லையோ அடுத்தவர்களை பாராட்டி ஊக்குவிப்பது என்பது மிகப்பெரிய விஷயம். நிச்சயம் அதுவும் நம்மிடமே ஒருநாள் வந்து சேரும்.
6,060009
கதை #S1008
பயம் எதற்கு

ஒரு ஊரில் ஒரு அம்மாவும், மகனும் இருந்தார்கள். அதில் அந்த மகனுக்கு ஒரு பிரச்னை இருந்தது. அது என்னவென்றால், யாருக்காவது கெட்டது நடப்பதை பார்த்தாலோ அல்லது கேள்விப்பட்டாலோ நமக்கும் அப்படி நடந்துவிடுமோ? என்று எண்ணிப் பயப்படுவான். இதை கவனித்த அந்த தாய் தன்னுடைய மகனை குணப்படுத்த வேண்டும் என்று நினைக்கிறார். அதனால், அந்த ஊரில் இருக்கும் சிறந்த மனோத்தத்துவ நிபுணரிடம் தன் மகனை அழைத்துச் செல்கிறார்.

அந்த தாய் தன்னுடைய மகனின் பயத்தைப் பற்றி அந்த மனோதத்துவ நிபுணரிடம் விவரிக்கிறார். அவரும் அந்த பையனை சிறிது நேரம் தனியாக கூட்டிச் சென்று பேச்சுக் கொடுக்கிறார். அந்த டாக்டர் அந்த பையனுடைய மனது இருந்த நிலையை புரிந்துக் கொண்டு அவனுக்கு அறிவுரையும் சொல்லி அனுப்பி வைக்கிறார்.

டாக்டர் பெரிதாக சிகிச்சை ஏதும் செய்யாததைப் பார்த்த தாய் சலித்துக் கொண்டார், ‘இவர் என்ன மாத்திரை, மருந்து எதுவுமே தரவில்லையே?’ என்று நினைத்து வேதனையடைந்தார்.

சரியாக ஆறு மாதங்கள் கழித்து அந்த தாய் கையில் பூங்கொத்துடன் அந்த டாக்டரை சந்திக்க வந்தார். அந்த பூங்கொத்தை டாக்டரிடம் கொடுத்துவிட்டு மகிழ்ச்சியாக பேசத்தொடங்கினார். ‘டாக்டர் நீங்கள் அப்படி என் பையனிடம் என்னதான் கூறினீர்கள்? முன்பு போல சோகமாகவும், சோர்வாகவும் அவன் இருப்பதேயில்லை. இப்போதெல்லாம் அவன் முகத்தில் ஒரு தெளிவு இருக்கிறது’ என்று ஆச்சர்யமாக கேட்டார்.

அதற்கு அந்த டாக்டர், ‘அம்மா! உங்கள் பையன் இங்கே வந்தபோது அவனுக்குள் சுயநலம் அதிகமாக இருந்தது. அதனால்தான் யாருக்காவது கெட்டது நடந்தால் அவர்களைப் பற்றி சிறிதும் யோசிக்காமல் தனக்கு அது நடந்து விடுமோ? என்று பயந்தான். அந்த எண்ணத்தை சிறிது மாற்றி பொது நலமாக அவனுக்கு யோசிக்கக் கற்றுக்கொடுத்தேன்

யாருக்காவது கெட்டது நடக்கும் பொழுது அவர்களுக்கு ஏதேனும் நம்மால் உதவி செய்ய முடியுமா? அல்லது அவர்களுக்காக வேண்டிக் கொள்ள முடியுமா? என்று யோசித்துப்பார் பயம் தன்னாலேயே குறைந்துவிடும்’ என்று கூறினேன்.

‘அதுபோலவே அவனும் யோசித்ததால், அவனுள் இருந்த பயம் வெளியே போய் இப்போது தெளிவான ஆளாக மாறிவிட்டான்’ என்று கூறினார்.
3,850007
கதை #S1007
முழு உரிமையும் எனக்கு தான்

ஒரு பிச்சைக்காரனுக்கு லாட்டரில கோடி ரூபா பரிசு விழுந்தது. அத வச்சு அவன் ஒரு கோவிலை கட்டினான். பார்த்தவர்கள் எல்லோரும் "பரவாயில்லையே! பிச்சைக்காரன் லாட்டரி பணத்தில் புண்ணியம் சேர்த்துக் கொண்டான்" என்று கூறி சென்றார்கள்.

அவன் நண்பன் கேட்டான் “ஏண்டா எவ்வளவோ தேவைகள் இருக்குன்னு தானே பிச்சை எடுத்துட்டு இருக்கோம். ஏண்டா கோவில் கட்டி பணத்தை வீணாக்கின?”

எந்த கோவிலுக்கு போனாலும் நான் தான் உக்காருவேன் நீ உட்காரக் கூடாதுன்னு ஒரே சண்டை. இனி இது என் கோவில். பிச்சை எடுக்கிற முழு உரிமையும் எனக்கு தான். நான் மட்டும் தான் என் கோவில் வாசல்ல உட்கார்ந்து பிச்சை எடுப்பேன். எவன் வந்து இங்க உட்காரக் கூடாதுன்னு சொல்றான்னு பார்க்குறேன்.” என்றான் அந்த பிச்சைக்காரன்.
2,410005
கதை #S1006
விடாக்கண்டன்கொடாக்கண்டன்

ஒரு குருவிடம், “வழக்காடுதல்” கற்றுக் கொள்ள சென்றான் ஒரு இளைஞன்.

அவனை சிறந்த வழக்கறிஞராக்குவதாக உறுதியளித்து, அதற்கு தட்சணையாக, ஒரு பெரும் தொகை கேட்டார் குரு.

அந்த இளைஞன், பாதி தொகையை அப்போதே தந்து விடுவதாகவும், மீதி தொகையை தான் எடுத்துக் கொள்ளும், முதல் வழக்கில் ஜெயித்தால் மட்டுமே தர முடியும் என்றான்.

தன் மாணவன் நிச்சயம் ஜெயிப்பான் என்ற நம்பிக்கையில், குருவும் அதற்கு ஒப்புக் கொண்டார்.

அதன்படியே ஒரு ஒப்பந்தமும் எழுதி, இருவரும் கையெழுத்திட்டனர்.

இளைஞன் அங்கேயே தங்கி கல்வி கற்றான்; கல்வி முடிந்ததும் குருவிடம் விடைபெற்று சென்று விட்டான்.

இரண்டு, மூன்று மாதமாகியும், அவனிடம் இருந்து எந்த பணமும் வராததால், குருவே அவனைத் தேடிச் சென்றார்.

அவனோ, தான் இதுவரை எந்த வழக்கையும் எடுத்துக் கொள்ளவில்லை என்றும், அதனால், ஒப்பந்தப்படி இப்போது பணம் தர முடியாது என்று சொல்லி விட்டான்.

எப்போது கேட்டாலும், அவன் இதையே சொல்வதால் பொறுமை இழந்த குரு, “இந்த இளைஞன் எனக்கு தருவதாக சொன்ன தொகையை தராமல் ஏமாற்றுகிறான்.” என்று, அவன் மீது ஒரு வழக்கு தொடர்ந்தார்.

அந்த இளைஞன் சந்தித்த முதல் வழக்கு இதுதான்.

“குருவுக்கு இவன் பணம் தர வேண்டும்.” என்று நீதிபதி தீர்ப்பளித்தால், முதல் வழக்கில் சிஷ்யன் தோற்றவனாகிறான்.

அதனால், ஒப்பந்தப்படி பணம் தர வேண்டியதில்லை.
“பணம் தர வேண்டாம்.” என்று தீர்ப்பு வந்தால், தீர்ப்புப்படி சிஷ்யன் பணம் தர வேண்டியதில்லை.

எப்படிப் பார்த்தாலும் இவன் பணம் தர வேண்டியதில்லை இது இளைஞன் தரப்பு வாதம்.

“பணம் தர வேண்டும்” என்று தீர்ப்பு வந்தால், தீர்ப்புப்படி சிஷ்யன் பணம் தர வேண்டும்.

“பணம் தர வேண்டாம்” என்று தீர்ப்பு வந்தால், இவன் வழக்கில் ஜெயித்தவனாகிறான்.

எனவே, ஒப்பந்தப்படி பணம் தர வேண்டும். எப்படிப் பார்த்தாலும் சிஷ்யன் பணம் தர வேண்டும். இது குரு தரப்பு வாதம்
2,370006
கதை #S1005
காசு செலவானாலும்

அந்த குருவிடம் குருடம் பல சீடர்கள் கல்வி கற்றுக்கொண்டிருந்தனர்.

அந்தச் ஆசிரமத்தில் தேனீர் கோப்பைகள் அனைத்தும் மிகவும் மெல்லியவையாகவே இருந்தன. அவற்றைக் கொஞ்சம் கவனமாகக் கையாளாவிட்டால் கீழே விழுந்து உடைந்து சிதறி விடும். இதைப் பார்த்த சீடன், குருநாதரிடம் சென்றான். "நீங்கள் ஏன் மோசமான டீ கோப்பைகளை வாங்கி வைத்திருக்கி றீர்கள்?" என்று கேட்டான்.

“மோசமான டீ கோப்பைகளா, என்னப்பா சொல்கிறாய்?"

"ஆமாம். இங்கே வந்த ஒரு மாதத்தில் நான் ஏழு டீ கோப்பைகளை உடைத்து விட்டேன்." என்றான் அந்தச்சீடன்.

"கொஞ்சம் காசு செலவானாலும் பரவாயில்லை என்று நல்ல, கனமான கோப்பைகளாகப் பார்த்து வாங்கி வைக்கக்கூடாதா?”

அப்படி சிஷ்யன் சொன்னதும், குரு சிரித்தார்.
"கோப்பைகளை உடைத்தது நீ. ஆனால் குற்றம் சொல்வது அவற்றின் மீது. நல்ல நியாயம்மப்பா" என்றார்.

"நான் பதினெட்டு ஆண்டுகளாக ஒரே டீ கோப்பையைத்தான் பயன்படுத்துகிறேன்" என்றதும்
சீடன் அதிர்ந்து போய் நின்றான்.

குரு தொடர்ந்து சொன்னார். "கோப்பைகளை எப்படிக் கையாள வேண்டும் என்று பழகிக்கொள்ள வேண்டியது உன்னுடைய தேவை; வேலை. அது உன்னால் முடியாவிட்டால் அதற்காகக் கோப்பைகளை மாற்றிவிட வேண்டும் என்று நினைக்காதே. மனிதன்தான் சூழ்நிலைக்கு ஏற்ப மாறிக்கொள்ள வேண்டும். அவனுக்கு ஏற்பச் சூழ்நிலை மாறும் என்று எதிர்பார்த்துக்காத்திருக்கக்கூடாது" என்றார்.

சூழ்நிலையை நாம் மாற்ற முடியாது. ஆனால், சூழ்நிலைக்கு ஏற்ப நாம் மாறிக்கொள்ள முடியும்
1,990006
கதை #S1004
தலைவன்

பெரும் மக்கள் கூட்டம் ஒன்று, தங்கள் இடத்திலிருந்து இன்னொரு நிலப்பரப்புக்கு இடம்பெயர்ந்து சென்றுகொண்டிருந்தது.

பயணத்தில் மக்களிடையே சின்னச்சின்ன சச்சரவுகள் ஏற்பட்டன. அவற்றைத் தீர்த்து வைக்க தலைவன் தேவை என்ற முடிவுக்கு அவர்கள் வந்தார்கள்.
தங்கள் தலைவன் வலிமைமிக்கவனாக, தைரியமானவனாக இருக்க வேண்டும் என்று தீர்மானித்து, தங்கள் கூட்டத்தில் 10 நபர்களைத் தேர்ந்தெடுத்தார்கள்.

அந்த 10 பேரும் உடல் வலிமைமிக்கவர்கள். தைரியமானவர்கள். இந்த 10 பேரில் யார் தலைவனாவது என்பதை விவாதிக்க இரவில் தீ மூட்டி சுற்றி அமர்ந்திருந்தனர்.

அவர்கள் பேசுவதை மக்கள் பார்வையாளர்களாக இருந்து கேட்டுக் கொண்டிருந்தார்கள்.

முதலாமவர், தான் யானையை வீழ்த்திய கதையை சொன்னார். இரண்டாமவர் மலை உச்சியிலிருந்து குதித்துப் பிழைத்த கதையைச் சொன்னார்.

இப்படியே ஒவ்வொருவரும் அவர்களுடைய வீரதீர பராக்கிரமங்களைப் பேசிக்கொண்டே இருந்தார்கள்.
பத்தாம் மனிதர் எதுவும் பேசவில்லை. திடீரென்று எழுந்த அவர், “என்ன இது. நெருப்புக்கு விறகை சரியாக அடுக்கவில்லையே” என்று நெருப்புக்குள் கைகளை விட்டு விறகுகளை ஒழுங்குபடுத்தினார்.

மற்ற ஒன்பது பேரும் அவரை தலைவனாக மறுபேச்சின்றி ஏற்றுக் கொண்டார்கள்.
பேச்சைத் தவிர்த்து, செயலில் காட்டிய பத்தாம் மனிதர்தான் சரியான தலைவன் என்று மக்கள் அவரைப்` புகழ்ந்தார்கள்.
2,060004
கதை #S1003
இளவரசன்

இளவரசன் ஒருவன் ஆற்றில் குளிக்கப் போனான். போகும்போது தேவையில்லாமல் தன் பணியாளர்களைத் திட்டிக் கொண்டே போனான். அன்று ஆற்றில் வெள்ளம் அதிகமாக இருந்ததால், அது இளவரசனை அடித்துக் கொண்டு போயிற்று. அவனிடம் திட்டு வாங்கிய பணியாளர்களும், இளவரசனைக் காப்பாற்ற பெரிதாய் எந்த முயற்சியும் எடுக்கவில்லை.

அலறியபடி ஆற்றின் போக்கில் போய்க் கொண்டிருந்த இளவரசனுக்கு, பற்றிக்கொண்டு கரையேற ஒரு மரக்கிளை கிடைத்தது. அதை பற்றிக் கொண்டான். அக்கிளையில் ஒரு முயலும், எலியும், பூனையும் நனைந்தபடி இருந்தன. இவன் அவற்றைக் கண்டுகொள்ளாமல் இன்னொரு பக்கம் கிளையை இறுகப் பற்றிக் கொண்டான்.

அவ்வழிவே வந்த வேடன், அந்தக் கிளையில் கயிற்றை வீசி இழுத்து எல்லோரையும் காப்பாற்றினான். மயங்கிக் கிடந்த இளவரசனை தன் வீட்டுக்குத் தூக்கி வந்து, அவன் எழுந்ததும் உணவு கொடுத்தான். பசியால் உணவை வேக வேகமாக உண்டு முடித்த இளவரசன், பசியாறியதும் ஓவென்று அழுதான்.

வேடன் காரணம் கேட்டபோது, “கேவலம் இந்த முயல், பூனை, எலி ஆகியவற்றுடன் என்னையும் சரிக்கு சமமாக அமர வைத்து உணவு பரிமாறிவிட்டாயே. நான் யார் தெரியுமா? இந்நாட்டின் இளவரசன். நானும் இந்த அற்ப உயிர்களும் சமமா?” என்று கோபத்தில் சீறினான்.

அதற்கு வேடன், “இளைஞனே! நீ மரக்கிளையைப் பற்றும்போது இம்மூன்று உயிர்களும் உனக்கு முன்னரே அக்கிளையில் அமர்ந்திருந்தார்கள். அப்போது நீ கௌரவம் பார்த்து கிளையைப் பிடிக்காமல் இருந்திருக்கலாமே.

நீ பசியுடன் கண் விழித்தபோதும் இந்த மூன்றும் உன்னருகேதான் இருந்தன. அப்போது நீ இதே காரணத்தைச் சொல்லி சாப்பிட மறுத்திருக்கலாமே. உனக்குப் பிரச்னை வரும்போது மட்டும் கௌரவத்தை ஒதுக்கி வைக்கிறாய். உன் பிரச்னை தீர்ந்து நிம்மதியாக இருக்கும்போது கௌரவம் பார்த்து பிறரை ஒதுக்குகிறாய். இது எவ்வளவு மோசமான குணம். வாழ்க்கையில் நீ எவ்வளவு திறமைகளை வளர்த்திருந்தாலும், எவ்வளவு பெரிய அதிகாரத்தில் இருந்தாலும், நல்ல நோக்கமும் எண்ணமும் இல்லையென்றால் அவையெல்லாம் வீண்” என்றான். தன் தவறை உணர்ந்த இளவரசன், மன்னிப்பு கேட்டு திருந்தினான்.

நல்ல நோக்கமில்லாத மனிதனுக்கு எவ்வளவு அதிகாரம் கிடைத்தாலும், திறமை இருந்தாலும் அது வீண்தான்!
1,710006
கதை #S1002
உழைப்பு

ஊரில் மிக மிக சோம்பேறி ஒருவன் இருந்தானாம்.
அவனுக்கு சம்பாதித்துப் போடுவதெல்லாம் அவன் தாய்தான். உணவு உண்பதைக்கூட படுத்துக்கொண்டேதான் செய்வானாம்.

சிறு சிறு வீட்டு வேலைகள் செய்து, அதில் கிடைக்கும் வருமானத்தில் மகனுக்கு சோறாக்கிப் போட்டார் அந்த தாய்.

அப்படி ஒரு கப்பல் மாலுமி வீட்டில் வேலை செய்யும்போது, மாலுமியிடம் தன் மகனின் கதையைச் சொல்கிறார். அவனைத் திருத்துவதற்கு வழி கேட்கிறார். அதற்கு மாலுமி, “உங்கள் மகனை எப்படியாவது எழுப்பி அவன் கையில் ஒரே ஒரு படி கேழ்வரகைக் கொடுத்து என்னிடம் கொடுக்கச் சொல்லுங்கள்” என்றார்.

தாயும் கஷ்டப்பட்டு மகனை எழுப்பி, கெஞ்சி அவனிடம் கேழ்வரகைக் கொடுத்து அனுப்பினார். அவனும் மிகவும் சலிப்புடன் எடுத்துவந்து மாலுமியிடம் கொடுத்தான்.
அதை பத்திரமாக பாத்திரத்தில் போட்டு எடுத்துக் கொண்டார் மாலுமி. அவர் போகும் நாட்டில் எல்லாம் அந்த கேழ்வரகை என்ன செய்ய முடியும் என்று யோசனையிலேயே திரிந்தார். யாரும் அதை வாங்குவதாக இல்லை.

கடைசியாக ஒரு நாட்டில் நடந்த சந்தையில் அந்தக் கேழ்வரகைக் கொடுத்து, ஒரு நோஞ்சான் குரங்கை வாங்கினார் மாலுமி.

அன்றிரவு கப்பல் ஒரு தீவில் ஒதுங்கியபோது, தீவில் வசிப்பவர்கள் மாலுமி மற்றும் இதர வியாபாரிகளை சிறைப்பிடித்து கட்டிப்போட்டார்கள். காலையில் அவர்களின் இஷ்ட தெய்வத்துக்கு அனைவரையும் பலி கொடுக்கத் திட்டமிட்டார்கள்.

மாலுமியும் வியாபாரிகளும் என்ன செய்வதென்று தவித்தபோது அந்தக் குரங்கு அவர்கள் கட்டை அவிழ்த்து விட்டது. அனைவரும் கப்பலில் ஏறி உயிர் தப்பினார்கள்.

இங்கே கேழ்வரகைக் கொடுத்த இளைஞன் தூங்கிக் கொண்டே இருந்தான். மூன்று மாதங்கள் கழித்து அவனைத் தேடிவந்த வியாபாரிகள் அவனுக்கு நன்றி சொல்லி பொற்காசுகளாகக் கொட்டிக் கொடுத்தனர். இளைஞன் மகிழ்ச்சியில் திகைத்தான்.

“ஒரே ஒருநாள் தூக்கத்தை விட்டு நடந்து சென்று கேழ்வரகை கொடுத்த சிறிய உழைப்புக்கே இவ்வளவு பொருளும் பாராட்டும் கிடைக்கிறாது என்றால், வாழ்க்கையில் சுறுசுறுப்பாக உழைத்தால் நன்கு முன்னேறலாம்” என்று மனம் திருந்தி, உழைப்பின் அருமையைப் புரிந்து கொண்டான்.
1,680003
கதை #S1001
சேமிப்பு

“அப்பா. சேமிப்புன்னா என்னப்பா?”
ஒரு பள்ளி மாணவன் அப்பாவிடம் கேட்டான். அவர் சேமிப்பு பற்றி விளக்கிச் சொல்ல சொல்ல ஆர்வத்துடன் கேட்டுக் கொண்டான்.

“சேமிக்க நினைத்தால் அதை ஒத்திப் போடக் கூடாது. உடனே ஆரம்பிக்க வேண்டும். அதுதான் சேமிப்பின் முக்கியமான விதி” என்று முடித்தார் அப்பா.
“நாளையிலிருந்து ஆரம்பிக்கிறேன் அப்பா” என்றான் மகன்.

“இன்றிலிருந்து ஆரம்பிக்கிறேன்” என்று சொல்லாமல், “நாளையிலிருந்து ஆரம்பிக்கிறேன்” என்று மகன் சொன்ன பதிலில் இருந்தே அவனுடைய சோம்பல் மனநிலையை அப்பா புரிந்து கொண்டார். அவனுக்கு நல்ல பாடம் புகட்ட நினைத்தார்.

அன்றிலிருந்து வாரம் ஒருமுறை மேலோட்டமாக மகனிடம் சேமிப்பு பற்றிக் கேட்பார். “என்னடா, சேமிப்பு ஆரம்பிச்சிட்டியா?”

“நாளைக்குத் தொடங்கிடுவேன் அப்பா” என்று மகனும் உடனே சொல்லிவிடுவான். அதற்கு மேல் எதுவும் சொல்லாமல், “சரி. சரி” என்று அப்பாவும் போய்விடுவார்.

இப்படியே நாட்கள் போய்க் கொண்டிருந்தன. ஒருநாள் அப்பாவும் மகனும் மாலை வேளையில் தோட்டத்தில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். அவன் அம்மா அவித்த பட்டாணியை வெங்காயமும் மாங்காயும் போட்டு கொண்டு வந்திருந்தார்.

அதைப் பார்த்த உடன் மகன் வாங்கி ஆவலோடு சாப்பிட்டான்.

“மகனே, இது ஒரு ஸ்பெஷல் பட்டாணி தெரியுமா?” என்றார் அப்பா.

“பட்டாணியில் என்ன ஸ்பெஷல்?” என்று மகன் கேட்க, அப்பா தொடர்ந்தார்.

“ஆறு மாதங்களுக்கு முன்பு, உன்னை சேமிக்க ஆரம்பிக்கச் சொன்னேன். “நாளையிலிருந்து ஆரம்பிக்கிறேன்” என்றாய். அன்றைக்கு மறுநாள் முதல், ஒவ்வொரு நாளும் ஒரு பட்டாணியை எடுத்து ஒரு டப்பாவில் போட்டுக்கொண்டே வந்தேன். அந்த பட்டாணி சிறுகச் சிறுக சேர்ந்து ஒரு கையளவையும் தாண்டிப் போயிற்று. அதைத்தான் அவித்து உன் அம்மா கொடுத்திருக்கிறார்.”

இதைக் கேட்ட மகன், தன் சோம்பேறித்தனத்தை நினைத்து வெட்கப்பட்டான்.

அப்பா தொடர்ந்தார்.“ஒரு கிராமுக்கும் குறைவான எடை உடைய பட்டாணியே சிறுகச் சிறுக சேர்க்கும்போது இவ்வளவு வருகிறதென்றால், நீ பணத்தை சேர்த்திருந்தால் இந்நேரம் ஓரளவுக்கு நல்ல தொகையாக கிடைத்திருக்கும். இப்போதாவது சேமிப்பை உடனே தொடங்க வேண்டும் என்று புரிந்து கொள்” என்றார் அப்பா.

சேமிப்பை ஒத்திப் போடக் கூடாது என்ற உண்மையைப் புரிந்து கொண்ட மகன், இதோ பட்டாணியை சாப்பிட்டு முடித்ததும் சேமிப்பை ஆரம்பிக்கப் போகிறான்.
நீங்கள் எப்போது ஆரம்பிக்கப் போகிறீர்கள்?
2,090002
கதை #989
வெறுமே மன்னிப்பு
அந்த வீட்டில் ஒரு பிறந்தநாள் கொண்டாட்டம். வீட்டு வேலை செய்யும் 60 வயது பெண்மணி, அந்த வீட்டுக்காக உற்சாகமாக உழைத்தார். விருந்துக்கு வருபவர்களுக்காக ஒற்றை ஆளாய் நின்று ஏராளமான சப்பாத்திகளை தேய்த்து சுட்டுக் கொடுத்தார். அந்தக் குடும்பத்துக்கு மிகுந்த மகிழ்ச்சி.
வேலைகளை முடித்துவிட்டு, வீட்டுக்குச் சென்று குளித்துவிட்டு நல்ல சேலை அணிந்து வருவதாகக் கூறிச் சென்றார். வீடு சென்று குளித்து தன்னிடம் இருப்பதில் நல்ல சேலையை எடுத்துக் கட்டிக் கொண்டார். பூ வைத்துக் கொண்டார். மகன் வைத்திருந்த வாசனை திரவியத்தை போட்டுக் கொண்டார். உற்சாகமாய் நடந்து வந்தார்.
அந்த சிறிய சாலையில் ஓரமாக நின்றிருந்த ஒரு காரைக் கடக்கும்போது அவர்மீது ஏதோ பட்டது. திரும்பிப் பார்த்தால் சிறுவன் ஒருவன் பாக்கை மென்று காருக்கு வெளியே துப்பிக் கொண்டிருந்தான். அது இவர் மேல் பட்டது. கையிலும் ப்ளவுஸிலும் பட்டுவிட்டது.
“ஏன் இப்படிச் செய்தாய்?” என்று சலித்துக் கொண்டார்.
சிறுவன் பதறிவிட்டான். “பாட்டி! சாரி பாட்டி, நான் கவனிக்கலை.”
“உன் அப்பா அம்மா யாருமில்லையா?”
“அப்பா அருகில் உள்ள கடைக்குச் சென்றிருக்கிறார்.”
“சரி, கவனமாய் இரு. இப்படி அடுத்தவரை தொந்தரவு செய்யாதே. பொது இடங்களில் எதையும் துப்பாமல் கவனமாக இரு” என்று சொல்லிவிட்டு நடந்தார்.
ஒரு நிமிடத்தில், “அம்மா, நில்லுங்கம்மா” என்ற குரல் கேட்டது. திரும்பிப் பார்த்தால், இவர்மீது தெரியாமல் துப்பிய சிறுவனும், அவன் அப்பாவும் ஓடி வந்து கொண்டிருந்தார்கள். நின்றார். அருகில் வந்ததும், “அம்மா! நான்தான் இந்தப் பையனோட அப்பா. என் பையன் உங்க மேல துப்பிட்டான்னு சொன்னான். அதான் ஓடிவந்தேன்.”
“பரவாயில்லைங்க! அவன் தெரியாமதானே செய்தான்.”
“இல்லம்மா! அவன் தெரியாம செய்திருக்கலாம். அதுக்கு மன்னிப்பும் கேட்டிருக்கலாம். ஆனா ஒரு தப்பை செய்துட்டு அதை நிவர்த்தி பண்ற வழி இருந்தும், சரி செய்யாம வெறுமே மன்னிப்பு கேக்கிறது சரியில்லைம்மா. அதை அவனுக்குப் புரிய வைக்கத்தான் கூட்டி வந்தேன்.” இப்போது அந்த சிறுவன் தன் கையில் இருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்தான். அப்பெண்மணியின் கையில் ஊற்றினான். தேய்த்து கழுவினான். இன்னும் கொஞ்சம் நீரை விட்டு அவர் கையையும் உடையையும் சுத்தமாக்கினான். சுத்தம் செய்ததும், அவன் அப்பா கையில் தயாராய் வைத்திருந்த டவலைக் கொடுத்தார். பெண்மணி துடைத்துக் கொண்டார்.
“என் பையன் செய்ததுக்கு இன்னொரு தடவை மன்னிப்பு கேட்டுக்கிறேன்மா” என்றார் அந்த அப்பா. வசதியாக இருந்தாலும், அவர்கள் திமிராக நடக்காமல் பணிவு காட்டியதைப் பார்த்து வணங்கினார் அந்தப் பெண்மணி. பிறகு பிறந்த நாள் விழாவுக்கு அவசரமாக நடை போட்டார். விழா ஏற்பாடு நடந்து கொண்டிருக்கும்போது திடீரென்று அந்த வீட்டுக்காரர், “எங்க முதலாளி வந்துட்டாரு” என்று வாசலுக்கு ஓடினார்.
தனக்கு சம்பளம் தரும் முதலாளிக்கு சம்பளம் தரும் முதலாளியைப் பார்க்க ஆர்வமுடன் வாசலை எட்டிப் பார்த்தார் பெண்மணி. அவர் வேறு யாருமல்ல, தன் மீது துப்பிய மகனை தண்ணீர் விட்டு துடைக்க வைத்து தனக்கு துண்டும் கொடுத்த நபர்தான் வந்து கொண்டிருந்தார். “அவர்தான் முதலாளியா” என்று ஆச்சர்யப்பட்டார்.
“எவ்வளவு பெரிய மனிதராக இருந்தாலும் எப்படி பிறரை மதித்து நடக்கிறார்” என்று நெகிழ்ந்தார். “இப்படி பிறர் மனதைப் புரிந்து நடப்பதால்தான் வாழ்க்கையில் இவ்வளவு பெரிய இடத்துக்கு முன்னேறி இருக்கிறார்” என்றும் நினைத்துக் கொண்டார்.
1,270000
கதை #988
ராஜாகிட்ட கதை சொல்லலாம்
ராஜா ஒருத்தர் இருந்தாரு. அவருக்கு கதை கேட்பது ரொம்ப பிடிக்கும். நாட்டு மக்கள் அவர்கிட்ட தினமும் புதுசு புதுசா கதை சொல்லிகிட்டே இருப்பாங்க. ராஜா அவங்ககிட்ட அப்புறம் என்னாச்சு? கதை அவ்ளோதானா? வேற கதை சொல்லுங்கன்னு கேட்டுகிட்டே இருந்தாரு! யாராலையும் மன்னரின் கதைப்பசிக்கு தீனி போட முடியல.
அரசருக்கு நாட்டுல கதை சொல்றவங்க குறைஞ்சிட்டாங்களோன்னு எண்ணம் வந்துருச்சி! அதனால ஒரு அறிவிப்பு வெளியிட்டார். யார் வேணுமுனாலும் ராஜாகிட்ட வந்து கதை சொல்லலாம். ராஜா எப்போ போதும் கதை சொல்றது நிறுத்துன்னு சொல்றாரோ அதுவரைக்கும் அவங்க விடாம கதை சொல்லணும். அப்படி கதை சொல்றவங்களுக்கு 1000 தங்க நாணயங்களை வெகுமதி தர்றதா அறிவிச்சார் ராஜா.
பல பேர் மன்னர்க்கிட்ட கதை சொன்னாங்க ஆனா யார்கிட்டயும் ராஜா கதை சொல்றது போதும்ன்னு சொல்லவேயில்லை. இன்னும் சொல்லு! அடுத்தது என்ன? ன்னு கேட்டுகிட்டே இருந்தாரு! கதை சொல்றவங்களோட முயற்சி தோல்வியிலதான் முடிஞ்சது.
ஒரு நாள் காலையில ஒரு விவசாயி ராஜாகிட்ட வந்து மன்னர் தன்னை நிறுத்துன்னு சொல்றவரைக்கும் நான் ஒரு கதை சொல்வேன்னு சொன்னார். மன்னரும் சரின்னு சொல்லிட்டு கதை கேட்க உட்கார்ந்தார். விவசாயி கதை சொல்ல ஆரம்பிச்சார்.
ஒரு காலத்துல ஒரு பெரிய வேட்டைக்காரன் இருந்தான். அவன்கிட்ட ஒரு பெரிய வலை இருந்தது. அவன் ஒரு பெரிய காட்டுக்குப் போயி அந்த வலையை விரிச்சான். மதியத்துலயே லட்சக்கணக்கான பறவைகள் அவன் விரிச்ச வலையில சிக்கிருச்சி. ஆனா அதிர்ஷ்டவசமா அந்த வலையில ஒரு சின்ன துளை இருந்தது. சிறகடிச்சு முதல் பறவை தப்பிச்சிருச்சு.
அப்புறம் என்னாச்சு? கேட்டார் ராஜா. சிறகடிச்சு இரண்டாவது பறவை தப்பிச்சிருச்சி! பிறகு? ன்னு கேட்டார் அரசர். சிறகடிச்சு மற்றொரு பறவை பறந்து சென்றதுன்னாரு விவசாயி! இப்படியே விவசாயி கதையை தொடர்ந்தார். ராஜா கேட்டுகிட்டே இருந்தாரு! விவசாயியும் மற்றொரு பறவை பறந்ததுன்னு சொல்லிகிட்டே இருந்தாரு! லட்சம் பறவைகள் பறக்கிற வரைக்கும் விவசாயி இப்படியே தான் சொல்லிகிட்டே இருப்பாருன்னு புரிஞ்சிருச்சி மன்னருக்கு. இறுதியா ராஜா விவசாயியை கதை சொல்றது நிறுத்துன்னு சொல்லி 1000 தங்க நாணயங்கள் பரிசா கொடுத்தார். மன்னர் அப்புறம் ஒருபோதும் இந்த மாதிரி சவாலை முன்வெக்கல!
1,220000
கதை #987
தப்பிப்பதற்கு என்ன வழி.?
ஒரு திருடனின் மகன், அவன் தந்தையிடம் தனக்கும் திருடுவதில் உள்ள ரகசியங்களைக் கற்று தரும்படிக் கேட்டான். அவனுடைய தந்தையும் அதற்கு ஒப்புக்கொண்டு அன்று இரவு ஒரு பெரிய மாளிகைக்குத் திருடுவதற்காக அவனை அழைத்துச் சென்றான். அந்த வீட்டில் குடும்பத்தினர் அனைவரும் உறங்கி கொண்டிருக்கையில், திருடன் அவன் மகனைத் துணிகள் நிறைந்த அறைக்குள் அழைத்துச் சென்றான். மகனிடம் அங்குள்ள துணிகளைத் திருடச் சொன்னான்.
அவனுடைய மகனும் தந்தையின் சொற்படி அங்கிருந்த துணிகளை எடுத்துக் கொண்டிருந்தான். அப்போது அந்தச் சிறுவனின் தந்தை மெதுவாக அறையின் வெளியே வந்து, பின் அவனை உள்ளே வைத்துப் பூட்டினான். பின்பு வீட்டில் உள்ளோரை எழுப்புவதற்காக, அந்த வீட்டின் வெளிப்புறம் வந்து கதவைத் தட்டிவிட்டு, வேகமாகத் தப்பி வீட்டிற்கு ஓடிவிட்டான்.
சிறிது நேரம் கழித்து, அவனது மகனும் வீடு திரும்பினான். பிறகு அழுது கொண்டே அவனுடைய தந்தையிடம், "அப்பா ஏன் அப்படிச் செய்தீர்கள்? நான் எதையும் திருடவில்லை, தப்பிப்பதற்கு என்ன வழி? என்று என் புத்திக் கூர்மையைச் செயல் படுத்துவதிலேயே நேரம் அனைத்தும் போயிற்று" என்று கதறி அழுதான்.
அவனது தந்தையும் சிரித்து கொண்டே, "மகனே, நீ கொள்ளைக்கலையில் முதல் பாடத்தைக் கற்று கொண்டாய்" என்று கூறினான்.
பயம் கொண்ட நிலையில், எவரொருவரும் செய்ய முடியாத காரியங்களையும் அவர்கள் தங்கள் வலிமை கொண்டு செய்து முடிப்பர். ஒருவரின் சொந்த அனுபவத்தினால் மட்டுமே எந்த ஒரு கடினமான செயலையும் எளிதில் செய்யக் கற்று கொள்ள முடியும்
1,270000
கதை #986
எதுக்கு இதெல்லாம்
ஒருவன் மீன் வாங்க மீன் சந்தைக்கு போனான். அவனும் ஒரு மீனை பிடிகிறவன் பிடித்த மீனை சந்தையில விக்கிறவன் தான். இன்னொரு மீன் வியாபாரி கிட்ட சொல்றான். இந்த மீன் நல்லா இருக்கு. பிரமாதமா இருக்கு. என்ன விலைக்கு கொடுப்பே?” ன்னு கேட்டான்.
அவன் ஒரு விலை சொல்றான். இவனும் மீன் வியாபாரி தான். இவனுக்கு தெரியும் என்ன விலை? என்று கூட “நீ அதிகமா விலை கேட்கிற இருந்தாலும் பரவில்லை! மீன் வாங்குறேன். ஆனா எனக்கு நீ உதவி செய்யணும்!” என்னன்னு கேட்டான்.
“நான் என் கையால எடுத்துட்டு பையில போட மாட்டேன். நான் தள்ளி நிற்பேன்! நீ என்ன பண்றன்னா நீ ஒவ்வொரு மீனா தூக்கி போடணும் நான் அதைப் பிடிச்சு பையில வச்சு கிளம்பிடுவேன்’ சொன்னான். ஏன்னு கேட்டான் வியாபாரி
வாங்குறவன் சொன்னான்.”வீட்டுக்கு போனா என் மனைவி நீ மீன் பிடிச்சியா? உன் கையால மீன் பிடிச்சியா? அப்படின்னு கேள்வி கேட்பாள். அதுக்கு தான் இப்படி பண்றேன்னு சொன்னான்! எனக்கு பொய் சொல்ல விருப்பமில்லை! அதனால தான் நீ தூக்கிப்போட்ட., நான் பிடித்து விடுவேன்! என் கையால பிடிச்ச மாதிரி ஆச்சு!
அதுக்கு வியாபாரி சொன்னான். எதுக்கு இதெல்லாம்? உனக்கு திறமை இருந்துச்சுன்னா! தூண்டில் போட்டு பிடி! இல்லைன்னா தெம்பு இருந்தா கடலோ அத்துலையோ படகு கொண்டு போயிட்டு வலை போட்டு மீன் பிடி! நீ தெம்பும் திறமை உள்ளவன் மாதிரி அடுத்தவங்களை ஏமாற்றுவதில் என்ன நன்மை இருக்கு”
நீங்க வருத்தப்படாதீங்க! பெரிய கஷ்டம் என்னன்னா உண்மையான புகழ் திறமை தகுதி இல்லாத பல பேர் மத்தவங்க ஏற்றுக்கொள்ளும்படி என்னென்ன செய்யமுடியுமோ. அத்தனையும் பண்றாங்க சினிமா, போட்டோ வீடியோ எல்லாம் எடுத்து போடுறாங்க புத்தகம் நியூஸ் பேப்பர்ல காசு கொடுத்து எழுதி வைக்கிறாங்க அதே மாதிரி தான் இதுவும் அப்படின்னு சொன்னான் அந்த வாங்குறவன்.
1,400000
கதை 985
நீங்களும் கோடீஸ்வரர் ஆகலாம்
இளைஞன் ஒருவன் பெரும் சோம்பேறி. அவன் கல்வியறிவு சிறிதே உடையவன். ஆனால் உலகறிவு கொண்டவன். ஓய்வெடுக்கும் வயதிலும் உழைக்கும் இளைஞனின் தாய் தந்தையர் வயதானவர்கள். இவனது சோம்பேறி தனத்தை போக்க நினைத்த தாய் தந்தையர் இளைஞனிடம் வந்து நீ உனக்கென்று ஒரு தொழிலை தேடி உழைத்து வாழ வேண்டும் இல்லையெனில் சொத்தில் உனக்கு பங்கு கிடையாது என்று கூறினர்.
இளைஞனும் நான் விரைவாக எனக்கென்று ஒரு தொழிலை அமைத்து கொண்டு வருகிறேன் என்று கூறி வீட்டை விட்டு வெளியே வந்து விட்டான். இளைஞன் பல இடங்களில் வேலை தேடினான். சில இடங்களில் வேலை கிடைத்தது இவனது சோம்பேறி தனத்தை பொருக்க முடியாமல் அனைவருமே இளைஞனை வேலையில் சேர்த்தே நாளே வேலையை விட்டு அனுப்பி விட்டனர். பல இடங்களில் முயன்றும் இதே நிலை தான்.
அப்பொழுது தான் இளைஞனின் உள்ளத்தில் ஒரு யோசனை கிட்டியது. சுற்றுலா பயணிகள் அதிகம் வந்து செல்லும் ஒரு இடத்தில் ஒரு தொட்டி அளவிற்கு குழி தோண்டி அதில் முழுவதும் தண்ணீர் நிரப்பி அதன் அருகில் பெரிய பலகையில் இது ஒரு மந்திர கிணறு இந்த கிணற்றினுள் ஒரு ரூபாய் போட்டு நீங்கள் எது வேண்டினாலும் அது கூடிய விரைவில் நிறைவேறும் என்று அந்த பலகையில் எழுதி வைத்து விட்டு அதனருகிலே மறைவாக அதை கண்கானித்த படியே இருந்தான்.
அங்கு வந்து செல்பவர்களில் நம்பிக்கை உடையவர்கள் அந்த கிணற்றில் ஒரு ரூபாய் போட்டு வேண்டினர். இதில் நம்பிக்கை இல்லாதவர்களும் ஒரு ரூபாய் தானே போட்டு தான் பார்ப்போம் வேண்டியது நிறைவேறினால் அது சந்தோசம் இல்லைையெனில் ஒரு ரூபாய் தானே போனால் போகட்டும் என்று அனைவரும் அதில் ஒரு ரூபாய் போட்டு வேண்டி சென்றனர். இளைஞன் காலை முதல் இரவு வரை அந்த கிணற்றையே கண்காணித்து விட்டு இரவானதும் அதில் இருக்கிற காசுகளை சேகரிப்பதும் என இப்படியே நாட்கள் ஓடியது. சில மாதங்களிலேயே இளைஞன் பல ஆயிரம் ரூபாய்க்கு சொந்தக் காரன் ஆனான். ஒரு சில வருடத்திலேயே லட்சாதிபதி ஆனான். அந்த பணத்தை வைத்து சொந்தமாக பல தொழிலை தொடங்கினான் சில வருடம் கழித்து பல கோடிகளுக்கு அதிபதியானான்
ஒரு ரூபாய் ஆனாலும் அது கோடியில் ஒன்று. அது பல கோடிகளை சேர்க்க வல்லது
3,130000
கதை 984
கடவுள் புகைப்படம் எடுக்கிறார்
ஒரு சிறுமி தினமும் பள்ளிக்கு நடந்து சென்று வந்தாள். அன்று காலை வானிலை கேள்விக்குறியாக இருந்த போதிலும், மேகமூட்டமாக இருந்த போதிலும், அவள் ஆரம்பப் பள்ளிக்கு செல்லத் தொடங்கினாள். மதிய வேளையில், இடி மின்னலுடன் காற்று வீசியது.
புயலால் தன் மகள் பயந்துவிடுவாளோ அல்லது காயமடைவாளோ என்று கவலைப்பட்ட குழந்தையின் தாய், தன் காரில் ஏறி, பள்ளிக்கு செல்லும் வழியில் சென்றார்.
அவள் அவ்வழியில் செல்லும் போது, அவளுடைய சிறிய மகள் மகிழ்ச்சியுடன் நடப்பதைக் கண்டாள்; ஆனால் ஒவ்வொரு மின்னலின் போதும் அந்த குழந்தை நின்று, நிமிர்ந்து பார்த்து, சிரித்தாள்.
காரை நிறுத்திய தாய், குழந்தையை தன்னுடன் ஏறுமாறு அழைத்தாள். அவர்கள் பள்ளியை நோக்கிச் செல்லும் போது, அந்த குழந்தை ஒவ்வொரு மின்னலையும் நோக்கி மறுபடியும் புன்னகைத்தாள்.
தாய் தன் குழந்தையை நோக்கி, “நீ என்ன செய்கிறாய்?” என்று கேட்டாள்.
அதற்கு குழந்தை, “கடவுள் என்னை புகைப்படத்தை எடுப்பதால், நான் புன்னகை புரிகிறேன்” என்றாள்
2,300000
கதை 983
கடவுள் பார்த்துக்கொள்வார்

ஒரு ஆறு வயது சிறுமியும் தன் தாயாருடன் கடைக்கு சென்று பொருட்களை வாங்கி வந்தார்கள். வரும்போது மழை பலமாகப் பெய்து கொண்டிருந்தது. ஒரு கடைக்கு முன்புறம் உள்ள இடத்தில் ஒரு சிலர் ஒதுங்கி நின்றனர். தாயும் சிறுமியும் அவர்களோடு ஒதுங்கி நின்றனர்

சிலர் பொறுமையுடனும், மற்றும் சிலர் கோபத்துடனும் இயற்கையை சபித்துக் கொண்டிருந்தனர். அந்த சிறுமிக்கு மழை என்றால் மிகவும் பிடிக்கும். மெய்மறந்து மழையின் சத்தத்தை அனுபவித்துக் கொண்டு, இயற்கையின் அழகை பார்த்துக் கொண்டிருந்தாள்.

சிறுமி அவள் அம்மாவிடம் “நாம் மழையில் ஓடிப் போகலாமா?” எனக் கேட்டுக் கொண்டிருந்தாள். அதற்கு “வேண்டாம், மழை சற்றுக் குறைந்த பிறகு போகலாம்” என்று அம்மா கூறினாள். ஒரு வினாடி ஆலோசித்த பிறகு மறுபடியும் சிறுமி தன் விருப்பத்தை அம்மாவிடம் கூறினாள். அதற்கு அம்மா “நனைந்து விடுவோம்” என்று பதிலளித்தார்.

சில நிமிடங்களுக்குப் பிறகு சிறுமி அம்மாவை அணைத்துக் கொண்டு “காலையில் வேறு மாதிரியாகச் சொல்லிவிட்டு, தற்பொழுது வேறு மாதிரியாக நடந்து கொள்கிறீர்களே” எனக் கூறினாள். அம்மாவுக்கு அவள் சொல்வது புரியவில்லை. அவளிடம் என்னவென்று கேட்ட போது, அவள் சொன்ன வார்த்தைகள் உணர்ச்சிப் பூர்வமாக இருந்தன. அன்று காலை அவள் அப்பாவிற்கு இருக்கும் கேன்சர் நோயைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்த போது, கடவுள் நினைத்தால் எதையும் கடக்க உதவி செய்வார் என்று சொல்லிக் கொண்டு இருந்ததை ஞாபகப் படுத்தினாள்.

கூட்டத்தில் இருந்தவர்கள் எல்லோரும் மெளனமாக இருந்தார்கள். மழைச்சத்தம் தவிர வேறு ஒன்றும் கேட்கவில்லை. சிறுமியின் வார்த்தைகள் எல்லோரையும் யோசிக்கத் தூண்டியது. அம்மா யோசனை செய்தாள். சிறுமியின் வார்த்தைகள், வாழ்கையின் உறுதி மொழியாகத் தென்பட்டன. அவளுக்கு நம்பிக்கை வந்து விட்டது. அவள் உடனடியாகச் சிறுமியிடம், “மழையில் ஓடி விளையாடலாம், கடவுள் எல்லாவற்றையும் பார்த்துக் கொள்வார்” எனக் கூறினாள். இருவரும் மழையில் ஓடினார்கள்.
7,910000
கதை 982
புத்திசாலித்தனம்

ஒரு நாள் குருவிடம் சீடர் ஒருவர், ”ஐயனே, அறிவுக்கும் புத்திசாலித்தனத்துக்கும் என்ன வேறுபாடு?” என்று கேட்டார். உடனே அவர், ”அதோ இருக்கிறாரே ஒரு கிழவர், அவரிடம் சென்று இங்கிருந்து கிராமத்துக்குப் போய்ச் சேர எவ்வளவு நேரமாகும் என்று கேட்டு வா!” என்றார்.

சீடரும் அந்தக் கிழவரிடம் சென்று அவ்வாறே கேட்டார். அவர் பதிலேதும் கூறவில்லை. திரும்பத் திரும்பக் கேட்டார். பலன் இல்லை. கிழவருக்குப் புத்திசுவாதீனம் இல்லையோ என்று நினைத்து, வந்த வழியே திரும்பிச் சில அடிகள் எடுத்து வைத்தார் அந்தச் சீடர்.

உடனே கிழவர் அவரை அழைத்து, ”நீ பத்து நிமிடங்களில் கிராமத்தை அடையலாம்!” என்றார்.

“நீங்கள் ஏன் இந்தப் பதிலை நான் கேட்டவுடன் கூறவில்லை?” என்று சந்தேகத்துடன் கேட்டார் சீடர்.

“நீ எவ்வளவு வேகமாக நடக்கிறாய் என்பதைப் பார்க்காமல் எப்படியப்பா, நீ கிராமத்தை எவ்வளவு நேரத்தில் அடைவாய் என்பதைக் கூற முடியும்?” என்று திருப்பிக் கேட்டார் அந்தக் கிழவர்.

சீடர் வியப்பும் மரியாதையுமாக குருவிடம் வந்து நடந்ததைக் கூறியதும் குரு ”அதற்குப் பெயர்தான் புத்திசாலித்தனம்!” என்றார்.
5,920000
கதை #1000
நான் அடைந்த ஞானம்

ஒரு ஞானி, தன் அன்றாட வேலைகளில் ஈடுபட்டிருந்தார். அவரை கண்ட ஒருவர், "நீங்கள் ஞானம் பெற்றவர் அல்லவா? அப்படியிருந்தால், ஏன் இன்னும் சாதாரண வேலைகளை செய்கிறீர்கள்?" என்று கேட்டார்.

ஞானி புன்னகைத்து, "முன்பும் இப்போதும் நான் செய்யும் வேலைகளுக்கு இடையே மடுவும் மலையும் உள்ள வித்தியாசம் இருக்கிறது," என்றார். "முன்பு, சாப்பிடும்போது, என் மனம் வேறு எங்கோ ஓடும். உணவை சுவைக்காமல், கவலைகளிலும் எண்ணங்களிலும் மூழ்கி சாப்பிடுவேன். அப்போது, உணவே எனக்கு நஞ்சாக மாறும்.

ஆனால் இப்போது, உணவை தயாரித்தவர்களுக்கும், எனக்கு உணவளித்த கடவுளுக்கும் நன்றி சொல்லி, ஒவ்வொரு கவளத்தையும் ரசித்து சாப்பிடுகிறேன். அந்த நேரத்தில், உணவின் சுவையை மட்டும் கவனிக்கிறேன். இதனால், அது எனக்கு அமிர்தமாக மாறுகிறது.

அதேபோல, வேலை செய்யும் நேரத்தில் வேலை மட்டுமே, தூங்கும் நேரத்தில் தூக்கம் மட்டுமே எனக்கு முக்கியம். எல்லா வேலைகளையும் ஒரே நேரத்தில் செய்ய முயற்சி செய்யாமல், ஒவ்வொரு செயலுக்கும் தனித்தனி நேரம் ஒதுக்குகிறேன். இதனால், ஒவ்வொரு செயலையும் சிறப்பாகவும், திறமையாகவும் செய்ய முடிகிறது. எல்லாவற்றையும் போட்டு குழப்பிக் கொள்வதில்லை. அந்தந்த நேரத்தில், அந்தந்த செயலை மட்டும் தவமாக செய்கிறேன்!

இதுதான் நான் அடைந்த ஞானம்," என்று ஞானி விளக்கினார்.
10,400000
கதை #999
திருடனும் ஞானமும்

ஒரு துறவி பாலைவனத்தில் தொலைந்து போய் வழி கண்டுபிடித்து கிராமத்தை போய் சேரும்போது நடு இரவாகி விட்டது. பாதி இரவு சென்று விட்டது. கடைகள் அனைத்தும் மூடிக் கிடந்தன. கதவுகள் அனைத்தும் அடைபட்டுக் கிடந்தன. ரோட்டில் மனித நடமாட்டமே இல்லை. நான் விசாரிப்பதற்காக யாராவது இருக்கிறார்களா என்று தேடினார். இறுதியில் சுவற்றில் உள்ளே நுழைவதற்காக கன்னம் வைத்துக் கொண்டிருந்த ஒரு திருடனை பார்த்தார்.

அவனிடம், “நான் தங்க இங்கே ஏதாவது இடம் இருக்குமா?” என்று கேட்டார் துறவி.

அதற்கு அவன் நான் ஒரு திருடன், “நீங்களோ ஒரு ஞானி போல தோன்றுகிறீர்கள். இப்போது தங்க இடம் கண்டு பிடிப்பது மிகவும் கடினம். ஆனால் நீங்கள் விருப்ப பட்டால் என் வீட்டிற்கு வரலாம், திருடனுடன் தங்க உங்களுக்கு எந்த ஆட்சேபணையும் இல்லையென்றால் என்னுடன் வாருங்கள்.” என்று அழைத்தான்.

துறவி கொஞ்சம் ஒரு வினாடி தயங்கி பின் ஒரு திருடன் துறவியை பார்த்து பயப்படாத போது ஏன் துறவி திருடனைக் கண்டு அஞ்ச வேண்டும். உண்மையில் அவன்தான் என்னைக் கண்டு அஞ்ச வேண்டும் என அவர் மனதில் பட்டது. அதனால் அவனிடம் “சரி நான் உன் வீட்டிற்கு வருகிறேன்” என்று சொன்னார். அவனுடன் சென்று அவன் வீட்டிலேயே தங்கினார்.

அவருடைய வீட்டில் ஒரு மாதம் வரை தங்கியிருந்தார். அந்த திருடன் மிகவும் அன்பானவனாக இருந்தான், மிகவும் அருமையான மனிதன். ஒவ்வொரு இரவும் அவன் திருடுவதற்கு கிளம்பும்போதும், “சரி, நீங்கள் உங்கள் வேலையை பாருங்கள், தியானம் செய்யுங்கள், ஓய்வெடுங்கள், நான் என் வேலையை பார்க்கப் போகிறேன்” என்பான். அவர் திரும்பி வரும்போது, “ஏதாவது கிடைத்ததா?” என்று கேட்பார் துறவி.

“இன்று எதுவும் கிடைக்கவில்லை. ஆனால் நாளை திரும்பவும் முயற்சிப்பேன்.” என்று கூறுவான். ஒருநாளும் அவன் நம்பிக்கையிழந்ததே இல்லை. ஒரு மாதம் முழுவதும் அவர் வெறும் கையுடன்தான் திரும்பி வந்தான். ஆனாலும் அவர் மகிழ்ச்சியாகத்தான் இருந்தான். அவர் “நாளை முயற்சி செய்வேன். கடவுள் விருப்பபட்டால் நாளை ஏதாவது கிடைக்கும். நீங்களும் எனக்காக பிரார்த்தனை செய்யுங்கள். இந்த ஏழைக்கு உதவி செய்யுங்கள் என்று நீங்கள் கடவுளிடம் சொல்லுங்கள்”. என்று அந்த துறவியிடம் திருடன் சொன்னான்.

துறவி பல வருடங்கள் தொடர்ந்து தியானம் செய்து கொண்டிருக்கையில் எதுவும் நிகழவில்லை. மிகவும் மனமுடைந்து நம்பிக்கையிழந்து இது எல்லாவற்றையும் நிறுத்திவிடலாமா என்று பல சமயங்களில் நினைத்ததுண்டு. கடவுள் என்று ஒருவரும் இல்லை, எல்லா பிரார்த்தனைகளும் மடத்தனம், எல்லா தியானங்களும் பொய் என்று நினைப்பார். அப்போது திடீரென அந்த திருடனின் நினைவு வரும். அவன் ஒவ்வொரு நாள் இரவும் கடவுள் விருப்பபட்டால் நாளை ஏதாவது கிடைக்கும் என்று கூறியதை நினைத்துக் கொண்டார்.

அதனால் மேலும் ஒருநாள் முயற்சி செய்து பார்க்கலாம் என்று நினைத்துக் கொண்டார். திருடன்கூட அந்த அளவு நம்பிக்கையுடனும் அந்த அளவு நம்பிக்கையுணர்வுடனும் இருக்கும்போது நான் ஏன் இன்னும் ஒருநாள் முயற்சி செய்து பார்க்கக் கூடாது என்று அவருக்கு தோன்றியது. பலமுறை இப்படி நிகழ்ந்திருக்கிறது. அந்த திருடனும் அவனைப் பற்றிய நினைவும் இன்னும் ஒருநாள் என்று முயல அவருக்கு உதவி செய்திருக்கிறது. ஒருநாள் அது நிகழ்ந்து விட்டது. அது நிகழ்ந்தே விட்டது. ஆம் அந்த துறவி ஞானம் அடைந்து விட்டார்.

அந்த திருடனின் வீட்டை விட்டும் அவனை விட்டும் பலஆயிரம் மைல் தூரம் அப்பால் இருந்தார். இப்போது அந்த திருடனை மனதில் மானசீக குருவாக எண்ணி அவன் வீட்டின் திசை நோக்கி வணங்கினர் அந்த துறவி.
9,270000
கதை #998
உறுதியானவர்கள்

ஒரு மிகப்பெரிய நிறுவனத்தின் விற்பனைப் பிரதிநிதிகளுக்கான கூட்டம் அதன் தலைமை அலுவலகத்தில் இரண்டு நாள்கள் நடந்தது. அதில் வெவ்வேறு நாட்டில் இருந்து விற்பனைப் பிரதிநிதிகள் வந்து கலந்து கொண்டார்கள் கூட்டம் நல்லபடியாக முடிந்தது. அடுத்த நாள் காலை தங்கியிருந்த ஹோட்டலிலிருந்து ஒரு டாக்ஸி பிடித்தார்கள். விமானநிலைய வாசலுக்கு வந்து சேர்ந்தார்கள். விமானம் கிளம்ப இன்னும் அரை மணி நேரமே இருந்தது. ஐந்து பேரும் டிக்கெட்டையும் தங்கள் லக்கேஜையும் எடுத்துக்கொண்டு வேக வேகமாக நடந்தார்கள்.

பாதையோரமாக ஒரு ஆப்பிள் கடை இருந்தது. அந்த ஐந்து விற்பனைப் பிரதிநிதிகளில் முதலில் சென்றுகொண்டிருந்தவர், பாதையோரமாக வைத்திருந்த அந்தக் கடையின் மேசையை இடித்துவிட்டார். மேசையின் மேல் ஆப்பிள்கள் அழகாக அடுக்கிவைக்கப்பட்டிருந்தன. இடித்ததில், ஆப்பிள்கள் தரையில் விழுந்து சிதறி உருண்டன. இடித்தவர் அதைப் பார்த்தார். விமானத்தைப் பிடிக்கவேண்டிய அவசரத்தை நினைத்தார். மேற்கொண்டு நடக்க ஆரம்பித்தார். மற்றவர்களும் அவருடன் வேகமாக நடந்தார்கள்.

அவர்களில் கடைசியாக வந்த ஒருவர் மட்டும் அப்படியே நின்றுவிட்டார். அந்த ஆப்பிள் கடையைப் பார்த்தார். கடைக்குக் காவலாக ஒரு சிறிய வயதுள்ள பெண் நிற்பது தெரிந்தது. அவள் எதையோ சொல்லி யாரையோ கூப்பிடுவதும் கேட்டது. அவருக்கு இதயத்தில் சுரீர்” என்று ஏதோ ஒரு வேதனை. அவ்வளவுதான். வேகமாக ஓடினார். முன்னால் ஓடிக்கொண்டிருந்த தன் நண்பர்களில் ஒருவரின் தோளைத் தொட்டுக் கூப்பிட்டார்.

நான் அடுத்த ஃப்ளைட்ல வர்றேன். ஊருக்குப் போனதும் என் வீட்டிற்கு போன் பண்ணிச் சொல்லிடு!”

“ஏம்ப்பா?”

“வந்து சொல்றேன். பை!”

இப்போது அந்த விற்பனைப் பிரதிநிதி திரும்பி நடந்தார். தெருவோர ஆப்பிள் கடைக்கு அருகே வந்தார். தரையெங்கும் ஆப்பிள்கள் சிதறிக்கிடந்தன. இப்போதுதான் அந்தப் பெண்ணை அவர் நன்றாக கவனித்தார். அந்தப் பெண் பார்வையற்றவள் என்பது தெரிந்து அதிர்ந்துபோனார். அவள் இரு கைகளையும் எதையோ தேடுவதுபோல நீட்டிக்கொண்டிருந்தாள். அவள் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்து கன்னங்களில் இறங்கிக்கொண்டிருந்தது. ஆப்பிள்கள் சிதறியிருப்பதையும் அந்தப் பெண்ணையும் அந்தப் பக்கம் போன பலர் பார்க்கத்தான் செய்தார்கள். ஆனால், நிற்காமல் நகர்ந்துகொண்டே இருந்தார்கள். அவரவருக்கு அவரவர் வேலை! ஒருவர்கூட அந்தப் பெண்ணுக்கு உதவி செய்ய முன்வரவில்லை.

அந்த விற்பனைப் பிரதிநிதி இளைஞர் தன் சுமையை ஓர் ஓரமாக வைத்தார். தரையில் மண்டியிட்டு, சிதறிக் கிடந்த ஆப்பிள்களில் ஒவ்வொன்றாகப் பொறுக்கியெடுத்தார். எல்லா ஆப்பிள்களையும் சேகரித்து மறுபடியும் அந்தத் தெருவோரக் கடை மேஜையில் அழகாக அடுக்கிவைக்க அந்தப் பெண்ணுக்கு உதவி செய்தார். அந்த ஆப்பிள்களில் சில அடிபட்டு, நசுங்கிப் போயிருப்பதையும் கவனித்தார். அவற்றைத் தனியாக ஒரு பழக்கூடையில் போட்டு வைத்தார்.

எல்லாம் முடிந்தது, மறுபடியும் அந்தக் கடை மேஜையில் பழங்கள் ஒழுங்காக அடுக்கப்பட்டுவிட்டன என்பதை உறுதி செய்துகொண்டார். தன் பர்ஸை எடுத்தார். அதிலிருந்து சில கரன்ஸிகளை உருவினார். “இந்தாம்மா. இதுல 2000 ரூபாய் இருக்கு. வெச்சுக்கோ. உன் கடையை நாங்க சேதப்படுத்தினதுக்கு நஷ்ட ஈடுன்னு நினைச்சுக்கோ! சரியா?” என்று சொல்லி அந்தப் பணத்தைக் கொடுத்தார். அந்தப் பெண் பணத்தை வாங்கிக்கொண்டாள். “ரொம்ப மோசமா உன் கடையை நாங்க சேதப்படுத்திடலைதானே. நான் கிளம்பவா?” அவர் தன் உடைமைகளை எடுத்துக்கொண்டபோது, அந்தப் பெண் கூப்பிட்டாள். “ஐயா!”

“என்னம்மா?”

“நீங்க கடவுளா?”

அவர் ஒரு கணம் பார்வையிழந்த அந்தப் பெண்ணின் கண்களை உற்றுப் பார்த்தார்.

“இல்லைம்மா. அவர் ரொம்பப் பெரியவர். நல்லவர், நம்ம எல்லாருக்கும் அன்பானவர், நம்மை நேசிப்பவர், நம்ம மேல அக்கறை காட்டுறவர், அவர் எங்களை மாதிரி ஒருபோதும் ஆப்பிள்களைத் தட்டிவிட மாட்டார். வரட்டுமா?”

அந்த இளைஞர் விமான நிலையத்தை நோக்கி மெதுவாக நடக்க ஆரம்பித்தார். அடுத்த விமானம் வருவதற்கு இன்னும் நிறைய நேரமிருந்தது.

"உறுதியானவர்கள் யாரையும் கீழே தள்ளிவிட மாட்டார்கள்; கீழே விழுந்தவர்களைத் கைதூக்கி விடுவார்கள்”
5,700001
கதை #997
விலை எவ்வளவு

ஒரு பணக்காரர் புதிதாக கட்டிய தன் வீட்டில் உள்ள பூஜை அறையில் சாமி சிலை வைக்க விரும்பினார். அந்த நகரில் இதற்காக ஒரு புகழ் பெற்ற கைவினை பொருட்கள் விற்கும் கடைக்கு சென்றார்.

அங்கே விதவிதமான பல்வேறு சாமி சிலைகளை பார்த்தார். இப்படி பார்த்துக் கொண்டிருக்கும் பொழுதுஅங்கே பார்ப்பவரை கையெடுத்து கும்பிட வைக்கும் அற்புதமான சிலை ஒன்றே ஒன்று மட்டும் விற்பனைக்கு வைக்கப்பட்டு இருந்தது. அதை வாங்க விரும்பிய அந்த பணக்காரர், அதன் விலையை அங்கிருந்த ஊழியரிடம் கேட்டார்.

“விற்பனையாளர் அதனுடைய விலை “40 ஆயிரம் ரூபாய்” என்றார்.

ஐந்து ஆயிரம் ரூபாய் விலையைக் குறைக்க சொல்லி பணக்காரர் நெடு நேரம் அர்த்தமில்லாமல் பேரம் பேசினார்.

“இது மிகுந்த வேலைப்பாடு மிக்க சிலை கீழே விலையைக் குறைக்க முடியாது” என்றார் ஊழியர்.

“உங்கள் முதலாளியைக் கூப்பிடுங்கள். அவரிடம் பேரம் பேசிக் கொள்கிறேன்” என்று வாடிக்கையாளர் சொல்ல, இன்னொரு முக்கியமான மிகுந்த நுணுக்கமும் வேலைப்பாடு உடைய ஒரு சிலையை செதுக்க ஆலோசனை சொல்லிக் கொண்டிருந்த கடையின் முதலாளியுமான சிற்பி அங்கே வந்தார்.

அவரிடம் அந்த “சிலையின் விலை எவ்வளவு?” என்று கேட்டார் அந்த பணக்காரர்.

“இதன் விலை 45 ஆயிரம் ரூபாய்” என்று சொன்னார் அந்த முதலாளி.

“உங்கள் ஊழியர் சொன்னதைவிட ஐந்து ஆயிரம் ரூபாய் அதிகமாக சொல்கிறீர்களே?” என்று கேட்டார் அந்த பணக்காரர்.

“சிலையின் விலை 40 ஆயிரம் ரூபாய் தான். ஆனால் நீங்கள் வீணடித்த நேரத்துக்கு ஐந்து ஆயிரம் ரூபாய் அதிகம் சேர்த்துள்ளேன்.” என்றார் முதலாளி
உடனே அந்த பணக்காரர் “இது அநியாயம்.” என்று சற்று கோபமாகவே சொன்னார்.

“இப்போது விலை 50 ஆயிரம் ரூபாய் ஆகிவிட்டது. இந்த சிலையை சிரிக்கவே செதுக்கவே ஒரு வாரம் ஆகியது. நீங்கள் எங்கள் நேரத்தை வீணடித்தால் விலை ஏறிக் கொண்டே போகும். ஒவ்வொரு விநாடியும் செய்ய வேண்டிய வேலை ஏராளம் இருக்கிறது” என்றார் முதலாளி.

நேரத்தின் மதிப்பை உணர்ந்து திருந்திய பணக்காரர், இப்போது மறுபேச்சு இல்லாமல் 50 ஆயிரம் ரூபாய் கொடுத்து அந்த சிலையை வாங்கிச் சென்றார்.
4,560003
கதை #996
முயற்சி திருவினையாக்கும்

ஒரு அழகிய குளத்தின் அருகில் இரண்டு தவளைகள் வசித்து வந்தன. அவர்கள் நல்ல நண்பர்களாக ஒன்றாக வளர்ந்து வந்தனர். ஒரு நாள் அவர்கள் வயலில் விளையாடிக் கொண்டு இருக்கும் போது மழை வந்தது. அப்போது பெரிய தவளை, “நண்பா மிகவும் மழை பெய்கிறது எனவே எங்கேயாவது ஒதுங்குவதற்கு இடம் தேடலாம்” என்றது.

அடுத்த தவளை அதற்கு சம்மதித்தது. மழையில் இருந்து ஒதுங்க அவர்கள் இருவரும் பக்கத்தில் இருந்த ஒரு வீட்டில் நுழைந்தன. அந்த வீட்டின் சமயல் அறைக்குள் நுழைந்தனர். புது இடம் மிகவும் குழப்பமாக இருந்ததால் இரு தவளைகளும் அங்கேயும் இங்கேயும் குதித்துக்கொண்டு இருந்தன.

திடீரென்று நிலைதடுமாறி நிறைய பால் இருந்த பெரிய பாத்திரத்திற்குள் இரு தவளைகளும் விழுந்தன. எவ்வளவோ முயற்சி செய்தும் அவர்களால் அந்த பாத்திரத்தில் இருந்து வெளியே வர முடியவில்லை. முயற்சியிலிருந்து தோல்வியடைந்த ஒரு தவளை இனி வெளியே வர முடியும் என்னும் நம்பிக்கையை இழந்தது.

இறுதியில் அந்த தவளை பாலில் மூழ்கி இறந்து விட்டது. மற்ற தவளை தன்னம்பிக்கையை இழக்காமல் பாலில் நீந்திக் கொண்டே இருந்தது. பாலில் விடாமல் குதித்துக் கொண்டு இருந்ததால் கடைந்த மோரில் வருவது போல பாலில் இருந்து மேலே வெண்ணெய் வந்தது. அதிசயப்பட்ட தவளை மீண்டும் முயற்சியை தொடர்ந்தது.

அதனால் கடினமான வெண்ணை மேலே வந்தது. தவளை பாத்திரத்தில் இருந்து வெளியே குதித்து பாதுகாப்பான இடம் தேடியது.
3,880000
கதை #995
கணவனும் மனைவியும்

கிராமம் ஒன்றில் ஒரு கணவனும் மனைவியும் ஒற்றுமையுடன் வாழ்ந்தார்கள். வறுமை அவர்களை வாட்டியது. ஒரு நாள் அந்த மனைவி, தன் கணவனைப் பார்த்து வீட்டில் உள்ள காளை மாட்டைக் கொண்டு போய்ச் சந்தையில் விற்று அதில் கிடைக்கும் பணத்தைக் கொண்டு ஒரு பெட்டிக்கடை வைத்தால் குடும்பத்தை நகர்த்தலாமே என்று யோசனை கூறினாள்.

அவனும் உடன்பட்டு மாட்டை ஓட்டிக்கொண்டு சந்தைக்குச் செல்லும் சாலையில் நடந்தான். வழியில் மாடு அங்குமிங்கும் மிரண்டு ஓடியது. அப்போது ஆடு ஒன்றை ஓட்டிக்கொண்டு வந்த ஒருவன்; அவனைப் பார்த்து; ஏனய்யா அந்த முரட்டுக் காளையுடன் சிரமப்படுகிறாய்! என்னிடம் கொடுத்துவிடு. அதற்குப் பதிலாக என் ஆட்டைத் தருகிறேன் என்றான். அறிவிற்குறைந்த அந்தக் கணவன் மாட்டைக் கொடுத்துவிட்டு ஆட்டை ஓட்டிக் கொண்டு சந்தையை நோக்கிச் சென்றான்.

எதிரேயொருவன் கையில் ஒரு பெட்டைக் கோழியுடன் வந்தான். அவன், அந்தக் கணவனை ஏமாற்றி கோழியென்றால் கையிலேயே தூக்கிக் கொண்டு போய்விடலாம் என்றதும், அதற்கும் அறிவிலிக் கணவன் ஒப்புக்கொண்டு ஆட்டை அவனிடம் கொடுத்துவிட்டுக் கோழியை வாங்கிக் கொண்டு சந்தைக்குப் புறப்பட்டான்.

போகும்போது ஒரு பிரியாணிக் கடை! அந்தக் கடைக்காரன் அந்தக் கோழியை வாங்கி அன்றைக்குச் சமைத்துவிடத் திட்டம் போட்டு அறிவிலிக் கணவனிடம் நயமாகப் பேசி, ஒரு குவளைத் தேநீருக்குக் கோழியை வாங்கிக் கொண்டான்.

அறிவிலிக் கணவன் தேநீரைக் குடிக்கும்போது அவன் வீட்டுக்குப் பக்கத்து வீட்டுக்காரன் அவனைப் பார்த்து, ''அட முட்டாளே! நானும் உன்னைக் கவனித்துக் கொண்டு தான் வருகிறேன். மாட்டைக் கொடுத்து ஆட்டை வாங்கினாய் - ஆட்டைக் கொடுத்து கோழியை வாங்கினாய், கோழியைக் கொடுத்து தேநீர் வாங்கிச் சாப்பிடுகிறாய் -இதையெல்லாம் உன் மனைவி அறிந்தால் உன்னைவிட்டு ஓடியேவிடுவாள்; அல்லது உன்னை அடித்துத் துரத்துவாள்'' என்றான்.

அறிவிலிக் கணவன், அப்படியெல்லாம் ஒன்றும் நடக்காது என் மனைவியை அறிவேன், என்றான். தான் சொல்வதுதான் நடக்கும் என்றான் பக்கத்து வீட்டுக்காரன். நடக்குமா நடக்காதா என்பதற்கு இருவரும் பந்தயம் கட்டிக் கொண்டனர்.

நடந்தால் அறிவிலிக் கணவன் அவனது வீட்டைப் பக்கத்து வீட்டுக்காரனுக்கு எழுதி வைத்துவிடவேண்டும். நடக்காவிட்டால் பக்கத்து வீட்டுக்காரன், அவனது பெட்டிக்கடையை அறிவிலிக் கணவனுக்குத் தந்துவிடவேண்டும். இப்படிப் பந்தயம் கட்டிக்கொண்டு இருவரும் வீட்டிக்குத் திரும்பினர்.

அண்டை வீட்டுக்காரன் அறிவிலியின் மனைவியிடம் அவளது கணவன் செய்த முட்டாள்தனமான காரியங்களையெல்லாம் சொல்லி, கடைசியில் உன் கணவன் மாட்டோடு சென்று ஒரு கோப்பைத் தேநீருடன் திரும்பியிருக்கிறான் என்று கேலி செய்தான்.

அறிவிலியின் மனைவியோ; தன் கணவனைப் பார்த்து "அந்தத் தேநீரையாவது வயிறு நிரம்பச் சாப்பிட்டீர்காளா?'' என்று அன்பொழுகக் கேட்டாள். பக்கத்து வீட்டுக்காரனுக்கு ஒரே அதிர்ச்சி. பந்தயத்தில் தோற்றுப்போய்ப் பெட்டிக் கடையை எழுதிக் கொடுத்துவிட்டான். மறுநாள் அந்த அறிவிலிக் கணவனை, அவன் பார்த்து, ''என்னடா உன் மனைவி உன்னைவிட முட்டாளாக இருக்கிறாளே?' என்று கேட்டான்.

''அப்படியொன்றுமில்லை. என்னதான் அவளுக்கு என்மீது வருத்தமோ, கோபமோ இருந்தாலும் அதைப்பிறர் முன்னால்காட்டிக்கொள்ளமாட்டாள். நானும் அப்படித்தான் நடந்து கொள்வேன். அந்தத் தைரியத்தில்தான் உன்னிடம் பந்தயம் கட்டினேன்'' என்றான் அந்த அறிவிலிக் கணவன்.
3,010000
கதை #994
அழகில்லாத கை

ஓர் ஊரில் ஒரு பெண்மணி இருந்தார். அவளுடைய வலது கை முழங்கையிலிருந்து விரல்கள் வரை வெண்மையும், கருமைமையும் கலந்து பார்ப்பதற்கு அருவருப்பாக இருந்தது. ஒரு நாள் அந்த பெண்மணியின் மகள் எட்டு வயதுச் சிறுமி, "அம்மா! நீ அழகாக இருக்கிறாய். ஆனால், உன்னுடைய வலதுகை பார்ப்பதற்கு விகாரமாய் இருக்கிறதே ஏன்?" என்று கேட்டாள்.

"அருமை மகளே! ஒரு பொருள் அல்லது உடல் உறுப்பு எவ்வாறு பயன்படுகிறது என்பதைக் கொண்டே அதன் அழகையும், விகாரத்தையும் மதிப்பிடவேண்டும்" என்றாள் தாய்.

"எனக்குப்புரிய வில்லை, புரியும்படி சொல்" என்று கேட்டாள் சிறுமி. "நீ கைக் குழந்தையாக இருந்தபோது தொட்டிலில் துங்கிக் கொண்டு இருந்தாய் திடீரென்று, ஒரு நாள் நம் வீட்டில் தீப்பற்றி எரிந்தது. அடுத்த வீட்டுக்காரர்கள் குழந்தை, குழந்தை என்று கத்தினார்களே தவிர, ஒருவரும் வீட்டினுள் சென்று, குழந்தையைக் காப்பாற்றத் துணியவில்லை.

"என் உயிரைப் பற்றி கவலை கொள்ளாமல், உள்ளே ஓடி, தொட்டியில் கிடந்த உன்னை தூக்கிக் கொண்டு வெளியேறும் போது, தீக்கொள்ளி ஒன்று என் வலதுகையில் விழுந்துவிட்டது. அது கொப்பளமாகி, வெண்மையும், கருமையுமாக இப்படி ஆகிவிட்டது. "இந்தக் கை ஒரு உயிரைக் காப்பாற்றியதே என்ற நினைப்பில் வெண்மை, கருமை விகாரம் எதுவும் எனக்குத் தோன்றவில்லை" என்றாள் தாய்.

"அம்மா! என்னைக் காப்பாற்றிய இந்தக் கை எப்படி இருந்தால் என்ன?" என்று தாயின் கையை முத்தமிட்டாள் சிறுமி.
2,720000

Showing 30 of 32 posts

மதிப்பீடு

உள்நுழைவு தேவை

Frequently Asked Questions

Tamil Stories தமிழ் கதைகள் டெலிகிராம் சேனல் எதைப் பற்றியது?+

Tamil Stories தமிழ் கதைகள் (@tamilstory) என்பது tgdio இல் உத்வேகம் தரும் மேற்கோள்கள் வகையில் பட்டியலிடப்பட்ட டெலிகிராம் சேனல். தரவரிசை, மதிப்பீடு, விமர்சனங்கள் மற்றும் சமீபத்திய இடுகைகளைப் பார்த்து சந்தா செய்வதற்கு முன் முடிவு செய்யுங்கள். தற்போது tgdio இல் சுமார் 5,532 சந்தாதாரர்கள் உள்ளனர்.

நான் Tamil Stories தமிழ் கதைகள் (@tamilstory) ஐ டெலிகிராமில் எப்படி சேர்வது?+

tgdio இல் சேனல் சுயவிவரத்தைத் திறந்து, Join / Open in Telegram மூலம் @tamilstory இல் இலவசமாக சந்தா செய்யுங்கள்.

Tamil Stories தமிழ் கதைகள் நல்ல உத்வேகம் தரும் மேற்கோள்கள் சேனலா?+

tgdio இல் சேருவதற்கு முன் Tamil Stories தமிழ் கதைகள் இன் மதிப்பீடு, விமர்சனங்கள், தரவரிசை மற்றும் இடுகைகளைப் பாருங்கள். தற்போது tgdio இல் சுமார் 5,532 சந்தாதாரர்கள் உள்ளனர். ஒத்த உத்வேகம் தரும் மேற்கோள்கள் சேனல்களுடன் ஒப்பிடுங்கள்.

Tamil Stories தமிழ் கதைகள் புள்ளிவிவரங்களையும் இடுகைகளையும் எங்கே பார்ப்பது?+

tgdio இல் @tamilstory பக்கத்தைத் திறங்கள் — சந்தாதாரர் புள்ளிவிவரங்கள், தரவரிசை, மதிப்பீடு மற்றும் இடுகைகள். Stats இணைப்பில் வளர்ச்சி விளக்கப்படம் பாருங்கள்.